செல்லப்பிராணிகள்

மனிதனுக்கும் பிராணிகளுக்குமான உறவு அறிவியல், புவியியல், வரலாறு என எல்லாவற்றிலும் விவரிக்கப்பட்டுவிட்ட ஒன்று. மனிதர்களைச் சிந்திக்கத் தெரிந்த மிருகம் என்றுதான் சொல்கின்றார்கள். மனிதனின் பரிணாம வளர்ச்சி மிருக இனத்தில் இருந்து தொடங்கியது என்றக் கோட்பாட்டை இன்றைக்கு பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். மனிதர்கள் ஆறறிவு கொண்டவராய், விலங்குகளிடம் இருந்து வித்தியாசப்பட்டு இருந்தாலும், விலங்குகளுடனான தொடர்பை முற்றிலும் துறந்துவிடவில்லை. துணைக்காக, மகிழ்ச்சிக்காக, உணவிற்காக என்று மனிதர்கள் பிராணிகளைத் தங்களுடன் வைத்து வளர்க்கத் தொடங்கினர். இதில் துணைக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் வளர்க்கப்படும் பிராணிகளை செல்லப் பிராணிகள் என்கின்றோம்.

செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் நம்மிடம் ஏற்படும் சந்தோசத்திற்கு அளவே இல்லை என்றே சொல்லலாம். பூனையோ, நாய்க்குட்டியோ இல்லை எதுவாக இருப்பினும் அதைக் குட்டியிலிருந்து வளர்க்கும் போது அதனுடைய ஒவ்வொறு செயல்களும் நமக்குள் ஒரு புத்துணர்வையும் சந்தோசத்தையும் ஏற்படுத்தும். நாய், பூனை, முயல் மற்றும் பலவிதமான பறவைகள் போன்ற செல்லப்பிராணிகள் வளர்ப்பது நம் மனதுக்கும் உடலுக்கும் சந்தோசத்தைக் கொடுக்கின்றது. நம் கவலைகள், துன்பங்களை மறந்து அவற்றுடன் ஆனந்தமாகப் பொழுதை கழிக்க வாய்ப்புக் கிடைக்கின்றது.

பலவகையான பிராணிகளை செல்லப்பிராணிகள் என்று வளர்த்தாலும், நம்மில் அதிகமானோர் விரும்புவது நாய்களைத்தான். மிருக இனங்களில் நாய்கள்தான் மனிதர்களுக்கு உற்ற தோழர்கள். இவைகளின் புத்திசாலித்தனமும், நன்றியுணர்வும் நம்மை வியக்க வைக்கும்.

நாய்கள் வளர்ப்பில் கவனிக்க வேண்டிய சில விசயங்களை இங்கே பட்டியலிட விரும்புகின்றேன்.

முதலில் நாய்களுக்கு பெயர் இடுவது பற்றி சில குறிப்புகள். நாய்களுக்கு மொழி, அர்த்தம் எதுவும் புரியாது என்றாலும், ஓசையை எளிதாகப் புரிந்து கொள்ளும் திறன் கொண்டவை. அந்த ஓசை அவைகள் விரும்பும் வண்ணம் இருக்க வேண்டும். ஒரு சில பெயர்களை, அதாவது ஓசையை நாய்கள் பெரிதும் விரும்புகின்றன என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அப்படி பெயரிடும்போது, குட்டியில் இருந்து ஒரே பெயரை பயன்படுத்த வேண்டும். அடிக்கடி பெயர்மாற்றம் செய்யக்கூடாது.

செல்லப்பிராணியான நாய்களுக்கு அவைகளுக்கெனப் பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளர்களை வைத்து நல்ல பழக்கங்களைப் பயிற்சித்தால் நம் சொல்படி நடக்கும். எல்லா வகையான நாய்களுக்கும் எல்லா பயிற்சி முறைகளும் ஒத்து வராது. ஒரு நல்ல பயிற்சியாளர், நமது நாய் வகையைப் பார்த்து, அதற்கு என்ன மாதிரியான பயிற்சிகள் ஒத்துவரும் என்பதை சொல்லிவிடுவார். மற்ற இன நாய்களுடன் ஒப்பிட்டு, அவை செய்யும் அனைத்தையும் நமது நாயும் செய்ய வேண்டும் என்று நினைக்கக்கூடாது. எல்லாமே நாய்கள் என்றாலும், இனம், வளர்ச்சி இதனைப் பொறுத்து ஒவ்வொன்றும் திறனில் வித்தியாசப்படும்.

