2 வயது பெண் குழந்தைக்கு

என் 2 வயது பெண் குழந்தைக்கு motion போக ரொம்ப கஷ்டபடுரா, என்ன பண்ண? DR. கிட்ட கேட்டேன்,juice கொடுக்க சொன்னா ங்க. எல்லாம் try பண்ணிடேன். 1 week akuthu pls give any urgent suggestion.

அன்பு கௌரி,

கிஸ்மிஸ் பழம்(காய்ந்த திராட்சை) கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி, 7-8 பழங்களை வென்னீர் ஊற்றி, முதல் நாள் இரவே ஊற வெச்சிடுங்க. மறு நாள் காலை, ஊறிய பழங்களின் சாறை, குழந்தைக்குக் கொடுங்க. இது மாதிரி, 4 -5 நாளைக்கு, தொடர்ந்து கொடுக்கலாம்.

குழந்தை குடிக்கும் ஸிப்பரில், பொறுக்கும் சூட்டில், வென்னீர் கொடுங்க,சாப்பிடுவதற்கு குழைவாக சாதம் வடித்து, நிறைய தயிர் ஊற்றி, ஊட்டுங்க. உஷ்ணம் தணிந்தாலே, டாய்லெட் போவது சீராகும்.

சிறிய வெள்ளை காட்டன் துணியை பச்சைத் தண்ணீரில் நனைத்து, குழந்தையின் தொப்புளின் மேல் போட்டு விடுங்க.

இன்னும் மற்ற தோழிகளும் வந்து சொல்வாங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

தோழி கௌரி இரவு தூங்க செல்லும்முன் கொடுக்கும் பாலில் 2 (மட்டுமே
,இதற்குமேல் கொடுத்தால் வயிறு கட்டிக்கும்) பேரீச்சம் பழம் அரைத்து கொடுத்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

என்னுடைய குழந்தைக்கும் இதே பிரச்சனை இருந்த போது, இதே போன்று இங்கே உதவி கேட்டிருந்தேன். உலர்ந்த திராட்சை நல்ல தீர்வு என்றாலும் உடனடி தீர்வாக இருக்கவில்லை. ஒருவர் இங்கே சொல்ல தயக்கமாக இருக்கின்றது என்று எனக்கு போன் செய்து ஒரு பாட்டி வைத்திய முறை சொன்னார். அதை முயன்று பார்த்த போது, நம்பமுடியாத வகையில் உடனடி பலன் கிடைத்தது. அதன்பிறகு சில கால இடைவெளியில் மூன்று நான்கு முறை அதை கடைபிடித்து இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டிருக்கின்றோம். விருப்பமிருந்தால் முயற்சித்து பாருங்கள். முருங்கை காம்பில் விளக்கெண்ணெய்யை தோய்த்து, ஆசன வாயினுள் வைக்க வேண்டும். மென்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக முருங்கை இலை காம்பினை சொல்லி இருக்கின்றார்கள் என்று நம்புகின்றேன். முருங்கை குச்சியை வைத்து முயற்சி செய்துவிடாதீர்கள்.. :-)

மிக்க நன்றி, தோழிகளே, விள்க்கெண்னெய் முயற்சி செய்தும் பலன், இல்லை மிகவும் கவலை யாக வுள்ளது.Dry graps try panrean

black dates or normal dates pls reply me.

அட்மின் அண்ணா சொன்னதை நானும் கேட்டிருக்கேன்... வெத்தலை காம்பை பயன்படுத்த சொன்னாங்க. என் மகளுக்கு உதவும் ஒன்னு உங்களுக்கு உதவுதா பாருங்க... நான் இதை தவிற வேறு எதுவும் செய்வதில்லை இப்போது. வெதுவெதுப்பான 1/4 கப்புக்கும் குறைவான நீரில் 2 - 3 தேக்கரண்டி சர்க்கரை கலந்து குடிக்க கொடுங்க. குடிக்க கொடுக்கும் போதும் நீர் வெது வெதுப்பாக இருப்பது அவசியம். இது எனக்கு மருத்துவர் சொன்னது தான். நல்ல பலன் தந்தது. இதை கொடுத்தால் குழந்தை மோஷன் போக முயற்சிக்கும், மோஷன் வெளி வராம சிரமம் இருந்தால் அண்ணா சொன்னது போல் விளக்கெண்ணெய் கை கொடுக்கும்.

இந்த சர்க்கரை நீர் உங்களுக்கு பலன் தந்தா இப்படி நாளாக விடாம இரண்டாவது நாளே இதே கொடுங்க. குழந்தைக்கும் சிரமம் இருக்காது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

காலையில் பால் குடித்ததும் வெந்நீர் குடிக்க வைங்க....பால் பாதி தண்ணிர் பாதியா குடுங்க..
நார் சத்துள்ள பழங்கள் நிறைய சேருங்க....

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

Add hot water IN THE GRIPE WATER and give it to three times.

I AM LOOKING FOR A GOOD SOUTH INDIAN MUSLIM FRIEND IN DAMMAM.

கௌரி நார்மல் பேரீச்சைதான் நான் கொடுத்தேன்.
முருங்கை காம்பு, வெற்றிலை காம்பு வைத்தியம் போலவே, புளிகோம்பு என்று சொல்வார்கள், புளியுடன் நார் போல் சிறிது குச்சிபோல(நார்) இருக்கும். அதுவும் சிறந்த பலன் கொடுக்கும். குச்சி அல்ல, நார்போன்ற பகுதி புளியுடன் ஒட்டியவாறு இருக்கும். புளியன் பழமாக இருக்கும் பொழுது மேலிருக்கும் ஓடு போன்ற தோல் பகுதியை உடைத்தோமானால் புளியுடன் இருக்கும் அதை ஆசனவாயில் வைத்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். இதற்கு விளக்கெண்ணைய் தடவ வேண்டியதில்லை.

பொதுவாகவே ஒரு வயதுக்கு மேல் ஆன குழந்தைகளுக்கு பருப்பு வேகவைத்து மசித்து கொடுப்போம். பருப்பு வேக வைக்கும் போதே 2 ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து வேக வைத்தோமானால் பருப்பும் நன்றாக வேகும், இது போன்ற பிரச்சினைகள் வராது. பாலில் நனைத்த பிஸ்கட் வகைகள் கொடுத்து வந்திருந்தால் இனிமேல் அப்படி கொடுக்காமல் இருப்பதும் நல்லது. இது சாதாரணமாக இந்த வயது குழந்தைகளுக்கு வருவதுதான். பல் முளைத்து கடித்து சாப்பிட பழகியிருந்தால் கொய்யா, பப்பாளி, வாழைபழம் அவ்வப்பொழுது கொடுத்து வாருங்கள்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ரொம்ப தேங்க்ஸ் தோழமைகளே, நல்ல குறிப்புகள் குடுத்தீருகீங்க, மருத்துவரிடம் சென்றேன். அவர் மருந்து கொடுத்த பின்பு தான் சரி யானது, இனி கவனம் எடுத்துக் க் கொள்கிறேன்.sorry for late reply,,,

மேலும் சில பதிவுகள்