என் மகன்

வணக்கம்,

எனது மகனுக்கு 2 வயது 3 மாதம், அவருக்கு பசி எடுக்கவில்லை. ஒரு சாப்பாடும் சாப்பிடாமல் விளையாடிக்கொண்டு இருப்பார். இன்றுடன் 1 கிழமை முடிந்தது, பால் குடிப்பார். வேரு ஒன்றும் சாப்பிடாமல் இருக்கிறான். சகோதரிகளே என் கவலையை உங்களிடம் பகிர்ந்து கொண்டேன். தயவு செய்து நல்ல பதில் தாருங்கள்.

அன்புடன்

அனு

இந்த வயது பிள்ளைகள் பலரும் பண்றது தான். விளையாட துவங்கும் நேரம் இல்லையா... கவனம் முழுக்க அதுல தான் இருக்கும், அதான் உணவுக்கு நோ சொல்றது. நல்லா ஆக்டிவா இருக்காங்களா? ஆக்டிவா இருந்தா பிரெச்சனை இல்லை. சாப்பிடாம குழந்தை டல்லாவும் இருந்தா மருத்துவரை பாருங்க. பாலை நிறுத்துங்க. பால் குடிச்சாலே பிள்ளைகள் சாப்பிடாதுன்னு என் பிள்ளைகள் விஷயத்தில் மருத்துவர் சொன்னார். 1 வயது கடந்த பின் பால் ஒரு நாளைக்கு இரண்டு வேளை மட்டுமே போதுமானதுன்னு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

hi vanitha sister

நன்றி அக்கா,

அவர் சுறுசுறுப்பாக இருக்கிறார். ஆனால் சாப்பிடவில்லை. என்ன மாதிரியான உணவு அவருக்கு குடுக்கலாம். எனக்கு சரியான கவலை. நான் அவருக்கு ஒரு நல்ல அம்மாவாக இல்லையோ என்று கூட யோசித்து கவலை படுவேன்.

நன்றி

anu

amma

ஆகா... இந்த வயதில் எல்லா பிள்ளைகளும் பண்ணுவது தான், இதுக்கு உங்களை ஏன் குறை சொல்லிக்கனும்? ;) அப்படி பார்த்தா நானும் கூட ரொம்ப பேட் மதர் தான் :P குழப்பம் வேண்டாம்.

அவருக்கு என்ன உணவு பிடிக்கும்? நான் செய்து ஒத்துவந்த சில... வெளியே அழைத்து போனால் உணவு உண்ண பிடிக்கும் (வீட்டில் கொடுத்தா வேண்டாம் என்பார்கள்), அவர்கள் வயது ஒத்த பிள்ளைகளோடு சேர்த்து உட்கார வைத்து சாப்பிட வைத்தாலும் உண்பார்கள் (யார் முதல்ல தட்டை காலி பண்றதுன்னு போட்டி வைப்பாங்க), அவர்கள் விளையாட விட்டு அவர்கள் கூடவே நாமும் ஓடிக்கொண்டு ஊட்டினாலும் சாப்பிடுவார்கள் (என் மகன் கர்பனையாக ஓட்டும் வண்டியில் எல்லாம் நான் அவனோடு சவாரி செய்வேன் கையில் தட்டோடு, ட்ரைவருக்கு எப்போதெல்லாம் டயர்டாகுமோ அப்போதெல்லாம் ஒரு வாய் உணவை கொடுப்பேன்), உணவை பொம்மை போல் பிடித்து வைப்பேன் (ஒவ்வொரு பொம்மைக்கும் ஒரு பெயர், அவர்களுக்கு பிடிச்ச பொம்மையாக உண்ண வைப்பது), இப்படி எதாவது உங்களுக்கு ஒத்து வந்தா ட்ரை பண்ணி பாருங்க. ஏன்னா எல்லா பிள்ளைகளும் ஒன்றல்லவே. என் மகள் இந்த எந்த ஆட்டத்துக்கும் ஒத்து வர மாட்டா, ஆனா நான் பேச மாட்டேன் என்று சொன்னா சாப்பிடுவா (இப்போ இந்த ஆட்டமும் ஒத்துவரதில்லை, பொய் சொல்றேன்னு கண்டு பிடிச்சுட்டாங்க). அப்படி தான்... உங்க பிள்ளையிடம் எந்த வழி சரிப்படுதுன்னு ஒரு 2 நாள் டைமெடுத்து முயற்சி செய்து பாருங்க. ஆல் தி பெஸ்ட். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்