ரம்யமான ரமணிசந்திரன்

எனக்கும் புத்தகங்களுக்கும் எட்டாத தூரம் தான். ஒரு முழு நாவலை படிக்கும் பொறுமை என்றும் இருந்ததில்லை. படிக்கும் வேகம் குறைவு என்பதும் கூட காரணமாக இருக்கலாம். ஆனால் சமீப காலமாக அறுசுவை அங்கத்தினர் ஒரு சிலரால் ரமணிசந்திரன் என்ற பெயர் மனதில் பதியவும், சந்தர்ப்பம் வாய்த்தபோது தேடிப்பிடித்து படிக்கவும் துவங்கினேன். கையில் எடுத்த புத்தகங்களை பாதியில் பொறுமை இழந்து வீசும் நான் ஒரு முழு நாவலை உணவின்றி முடித்த போது வியந்தும் போனேன். கீழே வைக்க முடியாமல் படிக்க இதில் என்ன இருந்தது என்று எனக்குள்ளும் யோசனை தான். இந்த எண்ணம் அடுத்த அடுத்த புத்தகங்களை இன்னும் ஆழ்ந்து வாசிக்க வைத்தது எனலாம்... அல்லது அனுபவித்து மூழ்க வைத்தது எனலாம்.

அட்சர சுத்தமாய் ஒருவரது மனோ நிலையை விளக்குவதிலும், அவரது குணத்தை விவரிப்பதிலும் ரமணிசந்திரனுக்கு ஈடு இணை இல்லையோ என்றது மனம். ஈர்த்தவை எவை??? இவர் கதைகளில் வரும் அறிவான துணிவான பண்பான பெண்களா? கம்பீரமான அன்பான புத்திசாலி ஆண்களா? இருவருமே தானோ?! அன்பானவர்கள் பிரிவதை ஏற்காத பெண்களின் மனம் இவர் கதைகளில் வரும் முடிவு சுபமாய் இருந்ததில் மயங்கியதோ? எது எப்படியோ சில விஷயங்களில் அவர் எழுத்தை பாராட்டாமல் இருப்பது இயலாது போலும்.

இவர் கதைகளில் கதாநாயகிகளை அத்தனை கண்ணியமாக காட்டி, அவருடைய எண்ண ஓட்டங்களை சொல்லும் போது படிக்கும் பலருக்கும் புத்தி சொல்லும் விதமாக, எது நல்லது, எது கெட்டது, எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்க கூடாது, எது தப்பு, எது சரி, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பெண்மைக்கு உதாரணம் தருவது அருமை. படிக்கும் போதே நம் பிரச்சனைகளுக்கு தீர்வு நம்மில் இருக்குமோ என்றே எண்ண வைக்கும் எழுத்து.

ஒரு பெண் ஆணிடம் எதிர் பார்க்கும் அன்பும், பரிவும், புரிந்து கொள்ளுதலுமாக இவர் கதைகளில் வரும் கதாநாயகர்கள் அடுத்த ஈர்ப்பு எனலாம். பெண்களின் மனம் புரிவது கடினம் என்பதை பொய்யாக்கும் வகையில் இவர் கதை நாயகர்கள் பெண்களின் முகத்திலும், பார்வையிலுமே எல்லாம் படித்து பதில் பேசும் விதம்... சபாஷ்.

கதையில் வரும் கதாபாத்திரங்களின் அழகான தமிழ் பெயர்கள், அதன் விளக்கம், அதை அன்புக்குறியவர்கள் சுருக்கி அழைக்கும் விதம்... அடடா!!! அழகு. பதிலுக்கு பதில் வரும் வார்த்தை ஜாலமும், ஒருவரை ஒருவர் கேளியாக பேசும் பேச்சையும் ரசிக்காமல் இருக்க இயலுமோ? தேவையான இடங்களில் எல்லாம் அழகான பழமொழிகள், உதாரணக்கதைகள், காவியங்கள், இதிகாசங்கள் என எல்லாமும் எல்லா வயதினருக்கும் பிடித்தமானதாகவே அமைவது சாத்தியமா? சாத்தியப்பட்டிருக்கிறதே.

