எளிமையான அரபிக் மெஹந்தி டிசைன் - 4

தேதி: September 17, 2013

4
Average: 4 (16 votes)

 

மெஹந்தி கோன்

 

முதலில் உள்ளங்கையின் கீழ் பகுதியில் ஒரு பூ வரையவும்.
அதற்கு மேலே இதேபோல் இடைவெளிவிட்டு இன்னொரு பூ வரையவும்.
பிறகு இரண்டு பூக்களையும் இணைப்பது போல் இரண்டு கோடுகள் வரைந்து கொள்ளவும்.
கோடுகளின் உட்பகுதியில் இதேபோல் அடுக்கடுக்காக வளையங்கள் வரையவும்.
அந்த டிசைன் முடியுமிடத்தில் ஒரு பூ வரையவும். பூவின் மேல் பகுதியில் பெரிய மாங்காய் டிசைன் வரைந்து அதனுள்ளே விருப்பமான டிசைன்ஸை வரைந்து நிரப்பவும்.
மாங்காய் டிசைனைத் தொடர்ந்து படத்தில் உள்ளது போல் சிறு சிறு மாங்காய் டிசைன்ஸை ஆள்காட்டி விரல் வரை வரைந்து கொள்ளவும்.
இறுதியாக படத்தில் உள்ள டிசைனை அங்கங்கே வரைந்து முடிக்கவும்.
சிறு சிறு விஷேசங்களுக்கு போட்டுக் கொள்வதற்கேற்ப, சுலபமாக போடக்கூடிய அருமையான அரபிக் மெஹந்தி டிசைன் இது. சிறியவர்களும் போட்டால் நன்றாக இருக்கும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ஹாய் சஹானா, சூப்பரா மெஹந்தி போடறீங்க... இதுக்கு ஏதாவது கோர்ஸ் போனீங்களா?? டிஸைன்ஸ் ரொம்ப அருமை...

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

உங்க டிசைன்ஸ் எல்லாமே ரொம்ப சூப்பரா இருக்கு. இந்த டிசைன் கூடிய சீக்கிரம் கையில் போட்டு பார்க்கனும் ரொம்ப அழகா இருக்கு. வாழ்த்துக்கள்.

so quit

டிசைன் அழகா இருக்கு சஹானா.
படம்.. பின்னணி தனி நிறமாக எடுத்திருந்தால் இன்னும் தெளிவாக வந்திருக்கும்.
~~~~~~~~
மானி.. 'சோ க்யூட்' என்கிறீங்களா? ;D முதல் தடவை படிச்சு... குழம்பிட்டேன். ;)))

‍- இமா க்றிஸ்

sry imma madem...... small mistake.

design super sahana

டிசைன் நல்லா இருக்கு.

ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை.
முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

சத்யா.

ரொம்ப அழகுங்க... இமா சொன்னதே தான் உங்க மெஹந்தி டிசைன் பளிச்சுன்னு தெரிய முடிஞ்ச வரை பேக்ரவுண்ட் டிசைன் இல்லாம இருந்தா இன்னும் படம் எடுப்பா அட்டகாசமா இருக்கும். மற்றபடி படங்கள் தெளிவா டிசைனும் அருமையா இருக்குங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மெகந்தி டிசைன் ரொம்ப நல்லா இருக்கு.எனக்கு ஒரு சந்தேகம்.மெகந்தி போட்டதுக்கு அப்பரம் எவ்வளவு நேரம் கலித்து கலுவ வேண்டும்.நான் மெகந்தி போட்டா பிரவுன் கலர்ல சிவக்கிறது..சிகப்பாக மாற என்ன செய்ய வேண்டும்..

very nice mehendi

supera irukku.kone mela pidichu potta marudhani romba adigama varudhu.