பொடி சிக்கன் குழம்பு

தேதி: October 22, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.9 (7 votes)

சிக்கன் - 500 கிராம்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
வறுத்துப் பொடிக்க:
சோம்பு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மல்லி விதை - ஒரு தேக்கரண்டி
மிளகு - அரை தேக்கரண்டி
வரமிளகாய் - 5 - 6
வெந்தயம் - அரை தேக்கரண்டி
வதக்கி அரைக்க:
தேங்காய் - 3 மேசைக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
தாளிக்க:
பட்டை - 2 துண்டு
சோம்பு - அரை தேக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

சிக்கனுடன் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். பொடிக்க வேண்டியவற்றை வெறும் கடாயில் சிவக்க வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். அரை தேக்கரண்டி எண்ணெயில் தேங்காயையும், சோம்பையும் லேசாக வதக்கி அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கிக் கொள்ளவும்.
அதனுடன் ஊறவைத்த சிக்கனைச் சேர்த்து மூடி போட்டு 10 நிமிடங்கள் வதங்கவிடவும்.
சிக்கன் நன்கு வதங்கியதும் தேங்காய் விழுது, மிளகாய் தூள் சேர்த்து கிளறி, அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
சிக்கன் நன்கு வெந்ததும், உப்பு சரிபார்த்து பொடித்த பொடி தூவி இறக்கவும்.
இட்லி, தோசை, சாதம் என அனைத்திற்கும் ஏற்ற, சுவையான பொடி சிக்கன் குழம்பு தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

ஆகா... அருமையான சிக்கன் கறி. அடுத்த முரை இம்முறையில் தான் செய்வது. சூப்பர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Super uma. naanum next time tri panaraenpa

Be simple be sample

குறிப்பை வெளியிட்ட டீமுக்கு நன்றி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நன்றி வனி. செய்துட்டு பதிவு போடுங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நன்றி ரேவ்ஸ். நீங்களும் செய்துட்டு பதிவு போடுங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

பொடி சிக்கன் குழம்பு... ரொம்ப அருமையா இருக்குங், அசத்துங்க அக்காங் :-)

நட்புடன்
குணா

ரொம்ப ரொம்ப நன்றிங்க தம்பிங்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

pls help me and chat with me.. jevanrelax@gmail.com

உமா சிக்கன் சூப்பர்,பார்க்கும்போதே சாப்பிட தோனுது,அப்படியே இதனுடன் 2 சப்பாத்தி செய்தும் கொடுத்துடுங்க,ஹாஹா!!!

Eat healthy

கண்டிப்பா ரஸி அடுத்த தடவை செய்து கொடுத்துடுறேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

உமா வாசனை தூக்கும் போல செய்துபாத்துடுவோம் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நன்றி சுவர்ணா செய்துட்டு பதிவு போடுங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

ஜீவா உங்களுக்கு மெயில் அனுப்பிருகேன். பாத்துட்டு பதில் போடுங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

செய்துட்டேன் இன்னைக்கு இந்த சிக்கன் கறி... எப்போதும் உங்கள் குறிப்பு சூப்பர் தான்... இதுவும் ரொம்ப சூப்பரா இருக்குங்க. வாசமாவும் இருக்கு. :) தேன்க்யூ உமா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி வனி செய்ததுக்கும் பதிவுக்கும் சேர்த்து.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

Na mudhanmudhala senja non-veg kulambu idhudhaan super-ah vandhichu.ellarrukkum pidichadhu.

No pains,No gains

ANANTHAGOWRI.G