கலப்பட பால்

பாலில் கலப்படம் என்கிறார்களே உண்மையா ? பயமா இருக்கு கொஞ்சம் சொல்லுங்க ?

நாம குடிக்கிற பாலில் கலப்படம் என்று டிவி யில் எல்லாம் சொல்லுறாங்க குழந்தைகளுக்கு கூட கொடுக்க பயமா இருக்கு
ப்ளீஸ் சொல்லுங்க என் அக்கா பொண்ணுக்கு கொடுக்கிறார் but now கொடுக்க பயமா இருக்கு

மக்கள் பயன்படுத்தும் பாலில் 68 சதவீதம் கலப்படமாம் நாம் அறிந்தவரை பால் கலப்படம் என்பது, பாலில் தண்ணீர் கலப்பது தான்! but now பாக்கெட் பால் ரொம்ப நாள் கெட்டுப்போகாம இருக்க, ஃபார்மலின் கலக்குறாய்ங்க இப்போ நிறைய நுரை வருவதற்கும் பாலில் கலந்த தண்ணி தெரியாமல் இருக்கவும் நிறம், மணம் இல்லாத சோப்பு பவுடர் கலந்துடு றாய்ங்க .ஃபார்மலின் பிணத்தை பாதுகாக்க உபயோகப்பத்துடும் ஒரு பயங்கர வேதிப் பொருள்

அதை விட கொடுமை "சிந்தெடிக்' பால் தயாரிக்கிறார்களாம்- செயற்கைப் பால் என அழைக்கப்படும் இந்த பாலில் கலக்கப்படும் பொருட்கள் என்ன தெரியுமா?

* காஸ்டிக் சோடா.
* தண்ணீர்.
* ரீபைன்ட் ஆயில்.
* உப்பு.
* சர்க்கரை.
* யூரியா. சோப்புப் பொடி, பாமாயில்

இவ்வகையாகத் தயாரிக்கப்பட்ட பாலை, நிஜமான பாலுடன் கலந்து விட்டால், இத்துறையின் நிபுணர்களால் கூட வித்தியாசம் காண முடியாதாம்!

இப்படியே போனால் நம் கதி என்ன குழந்தைகள் குடிக்கும் பாலில் கூட கலப்படத்தை தடுக்க முடியாதா இந்திய வல்லரசே ???????????

நீங்க சொல்றது மாதிரி எல்லாம் செய்ய முடியாதுங்க. இப்போ ஆவின் பால் சேகரிப்பு மையங்களில் கெமிக்கலை தனியாக பிரித்தறியும் அனலைஸர் வைத்து பாலை பரிசோதித்து வருகிறோம். அதனால் பயப்படாமல் ஆவின் பாலை பயன்படுத்தலாம்.

அன்புடன்
THAVAM

மேலும் சில பதிவுகள்