தேதி: November 29, 2013
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
இஞ்சி துண்டுகள் - ஒரு மேசைக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 7 - 9
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு கப்
கொத்தமல்லித் தழை - ஒரு கப்
புதினா - ஒன்றரை கப்
பெரிய வெங்காயம் - 3
பூண்டு - 6 பல்
உப்பு - ருசிக்கேற்ப
தாளிக்க:
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு, உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
பெருங்காயப் பவுடர் - அரை தேக்கரண்டி
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.

பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். பூண்டு பற்களை தோலுரித்து நறுக்கி வைக்கவும். இஞ்சியை தோல் சீவி, சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, சிவப்பு மிளகாயை வறுக்கவும். பிறகு, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு ஆகியவற்றையும் எண்ணெய் ஊற்றி வதக்கவும். அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் போட்டு ஆறவிடவும்.

ஆறியதும் உப்பு சேர்த்து அரைக்கவும். தண்ணீர் ஊற்ற வேண்டாம். வெங்காயத்தில் இருக்கும் தண்ணீர்ப் பதமே போதுமானது.

புதினா மற்றும் கொத்தமல்லித் தழையை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கறிவேப்பிலையையும் சுத்தம் செய்து கொள்ளவும். வாணலியில் மீண்டும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, கொத்தமல்லித் தழை, புதினா மற்றும் கறிவேப்பிலையை வதக்கி ஆறவைக்கவும். ஆறியதும் மிக்ஸியிலிருக்கும் விழுதுடன், இவற்றையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பெருங்காயப் பவுடரையும் சேர்த்து பொரியவிடவும். தாளித்தவற்றைத் துவையலுடன் சேர்த்து அரைத்தெடுக்கவும்.

சுவையான இஞ்சி புதினா மல்லித் துவையல் தயார்.

இந்தத் துவையலை சுடு சாதத்துடன் நெய் சேர்த்து, லஞ்ச் பாக்ஸுக்கு தயார் செய்யலாம். தயிர் சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி என்று எல்லாவற்றுக்கும் பொருத்தமான சைட் டிஷ். ஃப்ரிஜ்ஜில் வைத்து, ஒரு வாரம் வரை உபயோகிக்கலாம்.
Comments
சீதாம்மா
சீதாம்மா புதினா துவையல் ரொம்ப அருமையா இருக்கு சாப்ட்டு பார்த்து இன்னும் சொல்லுறேன் அந்த கிண்ணத்த என்கிட்ட தாங்க ஏனா நான் தானே முதல்ல வந்தேன் ... :-)
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
புதினா மல்லித் துவையல்
நாவூற வைக்கும் அருமையான துவையல்.
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.
அன்புடன்
உமா
சீதா
இந்தா கிளம்பிட்டேன் புதினா வாங்க... மல்லி இருக்கு, புதினாவும் வாங்கிட்டு இன்னைக்கு இரவே இதுக்காக ரசம் வைத்து, துவையலும் செய்துடுறேன். :) சூப்பர்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
புதினாமல்லி துவையல்
பதிவு போடும்போதே நாவூறுது :) எதுக்கும் தொட்டுக்காம அப்படியே சாப்பிடலாம் போல இருக்கு :) அருமைங்க சீதாமேடம் :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
கனிமொழி
அன்பு கனிமொழி,
முதலில் வந்து பதிவிட்டதற்கு நன்றி.
கிண்ணத்தோட எடுத்துக்குங்க. சாப்பிட்டுப் பாத்து சொல்லுங்க.
அன்புடன்
சீதாலஷ்மி
உமா
அன்பு உமா,
பதிவிற்கும் வருகைக்கும் நன்றி.
அன்புடன்
சீதாலஷ்மி
வனிதா
அன்பு வனிதா,
அவசியம் செய்து பார்த்துட்டு எப்படி இருந்துச்சுன்னு சொல்லுங்க.
அன்புடன்
சீதாலஷ்மி
அருட்செல்வி
அன்பு அருட்செல்வி,
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.
அன்புடன்
சீதாலஷ்மி
துவையல்
சீதா... செய்துட்டனே இன்னைக்கு :) சாப்பிட்டும் பார்த்தாச்சு. மதிய உணவுக்கு கொடுத்து விட, தாளித்த தயிர் சாதம், எலுமிச்சை சாதம், உருளை வருவலும் இந்த துவையலும் தான் இன்னைக்கு மெனு. அருமையான ஜோடி லெமன் ரைஸ்க்கு. ரொம்ப பிடிச்சுது.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா