தக்காளி ரசம்

தேதி: September 24, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.7 (6 votes)

 

பழுத்த தக்காளி - 2
சீரகம் - அரை தேக்கரண்டி
வெங்காயம் - பாதி
பச்சை மிளகாய் - ஒன்று
மல்லித் தழை - சிறிது
தேங்காய் பால் (அ) பசும்பால் - அரை டம்ளர்
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க:
எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை - சிறிது
பூண்டு - ஒரு பல்


 

மிக்ஸியில் தக்காளியுடன் சீரகத்தைச் சேர்த்து அரைக்கவும்.
அரைத்தவற்றுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மல்லித் தழை மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளிக்கவும்.
அதனுடன் கலந்து வைத்துள்ள தக்காளி விழுதை ஊற்றி பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும்.
கொதித்ததும் அடுப்பை அணைத்துவிட்டு அதில் பால் சேர்க்கவும்.
மழைக்காலத்திற்கேற்ற சூடான, சுவையான தக்காளி ரசம் தயார். சாத்ததுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரசத்தில் பால் / தேங்காய் பால் சேர்ப்பதை இப்ப தான் பார்க்கறேன். புதுசா இருக்கு. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நாங்க 'பால் ரசம்' வைக்கிறது உண்டு வனி.
இது தக்காளி ரசம். புதுசாத்தான் இருக்கு.

‍- இமா க்றிஸ்

ரஸியா ரசம் நல்லாருக்கு... நானும் தேங்காய்ப்பால் ரசம் வைப்பேன். ஆனா தக்காளி ரசத்தில் பால் சேர்த்ததில்லை. இது புதுசா இருக்கு.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

ரசியா ரசத்த அப்படியே குடிக்கலாம் போல இருக்கு, நாங்களும் தேங்காய் பால் சேர்ப்போம். நிச்சயம் இதை செய்து பார்த்துட்டு சொல்றேன்

தேங்காய்ப்பால் ரசம் தெறியும் ஆனால்,பசும்பால் ரசம் இப்பதான் கேள்விபடுகிரேன்.பார்க்கவே நல்லா இருக்கு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

தேங்காய் பால்(அ) பால் ரசம் புதுசா இருக்கு. நான் இதை செய்து பார்க்கிறேன்.

ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை.
முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

சத்யா.

இது எங்க ஊர் பக்கம் செய்வாங்கபா,நல்லா இருக்கும் செய்து பாருங்க

Eat healthy

ஆமாம் இமாம்மா பால் ஊற்றுவதால் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்

Eat healthy

தேங்காய்பால் ரசமும் இருக்கு,அது புளி சேர்த்து செய்வது அதிலும் கடைசியில் தேங்காய்பால் ஊற்றுவோம்,அதேபோல்தான் தக்காளியில் செய்து பால் ஊற்றவேண்டும்

Eat healthy

நன்றி உமாகுணா,செய்து பாருங்க

Eat healthy

இல்லப்பா முஹ்சினா தேங்காய்பால்தான் சேர்க்கிறது எப்போதும்,கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் பசும்பால் சேர்த்துக்கலாம்பா

Eat healthy

நன்றி சகோதரி சத்யா,செய்து பாருங்க,சுவை நல்லா இருக்கும்

Eat healthy

paarkave nallarukku anna rasathil milk serththa ketu poidummallavaa

ரசத்துல பால் புதுமையா இருக்கு கண்டிப்பா செய்து பார்க்கனும் வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

தேங்காய் பால் ரசம் எப்படி செய்வாங்க கொஞ்சம் சொலுங்க எனக்கு ரசம் வைக்க தெரியாது கன்டிபா இந்த ரசம் வச்சி பாக்குரேன்