என் சமையல் அறையில் - முசி

முசி சமையலறை


என் சமையலறை மிகவும் சிறியது என்றாலும், 12 வருடமாக அதை பராமரித்து வருகிறேன். முதலில் நுழைந்த உடன் ஃப்ரிட்ஜ் இருக்கும். நான் உபயோகிப்பது அவனுடன் சேர்ந்த கியேஸ் அடுப்பு. அதன் மேலே சிம்னி பொருத்தப்பட்டுள்ளது, அடுப்பின் பக்கத்தில் சிங்க் இருக்கும். சுவற்றில் பாலித்தின் ஃப்லிம் ஒட்டி உள்ளேன். மாதம் ஒரு முறை மாற்றி எண்ணெய் பிசுக்கு வராமல் பாதுகாக்கலாம். மேலே பாத்திரம் மாட்ட ஒரு செல்ஃப் வைத்து, அதன் மேல் மசாலா டப்பாக்கள் வைத்து உள்ளேன். அருகே ப்ரெட் டோஸ்டரும் வைத்துள்ளேன்.

my kitchen
 

சிங்க்கின் அருகே பாத்திரங்கள் கழுவி வைக்க ஒரு ட்ரேயுடன் கூடிய கூடை வைத்துள்ளேன். கரண்டி போடும் பாத்திரமும் அருகே உள்ளது. மேலே இன்ஸ்டன்ட் வாட்டர் ஹீட்டர். அதன் அருகில் ஒரு கப்போர்டும், அதன் கீழ் மைக்ரோவேவ் அவனும் உள்ளது. கீழே இருக்கும் கப்போர்டில் பாத்திரங்கள், நாண்ஸ்டிக் பாத்திரங்கள், டப்பாக்கள் வைத்துள்ளேன்.

my kitchen
 

அடுப்பிற்கு நேர் எதிரே கிச்சன் கப்போர்டு. டீ கப், உப்பு, ஆயில், மிக்சி என்று அடிக்கடி எடுக்கும் பொருட்களை வெளியில் வைத்து உள்ளேன். எனக்கு ஸ்டோர் ரூம் கிடையாது என்பதாலும் சின்ன சமயலறை என்பதாலும் அதிக பொருள் வைத்து கொள்வதில்லை.

my kitchen
 

மேலே உள்ள கப்போர்டில் காபி பவுடர், டீத்தூள், சீனி, சாக்லெட் பவுடர், இவைகள் இருக்கும். மறுபக்கத்தில் சிறிய பாட்டில் மற்றும் டப்பாக்களில் மசாலாக்கள் வைத்துள்ளேன். அனைத்திலும் என்ன தூள் என்று பெயர் எழுதி இருக்கும். என் சமயலறை பற்றி தெரியாதவர் வந்தாலும் சமைக்க முடியும். மற்ற கப்போர்ட்டில் தேவையான மளிகை சாமான்கள் இருக்கின்றன.

my kitchen
 

கரண்டிகள், கத்திகள் போன்ற அனைத்தும் வகைப்படுத்தி தனித் தனி ட்ரேயில் வைத்திருக்கிறேன்.

my kitchen
 

கீழே இருக்கும் அலமாரியில் விருந்தினர்கள் வந்தால் உபயோகிப்பதற்காக பளிங்கு கோப்பைகள், கண்ணாடி மற்றும் பீங்கான் பாத்திரங்களை வைத்துள்ளேன். இதுதான் என் கிச்சன்.

my kitchen
 

Comments

கிச்சன் நல்லா இருக்கு முசி, ரொம்ப நல்லாவும் பராமரிச்சுட்டு இருக்கீங்கன்னு தெரியுது. நீங்க சொல்லி இருக்கறத பார்த்தா இவ்வளவு பொருட்களையும் அழகா அதுக்கான இடம் கொடுத்து அரேஜ் பண்ணிருப்பீங்க தெரியுது. எனக்கு அந்த ஸ்பூன் ட்ரேவும் பீங்கான் பொருட்களும் ரொம்ப பிடிச்சிருக்கு.

ஹாய் முசி சிஸ்டர், அஸ்ஸலாமு அலைக்கும்.. உங்க கிச்சனை ரொம்ப அழகா வெச்சிருக்கிங்க.. வாழ்த்துக்கள்.. !! :)

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

அழகான கிச்சன். :) நீட்டா வெச்சிருக்கீங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

akka unga kitchen rombave alaga irukku akka,

Anbe kadavul

musi ur kitchen is so clean..

அழகான அருமையான பகிர்வு.சூப்பராக இருக்கு உங்க கிச்சன்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என் சமையல் அறையில் அருமையாக வெளியிட்ட அட்மினுக்கு நன்றி.
முதல் பதிவுக்கும்,பாராட்டுக்கும் நன்றி,உமா குணா.
வ அலைக்கும் சலாம்,வாழ்த்திர்க்கு மிக்க நன்றி;ஷபி.
உங்க கருத்துக்கும்,நன்றி.வனி.
வாழ்த்திர்க்கு மிக்க நன்றி;மலர் பாலா.
ரொம்ப நன்றி,கலை.
பாராட்டுக்கு மிக்க நன்றி.ஆசியா உமர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

I need some helps to how to make my dress self

akka unga kitchen super

all is well

உங்கள் சமையலறை மிக நேர்த்தியாக இருக்கிறது.

‍- இமா க்றிஸ்

hi, na samayal tips podanum means yepadi join panradu pa... anyone knows?

Raziya Manzooor

Nice kitchen.you maintaining it Properly Madam.Super.

No pains,No gains

ANANTHAGOWRI.G

அழகான அடுக்ககம்

மிகவும் அழகாக‌ இருக்கிறது

Hai musi sinna kichanil ivalavu azhka vanchierukika i like it

simply super

வாழு வாழ விடு