எனது நாய் அப்படி செய்யும், இப்படி செய்யும் என்று பெருமைக்காக மற்றவர்களிடம் காட்டுவதற்கென்று, நாய்களுக்கு பயிற்சி என்ற பெயரில் அவை விரும்பாத விசயங்களைத் திணிக்கக்கூடாது. அவைகளுக்கென்று உள்ள சுதந்திரம் என்றும் பாதிக்கப்பட்டிராத வகையில் பயிற்சிகள் இருக்க வேண்டும். இதனை ஒரு நல்ல பயிற்சியாளரால் மட்டுமே கொடுக்க முடியும். நாய்களுக்கு பயிற்சிகள் கொடுக்கும் முன்பு, நல்ல பயிற்சியாளரை தேர்வு செய்வது மிகவும் முக்கியமானது.

மனிதர்களுக்கு வருவது போல், நாய்களுக்கும் உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவது இயல்பு. நமக்கு குடும்ப டாக்டர் என்று ஒருவரை வைத்துக் கொள்வது போல், நமது செல்லப் பிராணிகளுக்கும் ஒரு நல்ல அனுபவமுள்ள கால்நடை மருத்துவரை வைத்துக் கொள்ள வேண்டும். நாய்களுக்கான தடுப்பூசிகளை காலத்தில் அவற்றுக்கு போட வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில், மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதும் அவசியம்.

அவற்றுக்கான தடுப்பூசிகளும் மற்றும் தேவையான மருந்துகளும் முறையாகக் கொடுக்காத போது அதற்கு பல நோய்கள் வர வாய்ப்புகள் இருப்பதை மறந்துவிடகூடாது. உரிய நேரத்தில் தடுப்பு மருந்துகளைக் கொடுக்காவிட்டால் அது வளர்க்கும் நமக்குப் பாதிப்பை உண்டாக்கி விடும். நாய்கள் விளையாடும் போது நமது உடலில் சிறிய காயங்களை ஏற்படுத்தினாலும், அவைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டிருப்பதால் நமக்கு பாதிப்பு எதுவும் உண்டாவதில்லை.

செல்லபிராணிகளான பூனை நாய் போன்றவைகளின் முடி பலருக்கு ஒத்துக்கொள்ளாது. ஆஸ்த்துமா போன்ற நோய்களில் விட்டுவிடும். எவ்வளவு செல்லமாக வளர்த்தாலும் ஒரு சில விசயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக, முடி விசயத்தில். நாய்களை அவற்றுக்கென உள்ள ஷாம்புகளை பயன்படுத்தி அவ்வபோது குளிப்பாட்ட வேண்டும். வாரம் இருமுறையாவது அவற்றின் முடிகளை சீவி விட வேண்டும். தேவைக்கு அதிகமான வளர்ச்சியுள்ள முடிகளை நறுக்கிவிட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் முடி உதிர்வதை தவிர்க்கலாம். நமக்கும் பிரச்சனைகள் வராது. நாய்களின் சருமத்திற்கும் இது பாதுகாப்பைத் தரும்.

நாய்களை எப்போதும் சங்கிலியிட்டு கட்டி போட்டு வைக்கக்கூடாது. அவைகளுக்கு போதுமான நடைப்பயிற்சியும், ஓட்டப் பயிற்சியும் கொடுக்க வேண்டும். எப்போதும் ஒரே இடத்தில் இருக்கும் நாய்களின் உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி இரண்டுமே பாதிக்கப்படுகின்றன. அதேபோல், உணவுகளும் தேவைக்கேற்ற அளவில், சத்துமிகுந்த உணவுகளாக கொடுக்க வேண்டும். வளர்ச்சிக்காக அதிக அளவிலான உணவுகளைக் கொடுக்க கூடாது. நமது செல்லப்பிராணிகளை நமது குழந்தைகளைப் போல கவனித்து, நாம் இன்புறுவோம்.

5
Average: 4.2 (6 votes)

Comments

ஆஹா சுவா. கலக்கிட்டிங்க.இன்னும் இது போல் நிறாஈயா எழுதுங்க.சூப்பர் சுவா

Be simple be sample

எங்க வீட்டிலும் ஒருத்தர் இருக்கார் ;) சொல் பேச்சு கேட்காதோர் சங்கத்தலைவர். அருமையா சொல்லி இருக்கீங்க... உங்க வீட்டு நாய்குட்டிகளோட புகைப்படம் இனைத்திருக்கலாம் தானே. அவர்கள் தான் அழகழகாய் போஸ் கொடுப்பார்களே. கலக்கிட்டீங்க சுவா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுவா செல்லபிராணிகள் பற்றி சுவையாகவும், பயனுள்ள நிறைய விசயங்களையும் அழகா கோர்வையா சொல்லி இருக்கீங்க :) இது நிச்சயம் செல்லபிராணி வளர்க்க நினைக்கும், வளர்த்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும் பயனுள்ள கட்டுரையா இருக்கும் என்பதில் சந்தேகமில்லை :) மேன்மேலும் நிறைய எழுத என்னோட வாழ்த்துக்கள் என்றென்றும் சுவா :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

