இக்ளூ & பென்குயின் பகுதி - 1

தேதி: October 29, 2013

4
Average: 3.6 (5 votes)

 

இக்ளூ செய்ய:
பாக்கிங் ஃபோம் - உருளைகள் & நீள்சதுர வடிவம்
பெரிய தர்மாகோல் பந்து
கடதாசி
க்ளூ
ப்ரஷ்
க்ராஃப்ட் நைஃப்
பெரிய ட்ரே வடிவ பாக்கிங் (தர்மாகோல்)
ஆழமான பெரிய வட்டப் பாத்திரம்
உருளை வடிவ ப்ளாஸ்டிக் டப்பா
மாஸ்கிங் டேப்
பென்குயின் செய்ய:
க்லேட் டாய்லெட் ஏர் ஃப்ரெஷ்னர் டிஸ்பென்சர் (Glade Toilet Air Freshner Dispenser)
ஆரஞ்சு நிற ஃபெல்ட் துணி - கை அகலத் துண்டு ஒன்று
கத்தரிக்கோல்
கருப்பு பர்மனன்ட் மார்க்கர்
சின்னக் கண்கள்
ஹாட் க்ளூ
க்ளூ
மரங்கள் செய்ய:
கபாப் குச்சு
டூத்பிக்
ஃபோம் துண்டுகள்
க்ளூ

 

இக்ளூ செய்வதற்கு கடதாசியை சிறிய துண்டுகளாகக் கிழித்து வைக்கவும். (மேலே ஒட்டுவதற்கு வெள்ளை நிறக் கடதாசி சிறிது தேவைப்படும்).
அதிலிருந்து ஒரு பிடி எடுத்து வெந்நீரில் நனைக்கவும். பாத்திரத்தைக் கவிழ்த்து வைத்து, கடதாசியைப் பிழிந்து க்ளூ போடாமல் ஒட்டவும். (விரும்பினால் பாத்திரத்தின் உட்பக்கத்தில் ஒட்டலாம். உட்பக்கம் ஒட்டினால் காய்ந்ததும் இக்ளூவை எடுக்கும் போது சுலபமாகவும் அதே சமயம் வடிவமும் அப்படியே இருக்கும்).
பாத்திரம் முழுவதும் மறையும்படி மூன்று நான்கு அடுக்குகள் (Layers) வருவது போல ஒட்டவும்.
க்ளூவுடன் சிறிது நீர் சேர்த்துக் கலந்து வைக்கவும்.
ஒட்டி வைத்துள்ள கடதாசித் துண்டுகளின் மேல் கரைத்து வைத்துள்ள க்ளூவை ப்ரஷ்ஷினால் தடவி மீதித் துண்டுகளை ஒட்டவும். ஒட்டியபின் மீண்டும் மேலே ப்ரஷ்ஷினால் க்ளூ தடவி விட்டால் அழுத்தி ஒட்டிக் கொள்ளும். (மூன்று மில்லி மீட்டர் அளவு தடிமனாக வருமாறு சுற்றிலும் கடதாசித் துண்டுகளை ஒட்டவேண்டும்).
இதற்கு மேலாக வெள்ளை நிறக் கடதாசித் துண்டுகளை ஒட்டி மூடவும். முழுவதையும் சுற்றி ஒரு முறை க்ளூ பூசி குறைந்தது இரண்டு நாட்கள் வெயிலில் காயவிடவும். காய்ந்ததும் பாத்திரத்தைவிட்டு கடதாசி வடிவத்தைப் பிரித்து எடுக்கவும்.
பிரித்து எடுக்கச் சிரமமாக இருந்தால் அடியில் க்ராஃப்ட் நைஃபால் ஒரு வட்டம் கீறிக் கொண்டு மீதியையும் பாதியாகப் கீறிப் பிரித்து எடுக்கவும். (பாத்திரத்தில் உள்பக்கத்தில் கடதாசியை ஒட்டி இருந்தால் இவ்வாறு கீறிப் பிரித்து எடுத்து ஒட்ட வேண்டிய அவசியம் இருக்காது).
இக்ளூ நுழைவாயிலுக்குப் பொருத்தமாக உருளை வடிவ ப்ளாஸ்டிக் டப்பாவை எடுத்துக் கொள்ளவும்.
படத்தில் காட்டியுள்ளவாறு டப்பாவை வெட்டி எடுக்கவும்.
வெட்டியதை கடதாசி வடிவத்தில் பொருத்திப் பிடித்து நுழைவாயில் அளவுக்கேற்ப வெட்டி எடுக்கவும்.
வெட்டி எடுத்ததை சரியானபடி வைத்து டேப் போட்டு பொருத்திக் கொள்ளவும்.
கடதாசி வடிவத்தை தர்மாகோல் ட்ரேயில் பொருத்தமான இடத்தில் வைத்து டேப் செய்து கொள்ளவும். (டேப் வெண்மையாக இருந்தால் இடைவெளிகளிகளூடாகத் தெரியாது). ட்ரேயில் படுமிடத்தில் டேப் நீளம் குறைவாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இக்ளூ சுவருக்கு வெளியே டேப் தெரியும்.
சுவர்க் கற்கள் போல ஃபோம் துண்டுகளை ஒட்டவும். முதலில் ஃபோம் துண்டுகளை அளவு வாரியாகப் பிரித்து வைக்க வேண்டும். கீழ் வரிக்கு பெரிய துண்டுகளும் மேலே போகப் போக ஒவ்வொரு வரிக்கும் சற்று சிறிய துண்டுகளாகவும் ஒட்டிவரவேண்டும். அப்போதுதான் வளைவு சரியாக வரும். (அடுத்தடுத்த வரிகள் ஒட்டும் போது பொருத்துகளின் இடைவெளியில் அடுத்த துண்டு வந்தால் பார்க்க கற்கள் அடுக்கிக் கட்டியது போலவே இருக்கும்). வாயிலின் ஒரு பக்கம் ஆரம்பித்து பின்னால் ஒட்டிப் போய் மூன்றில் ஒரு பங்கு ஒட்டி முடிந்ததும் மீண்டும் வாயிலில் ஆரம்பித்து மறுபக்கமாக ஒட்டி வந்தால் பாதிக்கற்கள் போல பொருத்தும் இடங்கள் பின்பக்கம் மறைவாகப் போய் விடும்.
ஃபோம் பந்தை சரி பாதியாக இல்லாமல் பெரிதும் சிறிதுமான இரண்டு துண்டுகளாக வெட்டவும்.
சிறிய துண்டை இக்ளூ கூரை மத்தியில் ஒட்டவும். மீதிக் கூரையில் ஃபோம் துண்டுகளை நிரப்பி ஒட்டவும்.
நுழைவாயின் ஓரங்களில் காணப்படும் இடைவெளிகளுக்கு அளவாக ஃபோம் துண்டுகளை வெட்டி ஒட்டி நிரப்பவும்.
வாயிலைச் சுற்றிலும் ஃபோம் ஒட்டிக் காயவிட்டால் இக்ளூ தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்