தேதி: October 29, 2013
இக்ளூ செய்ய:
பாக்கிங் ஃபோம் - உருளைகள் & நீள்சதுர வடிவம்
பெரிய தர்மாகோல் பந்து
கடதாசி
க்ளூ
ப்ரஷ்
க்ராஃப்ட் நைஃப்
பெரிய ட்ரே வடிவ பாக்கிங் (தர்மாகோல்)
ஆழமான பெரிய வட்டப் பாத்திரம்
உருளை வடிவ ப்ளாஸ்டிக் டப்பா
மாஸ்கிங் டேப்
பென்குயின் செய்ய:
க்லேட் டாய்லெட் ஏர் ஃப்ரெஷ்னர் டிஸ்பென்சர் (Glade Toilet Air Freshner Dispenser)
ஆரஞ்சு நிற ஃபெல்ட் துணி - கை அகலத் துண்டு ஒன்று
கத்தரிக்கோல்
கருப்பு பர்மனன்ட் மார்க்கர்
சின்னக் கண்கள்
ஹாட் க்ளூ
க்ளூ
மரங்கள் செய்ய:
கபாப் குச்சு
டூத்பிக்
ஃபோம் துண்டுகள்
க்ளூ
இனி பென்குயின் செய்வதற்கு க்லேட் டாய்லெட் ஏர் ஃப்ரெஷ்னர் டிஸ்பென்சரில் (Glade Toilet Air Freshner Dispenser) ஸ்ப்ரே பாட்டிலை நீக்கிவிட்டு டிஸ்பென்சரை எடுத்துக் கொள்ளவும்.

அதன் பின்பாதியில் மார்க்கர் கொண்டு இறக்கைகளை வரையவும்.

பாதங்களை ஃபெல்ட் துணியில் வெட்டி எடுக்கவும்.

டிஸ்பென்சர் அடியில் இரண்டு பாதங்கள் இருக்கும். அங்கு ஹாட் க்ளூ வைத்து ஃபெல்ட் துணியில் வெட்டி எடுத்த பாதங்களை ஒட்டவும்.

அலகுகளுக்கு, இரண்டு சிறிய முக்கோணங்கள் வெட்டிக் கொள்ளவும். இரண்டையும் தனித் தனியே பாதியாக மடித்து ஒன்றினுள் ஒன்று வருமாறு பிடிக்கவும். (கீழ் அலகு உள்ளேயும் மேல் அலகு வெளியேயும் வரும்) அப்படியே சேர்த்தாற் போல் டிஸ்பென்சர் துவாரத்தினூடாகச் செலுத்தவும்.

அலகு அமைப்பைச் சரி செய்யவும். திருப்தியானதும் உட்புறம் ஹாட் க்ளூ நிரப்பிக் காயவிடவும்.

கண்களைச் சரியான இடத்தில் க்ளூ கொண்டு ஒட்டிவிடவும். பென்குயின் தயார்.

மரங்கள் செய்வதற்கு நீளமான குச்சியில் உருளை வடிவ ஃபோம் துண்டுகளைக் குற்றி தண்டினைத் தயார் செய்யவும்.

இலைகளுக்கு டூத் பிக்கை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். அவற்றைக் கொண்டு, ஒரு ஃபோம் துண்டைச் சுற்றி நான்கு அல்லது ஐந்து துண்டுகளை இப்படிப் பொருத்தவும். இதனை தண்டின் மேல் சொருகினால் மரம் கிடைக்கும். அதனைத் தேவையான இடத்தில் குற்றி விடலாம். (எல்லாச் சந்தர்ப்பங்களிலும் குச்சுகளின் இரண்டு பக்கமும் க்ளூ வைக்கவும்).

சிறிய செடிக்கு டூத் பிக்கில் ஒரு உருளை வடிவ ஃபோமைக் குற்றவும். நீள்சதுர ஃபோமை சிறியதாக வெட்டிக் கொண்டு அதன் மேல் ஒட்டிக் காயவிடவும்.

தர்மாகோல் ட்ரேயின் மீதி இடத்தில் தயார் செய்த பறவைகள், மரங்கள் மற்றும் செடிகளை உங்கள் ரசனைக்கேற்ப வைத்து அலங்கரிக்கவும்.

Comments
இமா
வாவ்... பார்த்ததும் டீம் என்று நினைத்தேன். அழகு... மிக அழகு. வாழ்த்துக்கள். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
இக்ளூ & பென்குயின் பகுதி - 2
வாவ் மிகவும் அழகாக உள்ளது. வாழ்த்துக்கள்.
இமா
பென்குயின் ரொம்ப அழகா இருக்கு :) இக்ளூ அதுக்கு பக்கத்தில 2 மரம் இதெல்லாம் ரொம்ப பொறுமையா அழகா பண்ணியிருக்கீங்க வாழ்த்துக்கள் இமா :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
நன்றி நட்புகளே!
//டீம் என்று நினைத்தேன்.// ;)) இல்லையா பின்ன! ;) இங்க இருக்கிற எல்லோருமே ஒரு வகையில் டீம்தானே வனி! ஜாலியா இருக்கு உங்க கமண்ட் படிச்சதும். மிக்க நன்றி. :-)
ஹாய் கவிசந்துரு!! மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கும் என் அன்பு நன்றி.
//பக்கத்தில 2 மரம்// ஷுஷ்ஷ்!!! ;)))) அதுக்கு மேல மூணு அணில் இருக்கிறது தெரியலயா அருளுக்கு!!
- இமா க்றிஸ்
இமாம்மா,
இக்ளூ & பென்குயின் ரொம்ப அழகு & அருமையா இருக்குங் வாழ்த்துக்கள் :-)
நட்புடன்
குணா
இமா
வாவ் இமா சூப்பர். மிகவும் அழகா இருக்கு.
இமா, அருள்
// ஷுஷ்ஷ்!!! ;)))) அதுக்கு மேல மூணு அணில் இருக்கிறது தெரியலயா அருளுக்கு!!// - முடியல சாமி முடியல... ஆனா இந்த அணிலை நான் “ஷுஷ்ஷ்” படிச்சதும் எதிர் பார்த்தேன். ;)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
இமா ,வனி
அட வீட்ல அணிலுகூடவே திரியுறதால இந்த அணில மிஸ் பண்னிப்புட்டேன் :P
//ஷுஷ்ஷ்!!// அணிலுக்கு ஷூவெல்லாம் போட்டிருக்கீங்களா ;) ( எப்படியோ சமாளிச்சா சரிதான்)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
இமா சூப்பர்
இமா
சூப்பர்.பென்குயின் ரொம்ப க்யூட்டா இருக்கு.அப்படியே உள்ளங்கையில் எடுக்க தோணுது பா.எல்லாமே ரொம்ப அருமையா இருக்கு இமா