அண்ணனை சரி பண்ண உதவுங்கள்

எனக்கு 2 அண்ணன்கள் 2 வது அண்ணனுக்கு திருமணம் ஆகி விட்டது 3 வருடமாக அவனுடன் எந்தவித தொடர்பும் இல்லை. என் முதல் அண்ணனுக்கு 1 வருடத்திற்கு முன்பு மனநிலை பாதிக்க பட்டது. ஆரம்பத்திலேயே மருத்துவரை பார்த்ததால் சீக்கிரம் குணமாகிவிட்டது. அவன் குடிப்பான். அதனால் தான் அப்படி ஆனது. அவன் இப்பொழுதும் தீடிர் என்று குடிப்பான் தீடிர் என்று நிறுத்தி விடுவான். என் திருமணதிற்கு பின் அவன் கேரளாவிற்கு வேலைக்கு சென்று விட்டான். மாதத்திற்கு 4 நாட்கள் வருவான். அவன் எல்லோரிடமும் நன்றாக பழகுவான் அதனால் அவனை எல்லோருக்கும் பிடிக்கும் இப்பொழுது அதுவே பிரச்சனை ஆகி விட்டது. என் அண்ணாவுடன் வேலை செய்யும் ஒரு பெண்ணிற்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். அதில் முதல் பெண் 10வது படித்து கொண்டு இருக்கிறது மற்ற குழந்தைகளின் விவரம் எனக்கு தெரியாது. என் அண்ணன் அந்த பெண் தன்னிடம் ஒரு தாயை போல் பாசம் காட்டுவதாகவும் இவனை காதலிப்பதாகவும் என்னிடம் கூறினான். நான் அது தவறு என்று சொன்னேன். அந்த பெண் அவன் அங்கு இருந்தால் பாசமாகவும் எங்கள் வீட்டிற்க்கு வந்தால் சண்டை போடவும் செய்கிறது. அந்த பெண் என் அண்ணனுடன் எல்லாரையும் விட்டு ஓடி வர தயாராக உள்ளது. அவன் இல்லை என்றால் செத்து விடுவதாக கூறி உள்ளது அதனால் என் அண்ணன் பயபடுகிறான். இப்பொழுது என் அண்ணன் எங்கள் வீட்டிற்க்கு வந்துள்ளான். அவன் இல்லை என்று 2 நாட்களுக்கு முன் அந்த பெண் ஏதோ மருந்தை குடித்து விட்டது உயிருக்கு ஒன்றும் இல்லை. என் அண்ணன் அதையே நினைத்து கொண்டு இருக்கிறான். வேறு திருமணம் செய்து கொள்ள மறுக்கிறான். எனக்கு அம்மா இல்லை. எனக்கு அவன் மேல் ரொம்ப பாசம் இருக்கிறது. என் கணவர் என்னை பற்றி கவலை படுவதே இல்லை அவர் சந்தோஷம் மட்டுமே அவருக்கு முக்கியம். நான் இப்பொழுது 6 மாத கர்பமாக உள்ளேன். என் அண்ணனை எப்படி சரி செய்வது நான் என்ன சொன்னாலும் அவன் கேட்க மாட்டேன் என்கிறான் அந்த பெண் காட்டும் பாசம் உண்மையானது என்று கண்மூடி தனமாக நம்புகிறான் அவன் மனநிலை பாதிக்க பட்டு விடுமோ என்று எனக்கு பயமாக உள்ளது அவனை எப்படி மாற்றுவது அந்த பெண் என் அண்ணனை விட்டு விலக எனக்கு உதவுங்கள்

Hi sangeethaa,ungaloda anna kita sollunga antha ponu intha age vanthu irrupathu irrpu endru nalaika unga anna vida better ah oru paiyan irrunthana antha ponnuku unga anna mela irrukum pasam poi vidum antha ponnoda amma kita sollunga intha mathiri irrupatha patri neenga unga annai oru nala dr pathu counselling kudunga ithu ipadiya ponala problem antha ponuku illa unga anna ku dhan...

இதுவும் கடந்து போகும்
ஆனால்
எதுவும் மறந்து போகாது...

Hi sangeethaa,,, dhivya mohankumar sonnathu than best... neega ippadiye solli paarunga... Unga anna-va Oru 2 months-ku ingaye irukka sollunga .... antha ponnoda ella contacts-um cut pannuga... mobile number change pannuga... avara thaniya vidathinga.... itha vida mukkiyam ungaloda health... take care....

nambunga nallathe nadakkum...

மேலும் சில பதிவுகள்