பத்திய உணவு

Please tell me about the foods to be taken after the day of cesearean.

சிசேரியனுக்கும் சாதாரணமாகப் பிரசவிப்பதற்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை. காயம் வேறு வேறு இடத்தில், வேதனை இரண்டிலுமே இருக்கும்.
'பத்தியச் சாப்பாடு' என்று எதை நினைக்கிறீர்கள் என்பது புரியவில்லை. இடத்துக்கு இடம், குடும்பத்துக் குடும்பம் இது மாறுபடுகிறது என்பதை அவதானித்திருக்கிறேன். பத்திய உணவு உண்டால்தால் காயம் ஆறும் என்கிறது இல்லை. தொற்று ஏற்படாமலிருந்தால், எந்தக் காயமானாலும் உடல் தன்னால் ஆறவைக்கும்.

பிரசவத்துக்குப் பின் உடல் பலவீனமாக இருக்கும். ஆரோக்கியமான உணவாக எடுத்துக்கொள்ளுங்கள். புரத உணவு, சிதைந்த தசைகள் விரைவில் சரியாக உதவும். பால் & போதுமான அளவு நீர் அருந்துங்கள். கீரை, பழவகைகள் சாப்பிடுங்கள். எதைப் பற்றியும் யோசிக்காமல் சந்தோஷமாக இருங்கள். அதுதான் எல்லாப் பத்திய உணவுகளையும் விட பிரதானம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்