ஃபால்ஸ் பாக்கெட்

தேதி: December 3, 2013

4
Average: 3.3 (6 votes)

 

ஷர்ட்
பொருத்தமான நிறத் துணி
பொருத்தமான நிற நூல் & ஊசி
தையல் மெஷின்
மெல்லிய கடதாசி
பென்சில்
கத்தரிக்கோல்

 

ஷர்ட் பாக்கெட்டின் மேல் கடதாசியை வைத்து பாக்கெட்டைச் சுற்றி வரைந்து கொள்ளவும்.
வரைந்த பகுதியை மட்டும் தனியாக வெட்டி எடுக்கவும்.
வெட்டி எடுத்ததை வைத்து துணியில் வரைந்து கொள்ளவும்.
படத்தில் காட்டியுள்ளபடி வாய்ப் பக்கம் 2.5 சென்டிமீட்டரும் மீதிப் பக்கங்களில் அரை சென்டிமீட்டரும் விட்டு வரைந்து கொள்ளவும்.
வெட்டும் போது, வாய்ப் பக்கம் இப்படி சற்றுச் சரிவாக வெட்டிக் கொள்ளவும்.
வாய்ப் பக்கத்தை மடித்து ஊசி குத்தி வைக்கவும். (நூல் பிரியும் துணியானால், இங்கு பல்லுக் கத்தரிக்கோலினால் கத்தரித்துள்ள இடத்தில் முதலில் மடித்துத் தைக்க வேண்டும். இங்கு பயன்படுத்தியுள்ள துணி பிரிந்து போகாது. அதனால் மடித்துத் தைக்கவில்லை).
காட்டியுள்ளபடி தையல் மெஷினில் நேர்த் தையல் போடவும்.
கீழ் வளைவுகள் இரண்டிலும் படத்தில் உள்ளது போல கோடுகள் வரைந்து வெட்டிக் கொள்ளவும்.
பிறகு ஓரங்களை கோட்டின் வழியே மடித்து ஊசி குத்தவும்.
பாக்கெட்டின் அமைப்பில் மெஷினில் தைத்து எடுக்கவும்.
ஷர்ட்டின் உட்புறம் வெளியே வருமாறு திருப்பிப் போட்டு, அதில் ஏற்கனவே பாக்கெட் எங்கே இருக்கிறதோ அதே இடத்தில் இப்போது தைத்து வைத்துள்ள பாக்கெட்டை வைத்து ஊசி குத்திக் கொள்ளவும்.
சுற்றிலும் கையால் தைத்து எடுக்கவும். (முன் பக்கம் தையல் தெரியக் கூடாது).
ஷர்ட்டின் முன் பக்கம் இது.
உட்புறம் தைத்த பாக்கெட் இது.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

நான் தான் ஃபஸ்ட்.. குட் ஐடியா உள்பாக்கெட் நல்ல யூஸ்ஃபுல். இமா இப்படி சிலர் வைத்திருப்பதை நான் பார்த்திருக்கேன் இப்போ ரெடிமேடு ஷர்ட்டுக்கு பாக்கெட் மட்டும் நாமளே தைச்சுகலாம் போல.

ஃபால்ஸ் பாக்கெட் செய்முறை .... தெளிவான விளக்கத்துடன் அழகான இருக்கு...

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

pocket making procedure is clearly told thats nice.

Don't cry because it's over, smile because it happened.

keerthana

neenga yeppadi unga kaivinai porulai pathvu pandringa pls help me.

yennaku yeppadi solunga?

yenna nan niraya product details vaichiruken

நிகிலா, கனிமொழி & கீர்த்தனாவுக்கு என் நன்றிகள்.

நாகு.. இந்தப் பதிலைப் பார்ப்பீர்களா தெரியவில்லை. கீழே //எங்களைப் பற்றி, கேள்வி-பதில், நிபந்தனைகள், தமிழ் எழுத்துதவி // என்றெல்லாம் இழைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றையும் ஒருமுறை தட்டிப் படித்துப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்