செல்லப்பிராணிகள் பற்றி பல அருமையான விளக்கங்கள்.
ரொம்ப அருமைங்க, வாழ்த்துக்கள்ங்க :-)

நட்புடன்
குணா

அண்ணா எனது முதல் முயர்ச்சியை சிறப்பாகவும் மெருகேற்றியும் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி

அட்மின் அண்ணாவுக்கும் குழுவினருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரேவ்ஸ் முதல் பதிவே உங்களோடதா ரொம்ப சந்தோசம் பா :) தினம் பல முறை அறுசுவையை பார்த்தோமே இன்று பார்த்து வெளியில போய்விட்டதால தெரியாம போய்டுச்சு :o

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வனி உங்கள் பதிவு ரொம்ப சந்தோசமாக இருக்குங்க :)
எங்க வீட்டுல இருவரும் சொல்பேச்சு கேட்பாங்க என்ன ஒண்ணு விருந்தினர் வருகைன்னா கட்டுப்படுத்த முடியாது ஏன்னா பாசக்கார மக்கா ;) பாசத்துல பின்னி பினைஞ்சுடுவாங்க.

/உங்க வீட்டு நாய்குட்டிகளோட புகைப்படம் இனைத்திருக்கலாம் தானே. அவர்கள் தான் அழகழகாய் போஸ் கொடுப்பார்களே./ இணைச்சுட்டோம்ல ;)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அருள் உங்க அன்பான வாழ்த்து பூஸ்ட் குடிச்சாப்புல இருக்குப்பா மிக்க நன்றி :):p

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

தம்பிங்க உங்க வாழ்த்துகளுக்கு நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ச்சோ ஸ்வீட் ....அருமையான அழகான தொடர்...கலக்கிட்டீங்க
வாழ்த்துக்கள்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

. எனக்கு தேவையான பக்கம். அசத்துங்க வாழ்த்துகள்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

சூப்பரு சுவா... மனிதர்களுக்கு உள்ளேயே அன்பு செலுத்த தயங்கும் இந்த காலத்தில் செல்ல பிராணிகளையும் நமது குழந்தைகளைப் போல கவனிக்கனும்னு சொல்லியிருக்கீங்க பாருங்க ..அதுக்கு ஒரு ஸ்பெஷல் சல்யூட்..:) தொடர்ந்து எழுத என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

சுவர்ணா, மிகவும் அழகான, அருமையான கட்டுரை...

பள்ளி கல்லூரி காலத்தில் எங்கள் வீட்டிலும் மூன்று பெட்ஸ் இருந்தார்கள்.. அம்மா, அப்பா, மகன் என்ற ஒரு குடும்பம் :-)
நீங்கள் சொல்லி இருப்பது போல் அவர்களின் புத்திசாலித்தனமும், புரிந்து கொள்ளும் சாமார்த்தியமும் அலாதி...

பஸ்ஸில் இறங்கி தூரத்தில் வரும் போதே இங்கே இருந்து வரவேற்க வாலியோ ஆட்ட தொடங்குவதில் இருக்கட்டும், ஊருக்கு செல்வதற்கு பைகள் தயார் செய்வதை புரிந்துக் கொண்டு சோகமாக பின்னே சுற்றுவதிலாக இருக்கட்டும்...

இவர்களும் குழந்தைகள் போல தான்... நம்மிடம் அதிகமாக பாசமும் அன்பும் வைக்கும் குழந்தைகள் :-)

மிகவும் பயனுள்ள, கருத்துள்ள கட்டுரை சுவர்ணா :-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

சுவா... வாவ் :) நம்ம குட்டீஸ் அழகா போஸ் கொடுத்திருக்காங்க பாருங்க. எத்தனை பேர் இருக்காங்க உங்க வீட்டில்?

