தங்க நகை & கவரிங்

ஹாய் தோழிகளே

தங்க நகையுடன் கவரிங் நகை இணைத்து போட்டால் அதாவது தங்க செயினுடன் கவரிங் டாலர் போட்டாலோ, ஒரு தங்க செயினும் கவரிங் செயினும் எபோதும் போட்டு இருப்பதாலோ தங்க நகைக்கு எதாவது பாதிப்பு வருமா பதில் போடுங்க ப்ளீஸ்

தங்க நகைகளையும், கவரிங் நககைகளையும் ஒன்றாக,ஒரே பெட்டியில் வைக்கக் கூடாது என்று ஒரு புத்தகத்தில் முன்பு படித்துள்ளேன்.ஆகவே ஒன்றாக அணிவதும் நல்லதில்லை என்றுதான் நினைக்கிறேன்.

தங்கம் மென்மையான உலோகம். தேய்மானம் அதிகம். விரலிலிருந்து கழற்றாமல் தொடர்ந்து அணிந்திருக்கும் மோதிரங்கள் பின்புறம் தேய்ந்து இருப்பதைக் கவனித்திருக்கிறேன்.
வேறு உலோகங்களோடு அணியும் போது தங்கம் தேய்வதற்கான சாத்தியம் இருக்கிறது. மற்றப்படி தன்மை மாறாது. தங்கம் பாதரசம் தவிர்ந்த வேறு எதனோடும் தக்கம் புரிவதில்லை.

‍- இமா க்றிஸ்

தங்க் நகைகளோடு கவரிங் எப்போதாவது போட்டால் கூட அம்மா திட்டுவார். தங்கம் தேய்ந்து போகும் என்பார். எந்த அளவு சரின்னு தெரியாது. ஆனா எப்போதாவது நானும் போடுவது உண்டு எப்போதும் போட்டிருந்தால் தேய்ந்து போகுமோ என்று எனக்கு தோன்றும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

;)) பிழையைத் திருத்த முடியாமல் என் கமண்ட்டின் கீழ் பதிலளித்த வனீஸ்... வாழ்க! ;))

‍- இமா க்றிஸ்

ஹாய் தோழிகளே

எனக்கு பதில் போட்ட தோழிகளுக்கு நன்றி எனக்கு தாலி செயினில் போட ரொம்ப ஆசை ஆனால் தங்க செயன் வாங்க வசதி இல்லை. நான் போட்டு இருக்கும் தாலி தங்கம் ஆனால் மஞ்சள் கயிறில் போட்டு இருகிறேன். அது தான் கவரிங் செயினில் போடலாம் என்று நினைத்தேன். எனக்கு போடலாமா என்று தெரியவில்லை தோழிகளிடம் கேட்கலாம் என்று கேட்டேன் பதில் போடுங்க ப்ளீஸ்

தாலி தங்கத்தில் தான் போடுவாங்க. அதுக்கே 3 1/2, 5 1/2, 7 1/2ன்னு பவுன் கணக்கு சொல்வாங்க. சிலர் 1 1/2யில் கூட இப்பலாம் போடுறாங்க. அதனால் கவரிங்கில் போடலாமா என வீட்டு பெரியவங்ககிட்ட முதல்ல கேட்டுக்கங்க. அப்படி போடலாம்னு சொன்னா மேலே செயின் கீழே வளையத்தில் மஞ்சள் கயிறு கட்டி அதில் தாலி என்று போடலாம். நேராக தாலியை கவரிக் செயினில் போடாமல் இப்படி போடலாம். செயினின் இரு பக்கமும் உள்ள வளைவில் மஞ்சள் கயிறு கட்டி அதிலேயே தாளியை போடலாம். கயிறு உள்ளே இருப்பதால் தெரியாது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தாலி கழுத்தோடு எப்பொழுதும் அணிந்து இருப்பீர்கள். நிச்சயம் கொக்கி தேயும்.
எப்போதாவது வெளியே போகும் ஒரு சமயம் மட்டும் அணிவதானால் பரவாயில்லை.

‍- இமா க்றிஸ்

கவரிங் நககளை அணியும் போது கவனிக்க வேண்டிய டிப்ஸ் என்று ஒரு புத்தகத்தில் படித்தது:
கவரிங் நகைகளை அணியும் போது வியர்வை மற்றும் எண்ணெயின் பிசுபிசுப்பிலிருந்து நகைகளை பாதுகாக்க அணிவதற்க்கு முன் Colourless nail polish கொண்டு கவரிங் நகைகளின் மேல் ஒரு கோட்டிங் கொடுத்து விட்டால் காய்ந்தவுடன் அணிந்து விடலாம்,இதனால் தண்ணீர் பட்டாலும் சேதம் குறைவு,கழுத்திலும் கருமை படராமல் இருக்கும்
மேலும் கழட்டியவுடன் ஒரு மெல்லிய துணி அல்லது டிஷ்யூ பேப்பரினால் துடைத்து விட்டு தான் அதை பூட்டி வைக்க வேண்டும்.

மேலும் சில பதிவுகள்