குரோசே டெய்ஸி ஃப்ளவர் (Crochet Daisy Flower)

தேதி: October 8, 2013

5
Average: 4.3 (6 votes)

 

உல்லன் நூல் - விரும்பிய இரண்டு நிறங்களில்
குரோசே ஊசி

 

முதலில் நூலில் முடிச்சுப் போட்டு ஊசியை விட்டு 6 சங்கிலிப் பின்னல்களைப் பின்னி முதல் சங்கிலியோடு இணைத்து ஒரு வளையம் போல பின்னிக் கொள்ளவும். (நான் வெள்ளை மற்றும் லைட் ஆரஞ்ச் நிற நூல்களை எடுத்துள்ளேன்).
இப்பொழுது ஒரு சங்கிலி போட்டு, வளையத்தினுள் ஊசியை விட்டு படத்தில் காட்டியுள்ளபடி ஒரு ஒற்றைக் குரோசே பின்னல் பின்னவும்.
இதேபோல் வளையத்தினுள் விட்டு 10 ஒற்றைப் பின்னல்களைப் பின்னவும்.
படத்தில் உள்ளது போல் முதலில் பின்னிய ஒற்றைப் பின்னலில் மேல் ஊசியை விட்டு ஊசியில் நூல் சுற்றி இழுத்து ஒன்றாக்கி, நூலை வெட்டிவிட்டு வெள்ளை நூலை இணைக்கவும்.
இப்பொழுது வெள்ளை நூலில் 10 சங்கிலிகள் பின்னிக் கொள்ளவும்.
படத்தில் காட்டியவாறு ஊசியை முதல் சங்கிலியில் விட்டு இணைத்து ஒன்றாக்கவும். பூவின் ஒரு இதழ் தயார்.
வளையத்தின் மேலுள்ள ஒற்றை பின்னலில் படத்தில் காட்டியுள்ளபடி ஊசியை விட்டு ஊசியில் நூல் சுற்றி இழுக்கவும்.
அடுத்த இதழுக்கு மீண்டும் 10 சங்கிலிப் பின்னல்கள் பின்னி முதல் சங்கிலியில் விட்டு இணைத்து ஒன்றாக்கவும்.
அடுத்தடுத்துள்ள பின்னல்களிலும் இதேபோல் இதழ்கள் பின்னவும்.
10 ஒற்றைப் பின்னலிலும் 10 இதழ்கள் பின்னி முடித்துவிட்டு, படத்தில் காட்டியுள்ளபடி முதலாவதாக பின்னிய இதழின் கீழ்பக்கமுள்ள சங்கிலியில் ஊசியை விட்டு இணைத்து ஒன்றாக்கவும்.
பிறகு முடிச்சுப் போட்டு நூலை வெட்டிவிடவும்.
அழகிய டெய்ஸி ஃப்ளவர் தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்ப அழகா செய்திருக்கீங்க. எனக்கு இதை செய்ய ரொம்ப நாள் ஆசை, ஆனால் துவங்கிய பின் குழம்பி போவேன். பள்ளியில் தோழிகளோடு சேர்ந்து செய்தது உண்டு. இப்போ அடிப்படையே நினைவில்லை. முயற்சிக்க வேண்டும். நல்ல கலர்ஸ். வாழ்த்துக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிகவும் நன்றாக உள்ளது. எனக்கு குரோசாவில் செய்யும் பொருள்கள் என்றால் ரொம்ப பிடிக்கும். இதைச் செய்து பார்த்தேன் நன்றாக வந்தது.

ரொம்ப அழகா இருக்கு. முயற்சித்துப் பார்க்கிறேன்.

‍- இமா க்றிஸ்

Hanky yala rose flower sivadu epadi? Pls help me

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே