வாழைப்பூவில் சந்தேகம்

வாழைப்பூவை சுத்தம் செய்வது எப்படி தோழிகளே? அதில் நடுவில் உள்ள ஜவ்வை மட்டும் நீக்கினால் போதுமா அல்லது அதை சுற்றி உள்ள இதழ்களையும் நீக்க வேண்டுமா? தெரிந்தவர்கள் விளக்கமாக கூறவும்?

By

JP

வாழைப்பூவை சுத்தம் செய்வது எப்படி ?

By
JP

"கலங்கிய கண்களை நேசி....
ஆனால் நேசித்த கண்களை கலங்க விடாதே".

JP

------up----

"கலங்கிய கண்களை நேசி....
ஆனால் நேசித்த கண்களை கலங்க விடாதே".

JP

வாழைப்பூவில் நடுவில் உள்ள நரம்பையும், பூவின் வெளிப்பக்கம் ப்ளாஸ்டிக் பேப்பர் போல உள்ள ஒரு சிறு இதழையும் நீக்கவேண்டும். எல்லாப் பூக்களையும் சுத்தம் செய்ததும் நறுக்கி, மோரில் அல்லது தண்ணீரில் போட்டுவைக்கவேண்டும். அப்போதுதான் சமையலுக்கு உபயோகிக்கும் வரை கறுக்காமல் இருக்கும்.

how to clean banana flower-என்று கூகுளில் தேடிப் பாருங்க, யுடியூப்-ல க்ளியரான வீடியோக்கள் பல இருக்கின்றன! :)

அன்புடன்,
மகி

http://www.arusuvai.com/tamil/node/12541 அதிரா வாழைப்பூவை வெட்டிக்காட்டியது போல தான் நாங்கள் ஸ்ரீலங்காவில் வாழைப்பூவை வெட்டுவோம்

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்
"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

அதிரா வெட்டிக் காட்டினது வாழைப்பொத்தி எல்லோ!

இவங்கள் பொத்தியை ஒவ்வொரு மடலாகப் பிரித்து உள்ளே இருக்கிற பூக்களை எடுத்து அதைச் சுத்தம் செய்கிற விதம் பற்றிக் கதைக்கினம்.

‍- இமா க்றிஸ்

ஹாய் இமா,

நன்றி

"இந்தியாவில் இருக்கும் சில மக்கள் வாழைபொத்தியை தான் வாழைப்பூ என்று அழைப்பார்கள் எனவும் அத்துடன் பலருக்கு இதனை எப்படி சமைப்பது என்று தெரியாது எனவும் நான் கேள்விப்பட்டேன் ஆகவே தான் அதிராவின் குறிப்பில் உள்ள வாழைப்பொத்தி வெட்டும் முறையை கூறினேன்".

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

//வாழைபொத்தியை தான் வாழைப்பூ என்று அழைப்பார்கள் // ஆமாம், உண்மைதான்.

‍- இமா க்றிஸ்

அன்பு இமா, அன்பு துஷ்யந்தி,

இந்த லிங்க்ல் அதிரா வாழைப்பூவை நறுக்கியிருப்பது பாத்து ரொம்ப ஆச்சரியமாக இருக்கு எனக்கு!!!

இதுவரைக்கும் இப்படி நறுக்கி சமைப்பாங்கன்னு கேட்டதேயில்லை. இங்க எல்லாம் வாழைப்பூவின் ஒவ்வொரு மடலையும் எடுத்துட்டு, அதுக்குள்ள இருக்கும் பூக்களையுமே - மேல ப்ளாஸ்டிக் மாதிரி இருக்கும் தோல் மற்றும் ஒவ்வொரு பூ இதழிலும் உள்ளே இருக்கும் நரம்பை(கள்ளன் என்று சொல்வாங்க)எடுத்துட்டு, அப்புறம் நறுக்குவோம்.

நறுக்கினதையும் - மோர் கலந்த தண்ணீரில் போட்டு வச்சு, அப்புறம் வேக வைப்போம்.

அதிரா காண்பித்திருப்பது மாதிரி நறுக்குவதென்றால் - ரொம்ப ரொம்ப ஈஸியாக இருக்கும் போல இருக்கே. மேலே இருக்கும் மடலையும் சேர்த்து நறுக்கினால் - நல்லா வேகுமா.

