ப்ரிஜ்ஜில் வைத்த பழங்களை 8 மாத குழந்தைக்கு குடுத்தால் சளி பிடிக்குமா. ப்ளீஸ் சொல்லுங்க.

ஹாய் ப்ரண்ட்ஸ், நான் வாழை பழங்களை ப்ரஜ்ஜில் வைத்திருப்பேன். மதியம் குடுப்பதற்க்கு காலையிலே எடுத்து வைத்து விடுவேன். ஆனால் ப்ரஜ்ஜில் வைத்ததை குழந்தைக்கு குடுத்தால் சளி பிடிக்கும் என்று சொல்றாங்க. எனக்கு இந்த டவுட்ட கிளியர் பன்னுங்க ப்ளிஸ். என்னொட குழந்தைக்கு 8 மாதம் ஆகுது.

இதுவரை அப்படி தான் கொடுத்திருக்கீங்களா? ஒன்னும் பண்ணலயா? இல்ல இனி தான் கொடுக்க போறீங்களா? இதுவரை கொடுத்து ஒன்னும் பண்ணலன்னா கொடுங்க. இந்த வயதில் பிள்ளைகள் உடம்பு ரொம்ப சென்சிடிவா தான் இருக்கும். பழக பழக தான் உடம்பு அதுக்கு ஒத்து வரும். எல்லா பிள்ளைகளுக்கும் எல்லாம் ஒத்துக்குறதும் இல்லை ஒத்துக்காம போறதும் இல்லை. சில பிள்ளைகளுக்கு குளிர்ச்சி ஒன்னும் பண்ணாது, சில பிள்ளைகளுக்கு சளி பிடிக்கும். எதுக்கும் சேஃப்... வெளிய எடுத்து வெச்சு குளிர்ச்சி போனதும் கொடுப்பது தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் இதுவரைக்கும் ப்ரஜ்ஜில் வைத்து தான் குடுத்து இருக்கிறேன் ப்ரண்ட். எதுவும் பன்னல ஆனா இந்த பக்கத்து வீட்டுகாரங்க இருக்காங்களே நம்மள பதற வைக்கிறதுல அவங்களுக்கு ஓரு இன்பம்

என்றும் அன்புடன்,
பிருந்தாஜாண்வசீ

ஹஹஹா.... அப்படி இல்லை ப்ரிந்தா, ஒரு அக்கரை தான். என் அம்மா கூட எனக்கு இதை சொன்னது உண்டு. உண்மையில் என் பிள்ளைகளுக்கு குளிர்ச்சி என்றாலே சேருவதில்லை தான், நானும் அனுபவப்பட்டு விட்டேன். ஆனால் சில பிள்ளைகளுக்கு ஒத்து வரும் என்பதை என் தங்கை மகளை கண்டு தான் நானும் தெரிந்து கொண்டேன். அவள் குளிர்ச்சியான பழங்கள், ஜூஸ் என எல்லாவற்றையும் ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து உண்பது வழக்கம். ஒன்று செய்து நான் கண்டதில்லை. உடல் வாகும், ஆரம்பத்தில் இருந்து ஏற்படும் பழக்கமும் அதற்கான எதிர்ப்பு சக்தியை தந்து விடுமோ என்னவோ. நீங்க இதுவரை கொடுத்து ஒன்னும் பண்ணலன்னா, தாராளமா கொடுங்க. முடிஞ்ச வரை வெளியே வைத்து கொஞ்சம் குளிர்ச்சி குறைந்ததுமே கொடுங்க, ரொம்ப குளிர்ச்சி இந்த வயது சிறு பிள்ளைக்கு வேண்டாமே.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

HI welcome to arusuvai.good professional all the best

அப்படி சந்தேகமா இருந்தா பழம் குடுத்தப்பின் வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்க வைங்க...

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

மேலும் சில பதிவுகள்