ரிச் கெக் செய்யும் முறை

எனக்கு திருமண ரிச் கெக் ஒரு மாதம் ஊற வைத்து செய்யும் முறை சொல்லுங்களன்.

http://www.arusuvai.com/tamil/node/9311 இந்த இழையில் ரிச் கேக் செய்முறை இருக்கு ட்ரை பண்ணிப் பாருங்க. நீங்க Jaffnaல எந்த இடம்? நான் நாவலபிட்டி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நான் தற்பொது வவுனியா. ஆம் அக்கா.அந்த பகுதியில் பார்த்தேன். அந்த முறை தவிர வேறு முறை இல்லையா? அதில் உள்ள பொருட்கள் கிடைப்பது கஷ்டமாக உள்ளது

God

இல்லை. பொருட்கள் இவைகள்தான். நான் பேரீச்சம்பழம் சேர்ப்பதில்லை. என் ரெசிபி கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். இந்த குறிப்பில் ரோஸ் வாட்டர் சேர்த்திருக்காங்க. நான் ரோஸ் எசன்ஸ் சேர்ப்பேன். பேக் பண்ணும்போது கேக் ட்ரேக்கு முதலில் 3 நியூஸ் பேப்பர் போட்டு அதன்மேல் ஒயில் பேப்பர் போடுவேன். (அடிபிடிக்காமல் இருக்க) 4 தொடக்கம் 5 மணிநேரம் ஒரே தடவையில் பேக் செய்வேன். முக்கியமான விசயம் எதிலும் துளி ஈரம் இருக்கக்கூடாது.

நான் சேர்ப்பவை.

Cashew 500g, Plums 500g, Raisins 500g, Cherry - 500g, Pumpkin preserve (Puhul dhosi) - 500g, Chaw chaw - 500g, Ginger preserve - 300g, Candied peel 150g, black currents - 250g, golden syrup 1B, Strawberry jam - 1B, Egg 25 margarine 500g icing sug 1kg, venila ess - 1b small, almond ess 1/4 b, rose ess 1/4b, Brandy - 5 teaspoon, Rava - 500g, spice pow 3 teaspn, baking pow - 4 tea spn. இந்த அளவில் செய்யும்போது 175 துண்டுகளுக்கு மேல் வரும். இந்த பொருட்கள் இல்லாமல் ரிச் கேக் இல்லை. வவுனியாவில் இவை கிடைக்காட்டி கொழும்பு வாரவங்ககிட்ட சொல்லலாமே! வேற சந்தேகம் இருந்தா கேளுங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

Thax akka ... Try pannidu solren, அந்த ரெசிபி முறை படியா செய்வது

God

செய்முறை 1
பழங்கள் அனைத்தையும் சிறு துண்டுகளாக வெட்டி, ஜாம், கோல்டன் சிரப், ஆமண்ட் எசன்ஸ், ரோஸ் எசன்ஸ் (அனைத்தும் பாதியளவு) சேர்த்து பிரண்டியையும் சேர்த்து நன்கு கலந்து ஒரு வாரம் வரை மூடி வைக்கவும்.

செய்முறை 2
முட்டையை வெள்ளைக்கரு, மஞ்சள்கரு இரண்டையும் தனித்தையே பிரித்து வைக்கவும். மாஜரினுடன், ஐசிங் சுகர் சேர்த்து அடித்து மஞ்சள் கருவையும் ஒவ்வொன்றாக சேர்த்து அடிக்கவும். வெ.கருவை நுரைக்க அடித்து வைக்கவும். ரவையை வறுத்துக் கொள்ளவும் அல்லது 190 டிகிரியில் 15 நிமிடங்கள் பேக் செய்து கொள்ளவும்.

செய்முறை 3
பழக்கலவையுடன் ரவை, அடித்த வெ.கரு, பேக்கிங்பவுடர், வாசனைத்தூள் சேர்த்து கலந்து பேக்கிங் ட்ரேயில் 4 - 5 நியூஸ்பேப்பர் மற்றும் ஒரு ஒயில் பேப்பர் போட்டு, கேக் கலவையை போட்டு 3- 4 மணித்தியாலங்கள் 150 டிகிரி வெப்பநிலையில் பேக் பண்ணவும். பின் கலவை நன்கு ஆறியதும் ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு மூடி ஒரு மாதம் வைக்கவும். (குறைந்தது 2 வாரம்)

செய்முறை 4

பின் அதனை சிறிய அளவில் உதிர்த்து மிகுதி ஜாம், சிரப், எசன்ஸ் வகை, சேர்த்து பிசைந்து தட்டையாக தட்டி ஆமண்ட் பேஸ்ட் பூசி (விரும்பினால்) துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

ஆமண்ட் பேஸ்ட் செய்முறை.
50 துண்டுகளுக்கு.
முட்டை வெ.கரு - 2
ஐசிங் சுகர் - 250g
முந்திரி (cashew) - 100g (பொடித்துக் கொள்ளவும்)
ஆமண்ட் எசன்ஸ் - ஒரு தே.கரண்டி

வெ.கருவை நுரைக்க அடிக்கவும் (பாத்திரதை கவிழ்த்தால் வழியாமல் இருக்க வேண்டும்) அதனுடன் ஐசிங் சுகர்,பொடித்த முந்திரி,ஆமண்ட் எசன்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.

இது நான் செய்யும் முறை. உங்களுக்கு இலகுவான முறையை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

hai akka ,
rich cake ku mela vara white colour cream eppadi seirathu. athuda receipe and athu epadi seirathu entum sollunka akka. bake pannanuma athai

God

I'll try to do

//rich cake ku mela vara white colour cream// அதுதான் ஆமண்ட் பேஸ்ட். உமா செய்முறை கொடுத்திருக்கிறாங்க. அதை பேக் பண்ணுவதில்லை.

‍- இமா க்றிஸ்

Good

Good

மேலும் சில பதிவுகள்