தொப்புள் பற்ரிய சந்தேகம்...14 வாரம் கர்பமாக உள்ளேன்.

ஹாய்....ரொம்ப காலத்துக்கு அப்புறம் அறுசுவைல வாரேன்.எல்லாரும் எப்படி இருக்கீங்க?.. எனக்கு ஒரு சந்தேகம்...இப்போ எனக்கு 14 வாரம் கர்பமாக உள்ளேன்.
தொப்புள் பற்ரிய சந்தேகம்... குளிக்கும்போது தொப்புளில் சோப் போட்டு லேசாக தேய்த்து குளிக்கலாமா? ஏனெனில் எனது தொப்புளில் தோல் லேசாக வருகிறது....இன்னுமொரு சந்தேகம்
இந்த தொப்புள் என்பது துவாரமாகவா இருக்கும்? இதனூடாக காற்று அல்லது வெளிச்சம் உள்ளே போகுமா? சும்மா கேட்டு தெரிந்து கொள்ளனும் போல இருந்துச்சு.....

தொப்புள் கொடி விழுந்ததும் அந்த பவுடர் வைத்து நன்றாக அமுக்கி விட்டு புண் ஆறிவிட்டது..
தொப்புள் நார்மலாக ஆகி விட்டது..
கடந்த இரண்டு நாட்களாக இப்படி உள்ளது..

ஹெர்னியா தான் என்று பயமாக உள்ளது.. ஏன் இவருக்கு ஒன்று மாற்றி ஒன்று வருகிறது என்று தெரியவில்லை..

மருத்துவமனை சென்று வந்தால் தான் நிம்மதி..

ஹெர்னியான குடலிறக்கமா அக்கா? இப்போதான் நெட் ல சர்ச் பார்த்தேன். அப்படினா என்ன? நீங்க ஏன் நெகட்டிவா யோசிக்கிறீங்க. தம்பிக்கு ஒன்னும் பண்ணாது. தைரியமா இருங்க.

- பிரேமா

நெகட்டிவாக யோசிக்வில்லை பிரேமா..
எனக்கு தொப்புளிரக்கம் உண்டு. அதேபோல் தான் தம்பிக்கு இருக்கிறது..

கடவுள் தான் என் குழந்தைக்கு ஒன்றும் வராமல் பார்க்கனும்..

குழந்தை வாந்தி எடுத்தல், தொப்புல் நிறம் மாறுதல், வலி இவற்றில் எதாவது ஒன்று இருந்தாள் தாமதிக்காமள் டாக்டரை பாருங்க .

உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்

Doctor kitta kattuna atu valara valara saris aayidum nu solranga.aanalum payama erukku.ungalukku terinca enta matiri yaravatu anupavam erukka

உங்கள் குழந்தையின் வயதுக்கு அது உள்ளே போகக் காலம் இருக்கிறது. 'குப்புற விழுந்தால்' அவர் சொல்வது போல் நடக்கலாம். இப்போது யோசிக்க வேண்டாம். சிலர் குளிக்க வைக்கும் போதும் உள்ளே அழுத்தி விடுவார்கள். அது மட்டும் நல்லதல்ல என்பது என் அபிப்பிராயம். அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம். இப்போது அந்தப் பகுதி மென்மையாக இருக்கும்.

உங்களுக்கு ஹேணியா இருப்பதால் குழந்தைக்கு வரும் என்பதில்லை. உங்களுக்கு இருப்பதால் இது பிரச்சினையான விஷயம் அல்லவென்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். எதற்குப் பயப்படுகிறீர்கள்? எனக்கு நினைவில் இருக்கிறபடி... நீங்கள் எந்தப் பிரச்சினையும் சொல்லாமல் தான் உங்கள் மருத்துவர் உங்களுக்கு ஹேணியா இருப்பதாகச் சொன்னார் - சரிதானே? உங்களுக்கே இது சிரமம் தரவில்லை. எதற்கு யோசிக்கிறீர்கள்?