ஒரு தொழிலை பற்றி எழுதும் போது அதை பற்றிய முழு விவரம், அதில் என்ன முன்னேற்றம், எப்படி செய்ய வேண்டும், என்ன கஷ்டங்கள், என்ன செய்தால் முன்னுக்கு வரலாம், கணக்கு வழக்கு, பணி என எல்லாமும் எழுத முடியுமானால் அவர் எழுத்தில் மட்டுமே கெட்டிக்காரர் அல்ல, நிச்சயம் விசய ஞானம் நிரம்ப உள்ளவரே. அன்றைய கணக்கு புத்தகம் முதல் இன்றைய ஃபேஸ்புக் வரை அத்தனையை பற்றியும் அதன் பயன்பாடு பற்றியும் ஒருவரால் எழுத இயலுமா? எழுதுகிறாரே!!!

ராகினி சுருங்கி ராகியாகி, ராகி கேழ்வரகான போது... அட!!! இந்த வயதில் இப்படி இளைஞர்களை போல சிந்திக்கவும் இயலுமா என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை தான். அனுபவம் எழுத்தில் தெரிந்தாலும் எண்ணங்கள் இன்றைய காலகட்டத்துக்கும் பொருந்தும் போது எல்லா வயதினரையும் ஈர்த்ததில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.

ஒருவரது தோற்றத்தில் கம்பீரம் காணலாம், ஆனால் எழுத்தில் காண இயலுமா? இயலும்!!! ரமணிசந்திரனின் எழுத்தில் முதிர்ச்சியும், புதுமையான சிந்தனைகளும், ஆழ்ந்த கருத்துக்களும், அன்பான அறிவுரையும், கண்டிப்பும் அளவோடு கலந்து கம்பீரமாய் தோன்றுவதை காண முடியும். கிட்டத்தட்ட 160 நாவல்கள், ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக் கொண்டு நம் மனதில் இடம் பிடிக்கும் போது வியப்பாகவே இருக்கின்றது.

தோற்றத்தில் முதிர்ச்சியும், மனதில் இளமையுமாய் ரமணிசந்திரன்... ரசனைக்குரிய ரம்யமான ரமணிசந்திரன்!!

5
Average: 4.4 (17 votes)

Comments

அட நிஜமாவே எதிர்பார்க்காத தலைப்புதான். எப்பவும் வித்தியாசமா இப்படி செய்துடறது.ஆரம்பமே அசத்தல் வனி..

Be simple be sample

ஆஹா எனக்கு பிடித்த ரமணிச்சந்திரன்,

:)

என்ன சொல்ல!!!

;-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

அழகா எழுதி இருக்கீங்க வாழ்த்துக்கள் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அசத்தலான ஆரம்பம் அக்கா'ங்க :-) இவரது புத்தகங்கள் எதுவும் படித்ததில்லை, விரைவில் தேடிப்படிக்கிறேன்..
மேலும் எழுதிட வாழ்த்துக்கள்ங்க :-)

நட்புடன்
குணா

ரமணிசந்திரன் ரசிகர்கள் மனசுல இருக்கிறதை அழகா சொல்லிட்டிங்க சூப்பர்...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

அற்புதமான எழுத்தாளர் பற்றி அழகுப்பெண்ணின் அருமையான விமர்சனம்..சில்லுன்னு இளநீர் குடித்ததுபோல் ...சூப்பர்!!!
வாழ்த்துக்கள்....வனி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ரமணிச்சந்திரனை பற்றிய ரம்மியமான வரிகள் வனி... வாழ்த்துக்கள்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

விவி, புதாண்டு நல்வாழ்த்துகள்.
நான் எழுதுவதற்கு சோம்பேறி.என் மனதில் உள்ளதை அப்படியே எழுத்தில் வடித்துள்ளீர்கள். நன்றி.

idhuvum kadandhu pogum.

ரமணிச்சந்திரன் படிக்கும் எல்லாருடைய மனதிலும் இருப்பதை படித்தது போல இருந்தது.. நானும் என்னுடைய ரொம்ப நெருங்கிய தோழி மூலம் தான் ரமணிச்சந்திரன் கதைகள் படிக்க ஆரம்பித்தேன்.. அருமையான பதிவு.. வாழ்த்துக்கள் வனி.. :)

வித்யா பிரவீன்குமார்... :)

