'ஈறு கரைவது'

nan 6 month pregnent enaku 2 month ah pallula irunthu blood varuthu ithu normala. bresh pannumpothu and thoongi elunthirikumpothu blood varuthu. ithuku solution iruka dr ta consult pannanuma. ithunala ethum problem illele la en doubt ta clear pannunga dear friends. healthy food irunthalum sollunga. and kunguma poo intha monthla irunthu sapdalaama

enakkum intha pblm undu athu ellarkum normal than enakku ipa oru grl baby irukka athulam onumilla dnt worry

nanti pl reply vayyan@yahoo.com

hai thank u so much for ur reply

//pallula irunthu blood varuthu // இல்லைங்க. பல்லுல இருந்து வரல. ஈறுல இருந்து வருது. ஈறு கரையுறதுதான் காரணம். //ithu normala. // கர்ப்பமாக இருக்கும் போது நிறையப் பேருக்கு இருக்கும் பிரச்சினைதான். ஆனால் நீங்க 'நார்மலா' என்று கேட்கிறதை... 'இப்படி இருந்தால் பிரச்சினை இல்லையா?' என்று கேட்கறீங்கன்னு எடுத்துக்கறேன். 'நார்மல்' இல்ல. ;) தேவையான சத்து எல்லாம் உங்க உடம்புக்குக் கிடைச்சு இருந்தா நிச்சயம் இப்படி ஆகி இருக்காதுல்ல! இப்போ இருக்கிறதை விட இனி வரும் நாட்களில் குழந்தைக்கு அதிகம் ஊட்டச்சத்து போய்ரும். உங்க பிரச்சினை அதிகமாக சான்ஸ் இருக்கு.

//ithuku solution// உங்க உணவு முறையைக் கவனிங்க. சாப்பாட்டுல பழங்கள் கீரைகள் நிறைய சேர்க்கிறீங்க இல்ல! பல் துலக்குறதை இதற்காக குறைச்சுர வேணாம். அதனால ரத்தம் வரல. சாஃப்ட் ப்ரஷ்தானே யூஸ் பண்றீங்க? இல்லாட்டா அதுக்கு மாறுங்க. மௌத் வாஷ் கொஞ்சம் ஹெல்ப் பண்ணும். //iruka dr ta consult pannanuma.// பண்ணினா நல்லதுதானே. நாங்கல்லாம் சும்மா குருட்டாம் போக்குல அபிப்பிராயம் சொல்லப் போறோம். உங்களை பார்க்கக் கூட இல்லை. டாக்டரும் இல்லை. ;)) டென்டிஸ்ட்ட காட்டலாம். இல்லாட்டா உங்க டாக்டர்ட்ட பேசுங்க.

//ithunala ethum problem illele // இல்ல போலதான் தெரியும். ஆனா பிரச்சினை ஆகாது என்கிறது இல்லை. ஈறு கரைய ஆரம்பித்தால் சிலருக்கு சிலகாலத்தின் பின் சரியாகி விடும். அப்போது எந்த அளவில் ஈறு இருக்கிறதோ அப்படியே இருந்துவிட்டால் பிரச்சினை இல்லை. கரைந்து போனது திரும்ப பழைய நிலைக்கு வளருமா என்றால், இல்லை. ஓரளவுக்கு மேல் ரிக்கவர் ஆகாது. சிலருக்கு நிற்காமல் அப்பப்ப கொஞ்சம் கொஞ்சம் கரைஞ்சுட்டே போகும். அதனால் அளவுக்கதிகமாக கரையும் முன்னால் நிறுத்த முடிந்தால் நல்லது. கவனியுங்கள். ஒவ்வொருத்தர் உடல்நிலை ஒவ்வொரு விதம். யாருக்கு எந்த அளவு பாதிப்பு வரும் அல்லது வராது என்பது சொல்ல முடியாது. போய் காட்டி என்ன சொல்றாங்க என்று கேளுங்க. ஒன்றும் ஆகாது என்று சொன்னால் நிம்மதியாக இருப்பீங்க.

முரசு கரைவது அதிகமாக இருந்தால் பாதிப்பு இப்போ தெரியாது. பெருசா கவனத்திற்கும் வராது. டெய்லி கண்ணாடி பார்த்து ஒப்பிட்டுக் கொண்டு இருக்க யாருக்கு நேரம் இருக்கும்? திடீர்னுதான் கவனத்துக்கு வரும். :-) என்ன பாதிப்பு வரும்? பற்கள் சப்போர்ட் இல்லாமல் பாட்டுக்கு ஒவ்வொரு டைரக்க்ஷன்ல திரும்பப் பார்க்கும். கடிக்கிறது கவனமா இருக்க வேணும். சிரிக்கவும் பயமா இருக்கும். பல்லு அடைக்கிறது போலல்லாம் இல்ல இது. இப்ப இருந்தே கவனமா இருங்க.

த்ரெட் தலைப்பை 'ஈறு கரைவது' இல்லாட்டா வேற ஏதாவது பிற்காலத்தில் தேடுறவங்க கண்டுபிடிக்கக் கூடிய மாதிரி மாத்தி விட்டுருறீங்களா ப்ளீஸ். 'க்ளியர் மை டவுட்' என்று இருந்தால் உங்களைத் தவிர நான் தட்டினது வேறு யாருக்கும் பயன்படாது.

தமிழ்ல தட்ட முடியுமான்னு பாருங்க. படிக்க சுலபமாக இருக்கும்.

‍- இமா க்றிஸ்

இமா நிங்கள் சொன்ன பதில் என்னை மிகவும் சந்தோஷ படுதியது. மிக்க நன்றி. தமிழில் டயிப் பண்ணுவதை இப்போதுதான் கண்டுபிடிதேன். dr ta tuesday poren. imma nenga niraiya peruku romba aaruthalana vishayangalai sollringa romba thanks. ivlo care eduthu reply pandringa very happy. then sorry imma tamil type late aguthu nalla train pannitu fulla tamila type pandren ok thank u. neenga sonna mathiri heading mathiten

மேலும் சில பதிவுகள்