தேதி: November 11, 2006
பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
மைதா - 3/4 கப்
ரவை - 1 கப்
சீனி - 1/2 கப்
பேக்கிங் சோடா - 1 டீஸ்பூன்
தேவையான அளவு தண்ணீர்
உப்பு - ஒரு சிட்டிகை
ஒரு அகன்ற பாத்திரத்தில் மைதா, ரவை , உப்பு,பேக்கிங் சோடாவுடன் சிறிது நீர் விட்டு நன்கு பிசைந்துக் கொள்ளவும்.
15 நிமிடங்கள் இதை ஊற வைக்கவும்.
பின்பு, சர்கரைச் சேர்த்து 10 நிமிடஙகள் ஊற வைக்கவும்.
எண்ணை சட்டியில் பொரித்து எடுப்பத்ற்க்கான அளவு கடலெண்ணை விட்டு, எண்ணை சூடானதும் பிசைந்து வைத்துள்ள மாவினை சிறு எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கி எண்ணையில் பொரித்து எடுக்கவும்
Comments
டியர் வாணி பாலகிருஷ்ணன்!
டியர் வாணி!
எனககு ரொம்பவும் பிடித்தமான கேக் இது. தமிழ்நாட்டில் இந்த கேக்கை டீக்கடைகளில் வைத்திருப்பார்கள். வாங்க சங்கடபட்டுக்கொண்டு ஏக்கத்தோடு சென்றிருக்கிறேன். ரொம்பவும் நன்றி!