அக்கா... நீங்க சொல்வது ரொம்ப சரி, எங்க வீட்டில் இருப்பவர் வாசல்ல எங்க வண்டி சத்தம் கேட்டாலே உள்ள வாலை ஆட்டுவார், ஊருக்கு கிளம்ப ரெடி ஆனா அம்புட்டு சோகத்தை முகத்தில் காட்டுவார். விட்டுட்டு கிளம்பவே பாவமா இருக்கும். :( அவருக்கு உடம்பு முடியலன்னா எங்க அம்மாவை தேடி வந்துடுவார், அவங்களை கிட்டவே இருக்க சொல்வார். பிள்ளை உடம்பு முடியாம தாயை தேடுவது போல இவருக்கு இப்படி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் சுவா
நன்றியுள்ள ஜீவனை பற்றி அருமையான தகவல்கள்
பாராட்டுக்கள்

இளா உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அடடே உங்களை பார்ப்பதில் ஆச்ர்யமும் சந்தோசமாகவும் இருக்கு வாழ்த்திற்க்கு நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுமி உங்கள் வாழ்த்திற்க்கு மிக்க நன்றிப்பா :)
மனிதர்களை விட இவங்கதான் பாசம் காட்டுவதில் உயர்ந்தவர்கள் சுமி ;)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பிந்து ஆமாங்க பாசம் காட்டுவதில் இவங்களும் குழந்தைகள் தான் எங்க வீட்டு செல்லங்களும் நாங்க இல்லைன்னா சோகமாய்டுவாங்க.
உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

/ நம்ம குட்டீஸ் அழகா போஸ் கொடுத்திருக்காங்க பாருங்க./
அதெல்லாம் சோக்கா கொடுப்பாங்க வனி

/ஊருக்கு கிளம்ப ரெடி ஆனா அம்புட்டு சோகத்தை முகத்தில் காட்டுவார். விட்டுட்டு கிளம்பவே பாவமா இருக்கும். :(//
ஆமா வனி இவங்க நாங்க பேசுவதை வைத்தே கண்டுபிடிச்சுடுவாங்க நாங்க ஊருக்கு போறோம்னு அப்பவே சோககீதம் ஆரம்பிச்சுடும் விட்டுட்டு போகவே மனசு வராது :(

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நிகிலா உங்கள் பாராட்டிற்க்கு மிக்க நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அன்பு ஸ்வர்ணா,

செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை அழகாக சொல்லியிருக்கீங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

சீதாம்மா மிக்க நன்றிங்கம்மா :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுவா,

செல்லப்பிராணிகள் பத்தி உருகி கொட்டிட்டீங்கன்னு தான் சொல்வேன். இங்கே நமக்கு மனுஷாளை புரிஞ்சுக்கவே நேரம் போதலை. நீங்க எத்தனை உணர்வுபூர்வமா அவங்கலை அணுகி இருந்தால் இந்தளவு புரிஞ்சு வச்சிருப்பீங்கன்னு உங்க இந்த கட்டுரையே எடுத்து சொல்லுது. நீட்டா எழுதி இருக்கீங்க சுவா. (சொம்மாவே எழுத வராது.. வராதுன்னு பில்டப்பூ வேற.. பலநாள் திருடன் ஒருநாள் அகப்படாமலா போய்டுவான்.. இன்னைக்கு மாட்டினீங்கல்லோ ;))

உங்களோட 2 கட்டுரைகளுமே தகவல் பொதிஞ்ச அதுவும் அத்தியாவசிய தகவல் பொதிஞ்சவை. தொடக்கமே அசத்தலா இருக்குப்பா.. இன்னும் நிறைய அசத்தலோடு வாங்க..:) வாழ்த்துக்கள் பா.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்பூ உங்க வருகையும் வாழ்த்தும் மனதிற்க்கு உற்சாகமாக இருக்கிறது :)
வாழ்த்திற்க்கு மிக்க நன்றிப்பா.

/(சொம்மாவே எழுத வராது.. வராதுன்னு பில்டப்பூ வேற./ இப்பவும் அதானுங்கோ சொல்றேன் ;)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சூப்பர் கட்டுரை சுவா. தொடர்ந்து படிப்பேன்.

//நம் கவலைகள், துன்பங்களை மறந்து// உண்மைதான். வேற ஒரு உலகத்துக்கே கூட்டிப் போய்ருவாங்க. திணிப்பு பற்றி சொல்லி இருக்கிறீங்க. ஆமோதிக்கிறேன். குழந்தைகள் போல அவையும். பிடிச்சால்தான் எதுவும் செய்வாங்க.

முடி - ஹைப்போஅலர்ஜனிக் பிராணிகள் இருக்கு.

‍- இமா க்றிஸ்

இமாம்மா வருக்கைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றிங்கம்மா :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.