swing ல் தூக்கம்

என் பையன் எப்பொழுதும் ஷ்விங் ல் ஆடிக்கொண்டே தூங்குகிறான். ஷ்விங் ஆப் செய்தால் உடனே எழுந்துவிடுகிறான்.இதனால் பால் செமிக்காமல் வாமிட் எடுக்கிறான்.இந்த பழக்கத்தை மாற்ற என்ன செய்ய வேண்டும்

பிள்ளைக்கு என்ன வயது? ஸ்விங் ஆஃப் பண்றதுன்னா?? இது எந்த வகையான ஸ்விங்? தொட்டில் கட்டுவோமே துணியில் அது போல அமைப்பு உள்ளதா? இல்ல வேறு எதாவது சொல்றீங்களான்னு புரியல. ஏன்னா துணியில் தொட்டில் கட்டி போடும் பழக்கம் இருந்தாலும் ஆட்டும் கை நின்னா பிள்ளைகள் விழித்து ஆள் இருக்காங்களான்னு பார்ப்பாங்க. அதை மாற்றுவது சுலபம் தான். அந்த தொட்டிலே கண்ணில் படாம முதல்ல பார்க்கனும். அதன் பின் அது போல ஒரு சாஃப்ட் துணியை தலையனைகள் மேலே போட்டு இரண்டு பக்கமும் குழந்தையை ஒட்டி வைத்து நடுவில் பிள்ளையை படுக்க விட்டு சில நாட்கள் அவங்ககிட்ட உட்கார்ந்து தட்டி கொடுத்து தூங்க பழகலாம். இப்படி பண்ணும் போது தொட்டிலில் இருப்பது போலவே இருபுரமும் ஒரு அனைப்பும், கூடவே தாய் அருகில் இருக்கும் பாதுகாப்பும் பிள்ளைக்கு கிடைக்கும். நல்லா தூங்க ஆரம்பிச்சுடும். தூங்க வைக்கும் முன் பால் கொடுத்துட்டு அப்படியே போடாதீங்க. நல்லா தட்டிக்கொடுத்து கொஞ்ச நேரம் விளையாட விட்டு பின் தூங்க போடுங்க. அப்ப தான் குடித்த பால் ஜீரனம் ஆகும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி அக்கா.என் பையன் பிறந்து 4 மாதம் 2 வாரங்கள் ஆகிறது.அது பேட்டரியில் இயங்கும் ஊஞ்சல்.நீங்கள் சொன்னது போல தூங்க வைத்து முயற்சி செய்து பார்கிறேன்.உங்கள் பதிவிற்கு நன்றி.

மேலும் சில பதிவுகள்