குடலிறக்கம் என் தாய்க்கு இருக்கவில்லை; எனக்கும் இருக்கவில்லை. இருபத்து நான்கு வயதுக்கு மேல் தான் வந்தது. அதுவும் அந்த ஒரு சிகிச்சைக்குப் பின் பிரச்சினை எதுவும் இல்லை. என் அப்பாவுக்கு அவரது எழுபது வயதுக்கு மேல் தான் வந்தது. (அப்பாவுக்கு வந்தது தொப்புளில் இல்லை.)

இதையெல்லாம் இப்போதே ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம். அதுவே, வேறு மாற்றங்கள் இருந்தாலும் உங்கள் கவனத்திலிருந்து தப்ப வைக்கும். ஃபாத்திமா சொன்னது போல, மாற்றங்கள் ஏதாவது இருந்தால் உடனே மருத்துவரைப் பாருங்கள். உள்ளே இன்ஃபெக்‌ஷன் இருக்கலாம்.

'கடவுள் தான் என் குழந்தைக்கு ஒன்றும் வராமல் பார்க்கனும்.' அந்தக் கடவுள் தானே எம் உடலையும் வியாதிகளையும் படைத்தார்! ;) உலகம் அவரது 'லாப்'; நாம் பரிசோதனை எலிகள். அவர் எம்மில் தான் எல்லாவற்றையும் எக்ஸ்பெரிமண்ட் பண்ணுவார். ;)

‍- இமா க்றிஸ்

இப்பவும் நீங்க 'காட்டுன' என்று மட்டும் சொல்றீங்க. கடைசியா எப்போ காட்டினீங்க என்கிறதைச் சொல்ல மாட்டேங்கறீங்க. ;)

பயம் வேண்டாம்.

ஏற்கனவே இங்கு எங்கோ சொல்லியிருக்கிறேன். என் மருமகன் ஒருவருக்கு ஐந்து வயதில் ஹேணியா சர்ஜரி செய்தார்கள். பிறகு பிரச்சினை இருக்கவில்லை.

‍- இமா க்றிஸ்

Imma mam neenga solra henia apdeena enna.unga marumaganukkum etu Pola toppul perusa eruntussa

1. தமிழில் - குடலிறக்கம். இதற்கு மேல் விபரிக்க இன்று நேரம் போதவில்லை சகோதரி. மன்னியுங்கள்.
2. ஆமாம் என்று சொல்வதற்குத் தயக்கமாக இருக்கிறது. உங்கள் குழந்தைக்கு எந்த அளவு பெரிதாக இருக்கிறது என்பது எனக்குத் தெரியாதே!. நீங்கள் பிறகு சற்றுச் சிறிதாகிவிட்டது என்றும் சொல்லியிருக்கிறீர்கள். பதிவு தமிங்கிலத்தில் இருந்ததால் என் கவனத்திலிருந்து தப்பியிருக்கிறது. இப்போது திரும்பப் படித்த போது தான் தெரிந்தது.

யோசிக்காதீங்க, யோசனையாக இருந்தால் மருத்துவரிடம் பேசுங்க.

‍- இமா க்றிஸ்

குழந்தை தொப்புள் வளர வளர உள்ளே சென்று விடும் என்று டாக்டர் கூறிவிட்டார்கள்..
வேறு ஒரு பிரச்சனை காரணமாக மருத்துவமனை சென்றேன்(இமா அம்மாவிற்கு தெரியும்)..

கடவுள் அருளால் அதுவும் நார்மல் ஆகி விட்டது..
உங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி..

குழந்தையை கண்ணாடி பெட்டியில் மூன்று நாட்கள் வைத்ததன் காரணமாக தொப்புள் பெரிதாகி விட்டது என்று டாக்டர் கூறினார்கள்..
மீண்டும் இருவருக்கும் என் நன்றிகள்.

மேலும் சில பதிவுகள்