வனி ரொம்ப அருமையா அழகா எழுதியிருக்கீங்க வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இந்த தலைப்பை பார்த்து விட்டு, கட்டாயம் சீதாலக்ஷ்மி மேடம் எழுதி இருப்பார்கள் என்று நினைத்தேன்... ஓபன் செய்து எழுதி இருப்பவர் பெயர் பார்த்தபின் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து வெளி வரவே இத்தனை மணி நேரம் ஆனது :-)

நீங்கள் சொல்லி இருப்பது போல் ரமணி சந்திரனிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயமே எழுதும் காலத்திற்கு ஏற்ப கதை எழுதுவது தான் :-) அது எத்தனை கடினமானது என்று ஒரு சில சிறுகதைகள் எழுதியே நான் புரிந்துக் கொண்டேன் ;-)

வாரிசு என்று ரமணிச்சந்திரன் ஒரு சிறுகதை எழுதி இருக்கிறார்கள்... மகனாக இருக்கும் போது சரி என்று தோன்றும் விஷயங்கள் அதையே தன்னுடைய மகன் செய்யும் போது சட்டென்று புரிந்துக் கொள்ளவோ, ஏற்றுக் கொள்ளவோ முடியாததை அத்தனை எளிமையாக சொல்லி இருப்பார்கள்...

அவர்களிங் பழைய கதைகள் சில கொஞ்சம் இந்த காலத்திற்கு ஏற்றதாக இல்லாத போதும், மற்றவை எல்லாம் இனிமையான படிக்கும் அனுபவத்தை கொடுப்பவை.. அதே போல் படிப்பவர்களின் மனதையும் மாற்றும் வல்லமை கொண்டவை ;-)

மிகவும் அழகிய கட்டுரை தங்கச்சி... கட்டாயம் உங்களிடம் இருந்து எதிர்பார்க்காத தலைப்பு... எதிலும் எப்போதும் நீங்கள் ஆல்-இன்-ஆல் என்று மீண்டும் சொல்லும் கட்டுரை... அசத்தல் + கலக்கல் தங்கச்சி...

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

நான் ரமணி சந்திரன் நாவல்கள் படிப்பது குறைவு.
வெளிநாட்டில் நாவல் கிடைப்பது கடினம். தமிழ் பத்திரிகைகள்( on-line) படிப்பதோடு சரி.
ஆனால், நீங்கள் எழுதிச் சென்ற விதம் அருமை. ஒரு முறை ஒரு வார இதழில் அவரின் மருமகள் பேட்டி படித்தேன். அவரின் மருமகள் சொன்னார், கதையில் வரும் கதாநாயகிகள் போல மிகவும் மென்மையானவர் ரமணி சந்திரன் என்று.
வாணி

வனி
வாழ்த்துகள்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

ஹாய் வனி
ரமணிசந்திரனுக்கு நல்ல மகுடம் சூட்டி இருக்கீங்க.
அவரது படைப்புகளைப் பற்றி அருமையாக எடுத்து சொல்லி இருக்கிறீர்கள்.அருமை தோழி

ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க வனிதா.

hai vanitha ,
nalla karuthu ...ungala pola nanum 1st books padika pudikama tha irunthen ..ramanichandram avangaloda books padika start panunathilirunthu enakum books padika interest athigamayiduch ... i like Ramanichandran novel's very much ...

expectation always hurts

அன்பு வனி,

ரம்மியமாக எழுதியிருக்கீங்க. ரமணி சந்திரனின் ரசிகைகள் இப்ப உங்களுக்கும் ரசிகைகளாகி விடுவாங்க.

தொடர்ந்து எழுதுங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு அண்ணா & டீம்... புது வருடத்தில் என் வலைப்பதிவில் முதல் பதிவு. அது நிச்சயம் எனக்கு இந்த வாய்ப்பை தந்த உங்களுக்கு நன்றி சொல்வதாகவே இருக்க வேண்டும். :) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரேவ்ஸ்... நான் புக் படிப்பேன் என்பதையே எதிர் பார்த்திருக்க மாட்டீங்க தானே ;) நன்றி ரேவ்ஸ். என் வலைப்பதிவில் நீங்க தான் முதல் பதிவிட்டது... மகிழ்ச்சிக்கு எல்லையில்லை தோழி.

ரெபி... ;) மிக்க நன்றி.

அருள்... என் எழுத்து என்னைக்கு அழகாக இருந்தது ;) இது டைப் பண்ணது தானே? நன்றி அருள்.

