சந்தேகம்

எனது முதல் குழந்தை 2 வருடம் நார்மல்.3 மாதமாக 2வது குழந்தைக்கு முயற்சி செய்கிறோம்.எனது கரு முட்டை வள்ர்ச்சி காண மருத்துவரிடம் சென்றேன்.12,16,19 follicular study செய்தார்கள்.கரு முட்டை வரவே இல்லை.
19வது நாள் என்டோமெட்ரியம் pattern THIN SINGLE LINE என்று வந்தது.இதற்கு என்ன அர்த்தம்?
முதல் குழ்ந்தை பிறக்கும்போது irregular periods ஆனால் எல்லாம் நார்மல் இப்பொழுதெல்லாம் நார்மல் period தான் ஆனால் கரு முட்டை வரவில்லை.இவ்வாறு நடக்குமா?
நான் இதற்கு சிகிச்சை எடுக்க வென்டுமா? அல்லது கருமுட்டை வருமா? எதனால் இப்படி நடக்கிறது?

ஏன் பா நான் எந்த கேள்வி கேட்டாலும் reply பண்ண மாட்ரிங்க.ரொம்ப கஷ்டமா இருக்கு.இனி இந்த தளத்தில் நான் எதுவும் கேட்க மாட்டேன்.இதுவரை இதில் கேள்வி கேட்டதற்கு மன்னிக்கவும்.

நீங்க கேட்டீங்கன்னு யாரும் பதில் சொல்லாம போக மாட்டாங்க... நீங்க கேட்ட கேள்விக்கு பதில் தெரிஞ்சுருக்காது, அதனால் பதில் சொல்லி இருக்க மாட்டாங்க. :) நம்புங்க. கோச்சுக்காம வெயிட் பண்ணுங்க... யாருக்கும் தெரிஞ்சா கண்டிப்பா சொல்லுவாங்க. எனக்கும் நீங்க கேட்டது புதுசு தான்... முதல் பிள்ளை பிறப்பது தான் சிரமம் என்பார்கள்... ஒன்று பிறந்த பின் அடுத்ததில் சிக்கல், இப்ப தான் கேட்கறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எல்லாமே டாக்டர், ஸ்பெஷலிஸ்டுகளிடம் கேட்கிற கேள்வியாகக் கேட்டு இருக்கிறீங்க. பதில் எப்படி சொல்லுறது சுதா?

இங்க நிறையப் பேர் வாசகர்கள் மட்டும்தான். பதில் சொல்வது சிலர். அந்தச் சிலரில் உங்கள் அதே பிரச்சினை உள்ளவங்க யாராவது இருந்து, அவங்க கண்ணுல இது பட்டு, பதில் சொல்ல உடனே நேரமும் அமைஞ்சிருந்தா நிச்சயம் ஏதாவது கருத்து சொல்லியிருப்பாங்க.
//ஏன் பா நான் எந்த கேள்வி கேட்டாலும் reply பண்ண மாட்ரிங்க.// அப்படி பதில் சொல்லாமல் விட உங்கள் மேல் யாருக்கும் கோபம் இல்லையே. எனக்குத் தெரிந்தால் நிச்சயம் சொல்லி இருப்பேன். தெரியல. 'தெரியல' என்று பதில் சொல்லலாம். அப்பவும் வந்து பார்த்து ஏமாந்து போவீங்க.

//இனி இந்த தளத்தில் நான் எதுவும் கேட்க மாட்டேன்.// :-) ஸ்கூல் பசங்க டூ விடுற மாதிரி சொல்றீங்க. :-) இந்தக் குட்டி ஏமாற்றைத்தைத் தாங்க முடியல என்றால் கேட்காம இருக்கிறது உங்களுக்கு நிம்மதியாக இருக்கும். இதுல்லாம் சீரியஸா எடுத்துக்கக் கூடாது.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்