My son is 3 and half years and he has milk allergy so he cannot take any food containting milk or milk products (Cows milk, ice cream, curd, pizza etc). Do anyone know any way to get out of this problem? His first 1 and half year he took only my milk and then he is having almond and soy milk as milk substitute, orange juice with calcium for extra calcium). Any kind of information regarding the remedy of milk allergy would be helpful to me. Please friends help me.
பால் அலர்ஜி
//Do anyone know any way to get out of this problem?// //remedy of milk allergy//
இது நோய் அல்ல. ஒவ்வாமை - ஒரு நிலை. தன்னால் மாறினாலொழிய எதுவும் செய்ய இயலாது. மருத்துவம் செய்து மாற்ற இயலாது. 'அலர்ஜிக் ரியாக்க்ஷன்ஸ்' வரும் போது கொடுக்க மட்டும் மாற்று மருந்துகள் உண்டு.
கொடுக்கும் உணவுகளில் கவனமாக இருங்கள். தவறாக ஏதாவது உட்கொண்டால் என்ன மாற்று என்பது ஏற்கனவே தெரிந்திருக்கும் உங்களுக்கு. குழந்தைக்கு ஒவ்வாமையின் தீவிரம் பற்றிய புரிதல் வரும்வரை நீங்களில்லாமல் வேறு யாரோடும் தனியே விட வேண்டாம். அவ்வப்போது அவருக்கு எது எது ஆகாது என்பதைச் சொல்லிக் கொடுங்கள். மற்றவர்கள் சாப்பிடும் எல்லாவற்றையும் உங்களைக் கலந்து கொள்ளாமல் சாப்பிட வேண்டாம் என்று சொல்லி வையுங்கள். அதே போல என்னவிதமான மாற்றங்கள் உடலில் தென்பட்டால் உங்களை அணுகவேண்டும் என்பதையும் சொல்லி வையுங்கள். 'ப்ளே ஸ்கூல்' போகிறவரானால், அவரது ஆசியர்களுக்கும் விபரம் தெரிந்திருப்பது நல்லது.
- இமா க்றிஸ்
Milk allergy
ஹாய் ஸ்ரீதேவி,
எப்படி இருக்கின்றீர்கள்?உங்களுடைய மகனுக்கு இருக்கும் பிரச்சனையை போல தான் பிரான்சில் உள்ள எனது நண்பியின் மகனுக்கும் இருக்கிறது. பசுப்பாலில் தான் பிரச்சனை பிரான்சில் உள்ள வைத்தியர் உணவுகளை தேங்காய்பாலில் செய்து கொடுக்கலாம் என்று கூறினார் அதனை போல எனது நண்பியும் மகனுக்கு உணவுகளை தேங்காய் பாலில் தான் செய்து கொடுத்தார் அந்த உணவு ஒத்து கொள்ளுகிறது அதனால் எந்த பிரச்சனையும் இல்லை இப்படி பிரச்சனைகள் உள்ள பிள்ளைகளுக்கு பிஸ்கட் கூட பசுப்பால் உணவுகள் கலந்தவை கொடுக்கமுடியாது ஆகவே அவற்றை பார்த்து வாங்கி கொடுக்கவும் பிரான்சில் இவர்களுக்கு கொடுக்ககூடிய பிஸ்கட் வகை கள் கிடைக்கின்றன ஆனால் நீங்கள் இருக்கும் இடத்தில் கிடைக்குமா என தேடி பார்க்கவும்
அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்
"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"
"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"
Thanks imma for your time and care.
Thanks for your time and caring words!
Thanks Dhushyanthy
Thanks for your time and caring words.