குணா’ங்க... மிக்க நன்றி’ங்க. :) படிச்சு பாருங்க.

இந்திரா... இது வெளி வரும் முன் சீதா சொன்ன வரிகள்... நீங்க இப்ப சொல்லி இருக்கீங்க. மகிழ்ச்சி. நன்றி :)

இளா... மிக்க நன்றி :) உங்க பிசி ஷெடியூலில் வலைப்பதிவுகளை படித்து பதிவிட்டது மகிழ்ச்சியாக தருகின்றது. //அழகுப்பெண்ணின் அருமையான விமர்சனம்// - ஹிஹிஹீ. போங்கப்பா வெட்கம் வெட்கமா வருது ;)

சுமி... வர வர உங்க வரிகளில் கவிதை நடை எதுகை மோனைன்னு என்ன என்னவோ எட்டி பார்க்குது ;) எதை எதை எல்லாம் சொன்னேன்னு யோசிக்கிறீங்களோ? நன்றி சுமி.

வனிதா ஜி... எப்படி இருக்கீங்க, புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். மிக்க நன்றி :)

வித்யா... மிக்க நன்றி :) நான் புக்கே ஒரு தோழியால தான் படிக்க ஆரம்பிச்சேன். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனி,

மன்னிக்கனும்,லேட்டா வந்திருக்கேன் :(

அசத்தலான ஆரம்பம் :)

பெண்கள் கொண்டாடும் ஒரு எழுத்தாளர்,ரம்மியமான ரமணிசந்திரன்,

பொருத்தமான தலைப்பிற்கு ஒரு சபாஷ் :)

தொடக்கத்தில் இருந்து கடைசி வரி வரை,அத்தனையும் சத்தியமான

வார்த்தைகள்.மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

ரமணிசந்திரன் அவர்களின் ஒரு புத்தகத்தை கூட தவற விட்டதில்லை,

எல்லாவற்றையும் வாசித்திருக்கிறேன்,ஒரு சிலவற்றைத் தவிர அனைத்துமே

இனிமையாக,இதமாக இருக்கும்.வாசிக்கும் உள்ளம் கொள்ளை போகும்.

முதல் பதிவே முத்தான பதிவாக கொடுத்திருக்கீங்க வனி,மனமார்ந்த

பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் வனி :)

அன்புடன்
நித்திலா

சுவா... ரொம்ப நன்றி :)

வாணி... மருமகள் மெச்சும் மாமியார்... :) கதைகளில் வருவது போலவே. நன்றி வாணி.

மஞ்சு... மிக்க நன்றி :) நலமா?

நிகிலா... மிக்க நன்றி :) எப்படி இருக்கீங்க?

நந்தினி... உங்க பதிவை நான் எதிர் பார்க்கவே இல்லை!! உண்மையில் இன்ப அதிர்ச்சி. நன்றி நந்தினி :)

பிரியா... மிக்க நன்றி :) ஆனா நான் இப்பவும் வேறு யார் புத்தகங்களும் படிக்கிறதில்லை.

சீதா!!! இப்படிலாம் சொல்லி ரமணிசந்திரன் ரசிகர்கள்கிட்ட என்னை மாட்டி விடாதீங்க. என்னை இதை எழுத சொல்லி என்கரேஜ் பண்ணதே நீங்க தானே ;) அதனால் உங்களுக்கு என் அன்பு. நன்றி நமக்குள் வேண்டாம் தானே. :)

நித்திலா... லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்தவங்களாச்சே :) மிக்க நன்றி நித்தி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நானும் இதை எதிர் பார்த்தேன். எல்லாருமே சீதா எழுத்தை தான் எதிர் பார்ப்பாங்கன்னு. கூடவே சிங்கத்தின் குகையில் எலி போல அவங்க ஏரியாவில் என் எழுத்து எனக்கே கொஞ்சம் இடிக்க தான் செய்தது. என்ன செய்ய... எழுத சொல்லி என்கரேஜ் பண்ணவங்களே அவங்க தானே ;)

அதென்ன சில சிறு கதைகளோட நிருத்திட்டீங்க?? மேடம் இப்ப பெரிய நாவலாசிரியை ஆச்சே ;) உங்க தன்னடக்கத்துக்கு அளவே இல்லாம போச்சு அக்கா.

