தட்டை

தேதி: November 7, 2006

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அரிசி மாவு - 2 கப்
உளுத்த மாவு - 1 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது
உப்பு - 2 தேக்கரண்டி
வெண்ணெய் - 4 தேக்கரண்டி
வெள்ளை எள்ளு - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி (ஒரு மணி நேரம் ஊறவைத்தது)
காரப் பொடி - ஒரு தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி


 

வெண்ணெயை ஒரு பாத்திரத்தில் எடுத்து தேய்த்துக் கொள்ளவும். அதனுடன் பெருங்காயம், உப்பு, காரப் பொடி, எள்ளு, கடலைப்பருப்பு போட்டு நன்கு கலந்து பிறகு, மாவை போட்டு, நன்கு பிசையவும். வாசனைக்கு தேங்காய் எண்ணெய் ஊற்றவும்.
தாளில் தட்டையை தட்டவும்.
தட்டை வேக வேண்டும் என்பதால் ஊதுபத்தி குச்சியால் சிறு துளைகள் போட்டு கொள்ளவும். பிறகு பொரித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

நான் இன்று தட்டை செய்தேன். சுவை நன்றாக இருந்தது.
செல்வி.

சவுதி செல்வி