சுசியம்

தேதி: December 4, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

கடலைப்பருப்பு - அரை கிலோ
சீனி - அரை கிலோ + 2 தேக்கரண்டி
தேங்காய் - அரை மூடி
மைதா மாவு - ஒன்றரை கப்
சீரகம் - ஒன்றரை தேக்கரண்டி
ஏலப்பொடி - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

கடலைப்பருப்புடன் ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து முக்கால் பதம் வேக வைத்து ஆறவைக்கவும். மைதா மாவுடன் இரண்டு தேக்கரண்டி சீனி, மஞ்சள் பொடி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும்.
கடலைப்பருப்பு ஆறியதும் மிக்சியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.
தேங்காயைத் துருவி சிவக்க வறுக்கவும். சீனியைப் பொடி செய்து கொள்ளவும், சீரகத்தை சிவக்க வறுத்து பொடி செய்யவும்.
பொடி செய்த கடலைப்பருப்புடன், பொடி செய்த சீனி, வறுத்த தேங்காய் துருவல், சீரகப்பொடி மற்றும் ஏலப்பொடி சேர்த்து பிசையவும்.
பிசைந்த கலவையை உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருண்டைகளை மைதா மாவுக் கரைசலில் தோய்த்தெடுத்துப் பொரித்தெடுக்கவும்.
சுவையான சுசியம் தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

அக்கா சுசியம் பார்க்கும்போதே சாப்டனும் நு ஆசையா இருக்கு அக்கா...
இந்த வீக் எண்ட் செய்துட்டு சொல்லுறேன் அக்கா.... சூப்பர் டிஷ் ஆ போட்டு அசத்துறீங்க அக்கா... :-) :-) :-)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

குறிப்பை வெளியிட்ட பாபு அண்ணா & டீமுக்கு நன்றி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

பதிவுக்கு நன்றி கனி. செய்துட்டு எப்டி இருந்ததுன்னு சொல்லுங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

wow....super yenaku indhu romba pidikum...naanum try panrean ma

பதிவுக்கு நன்றி. செய்துட்டு சொல்லுங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

குறிப்பு நல்லா இருக்கு.. வாழ்த்துக்கள்!!

வெற்றி பெற்ற பின், தன்னை அடக்கி வைத்துக் கொள்பவன், இரண்டாம் முறை வென்ற மனிதனாவான்.

என்றும் அன்புடன்
சிவிஸ்ரீ

வாழ்த்துக்கு நன்றி சகோதரி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

susiyam nalla iruku. Maitha mavuku pathila arisi mavu use pannalama.

Don't cry because it's over, smile because it happened.

keerthana

பதிவுக்கு நன்றி கீர்த்தனா. தனி அரிசிமாவு வேணாம் மைதாவோட கலந்து போடுங்க. அரிசிமாவு மட்டும் போட்டா hard ஆயிடும்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

சுசியம் ​ரொம்ப அருமையா கலரே கண்ணைப்பறிக்கும் படி அசத்திட்டீங்க :-)
வாழ்த்துக்கள்ங்க

நட்புடன்
குணா

thanks for ur reply. I saw ur some receipes thats all nice.

Don't cry because it's over, smile because it happened.

keerthana

நன்றிங் தம்பிங். எங்க காணாம போயிட்டிங்க?

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

Tnk u Keerthana.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

கொஞ்சம் வேலைப்பளு காரணமாக வர இயலவில்லைங் அக்காங் :-)

நட்புடன்
குணா

LIKE

நான் BA,B.ed(tamil) படிச்சிருக்கேன் ஏதாவது job இருந்தா சொல்லுங்க pls help me

Megala