கொஞ்சம் சந்தேகம் க்ளியர் பண்ணுங்க ப்ளீஸ்.

அன்புடன்

சீதாலஷ்மி

ஹாய் சீதாலக்ஷ்மி.

நீங்கள் அதிராவின் குறிப்பின்படி செய்துபாருங்கள் கறி சுவையாக வரும் அத்துடன் வாழைப்பூவில் வறை,வடை ஆகியவையும் செய்யலாம்.நீங்கள் கூறியபடி செய்வதானால் ஒரு கறிக்கு நிறைய வாழைப்பூ தேவை அத்துடன் வேலையும் கூட ஆனால் நாங்கள் செய்வது போல செய்தால் இலகு அத்துடன் கறி நன்றாக வேகும்

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

ஹாய் சீதாலக்ஷ்மி...

ஊரில் அதிராவின் குறிப்பில் காட்டியுள்ளபடி தான் வாழைப்பொத்தி அரிவோம். 'அரிவது' கூட இல்லை. ;) 'கொத்துறது' என்றுதான் சொல்லுறனாங்கள்.
(எனக்கு ஒரு டவுட் வந்தது. அட்மின் தான் அதிராவின் குறிப்பில் பொத்தியைப் பூவாக்கி இருப்பார் என. ;)) அதுதான் நடந்திருக்கிறது. என் ஒரு குறிப்பில இருந்த மா, மாவு ஆனதை இன்னும் மறக்கேல்ல நான்.)
வெளியே உள்ள ஒன்றிரண்டை மடல்களை நீக்கிவிடுவோம். நான்காவது ஸ்டெப்பில்... நீரில் ஒரு ஈர்க்கை வைத்துச் சுற்றினால் அதில் நார் சுற்றிக் கொண்டு வரும். நீக்கிவிட்டு, அரிந்துள்ளதைப் பிழிந்து எடுத்து சமைப்போம்.

வறைதான் எங்கள் வீட்டாருக்கும் அதிகம் பிடிக்கும். அதிலும் கொஞ்சம் மாசி சேர்த்தால் சுவை சொல்லவே வேண்டாம். யமீ. இங்கு தகரத்தில் அடைத்தது கிடைக்கிறது. வெட்டும் வேலை இல்லை. கையில் கறை படாமல் சமைக்கலாம். :-)

//நீங்கள் கூறியபடி செய்வதானால் ஒரு கறிக்கு நிறைய வாழைப்பூ தேவை// & //வேலையும் கூட// உண்மை. அதோடு.. சாப்பிடக் கூடியதை வீசுவானேன்.

ஆனால்... எல்லா டிஷ்ஷுக்கும் எங்கள் முறை பொருந்தாது. இரண்டு முறைகளிலும் சமைத்திருக்கிறேன். இரண்டும் இரண்டு விதம். சுவை & டெக்க்ஷரில் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

வறை (சுண்டல் / பொரியல்), வடை, வடகம் & அதிராவின் குறிப்பிலுள்ளது போல சமையலுக்கு எங்கள் முறை பொருத்தம்.

சில சமையல் முறைகளுக்கு நீங்கள் செய்வது போல சுத்தம் செய்தால்தான் சுவை. சீனிச்சம்பல் செய்யலாம். சூப்பராக இருக்கும். அதற்கு எங்கள் முறை பொருந்தாது. ஆனால் ஒரு முறை சமைக்கவே 3 அல்லது 4 பொத்திகள் தேவை. வெங்காயத்தில் வெந்தயக் குழம்பு வைப்பது போன்று இதிலும் வைப்பேன். தக்காளி சேர்த்து குழம்பு வைப்பேன். இரண்டும் சுவையாக இருக்கும்.

என்ன டிஷ் என்பதைப் பொறுத்து சுத்தம் செய்யும் முறையைத் தீர்மானிக்கலாம். அல்லது... கிடைக்கும் பொத்திகளின் எண்ணிக்கை & நேரத்தைப் பொறுத்து என்ன டிஷ் என்பதை முடிவு செய்யலாம். :)

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்