ஆமாம் அவரோட சிறுகதை தொகுப்பு படிச்சிருக்கேன். அப்பா இஷ்டத்துக்கும் வருங்கால மருமகளை பற்றி பேசினது, அதன் பின் ஃப்ளாஷ் பேக், படிச்சதும் சிரிப்பு வந்தது.

இந்த படிப்பவர்கள் மனதை மாற்றுவது... ம்ஹூம்... இன்னுமா திருந்தலைன்னு கேட்டது 3:) எக்குத்தப்பா கண்ட நேரத்தில் நினைவு வந்து தொலையுது பாருங்க.

என்னடா உங்களுக்கு கடைசியா தனியா பதிவு போடுறனேன்னு யோசிக்காதீங்க... ரமணிசந்திரன் அப்படின்னு ஒருவரை எனக்கு முதன் முதலில் அறிமுகம் செய்து, என் மனதில் அந்த பேரை பதிய வைத்தவரே நீங்க தானே. உங்களை நினைக்கும் போதெல்லாம் ரமணிசந்திரன் பேரும் கூடவே நினைவு வரும் அளவுக்கு ஆக்கி விட்டதும் நீங்க தானே. அதான் இந்த தனி பதிவு. உங்கள் அழகான அறிமுகத்துக்கு மீண்டும் நன்றி அக்கா. இதுவரை 80 நாவல் வரை படிச்சிருக்கேன். இன்னும் சந்தர்ப்பம் கிடைச்சா மீதமும் படிப்பேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

போஸ்ட் கூட ரம்யமாகத்தான் இருக்கிறது வனி. அழகாக எழுதி இருக்கிறீங்க.

‍- இமா க்றிஸ்

சாரி தங்கச்சி, இப்போ தான் இந்த போஸ்ட் பார்த்தேன், அது தான் லேட்டான பதில்!

//இதுவரை 80 நாவல் வரை படிச்சிருக்கேன்.//

கின்னஸ் சாதனையா இருக்க போகுது, எதுக்கும் கூகிள் செய்து பாருங்க ;-) எப்படி அது???
ஒரு நாளைக்கு எத்தனை கதை படிச்சீங்க?
சான்ஸே இல்லை தங்கச்சி :-) அசத்துங்க!!!

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

இமா.. மிக்க நன்றி :) பதிவுக்கும், கரக்‌ஷனுக்கும் சேர்த்து ;) எப்படி இருக்கீங்க?

அக்கா... நம்புங்க ;) ஏறக்குறைய 4 மாதம். என் படிக்கும் வேகம் தெரிஞ்சும் தினம் எத்தனை கதைன்னு கேட்டா சாமி கண்ணை குத்திடும் உங்களை. 3:) வீட்டுக்கு வந்து பாருங்க, ஒருத்தர் உங்க மேல சம கோபமா இருக்கார் எந்த நேரமும் புக்கான்னு. ஹஹஹா. ஆனா சரியா கெஸ் பண்ணிட்டார்... அறுசுவைக்கான்னு கேட்டு என்னையே ஆச்சர்யப்பட வெச்சுட்டார் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சாரி தங்கச்சி மேடம், நியூ இயர் resolution + goals செட் செய்துக் கொண்டு இருந்ததில் உடனே பதில் சொல்ல முடியாமல் போச்சு...

நாலு மாதத்தில் 80 நாவல் படித்து மெதுவா படிப்பேன்னு சொல்லும் தன்னடக்கமுள்ள ஒரே ஆள் நீங்க தான் :p

கலக்குங்க நீங்க யாரு, வனிதாவாச்சே ;-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

அக்கா... இது அநியாயம். 4 மாசம்... ஏறக்குறைய 120 டேஸ். 80 நாவல். நீங்களா இருந்தா ஒரு நாளைக்கு 2/3 கூட முடிச்சிருப்பீங்க. 3:)

அதெல்லாம் போகட்டும் ரெசலுஷன், கோல்... என்னம்மா இதெல்லாம்?? இன்னும் ஆஃபீஸ் ஃபீல் போகலயா? நாங்களாம் இப்படி செட் பண்ணவே மாட்டோமாக்கும் ;) செட் பண்ணி பண்ண முடியாம போனா அதுவே முதல் ஃபெய்லியர் ஆயிடுமே :P தோல்வியை நாமே தேடக்கூடாதுன்னு, இந்த பக்கமே நான் போறதில்லை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//இது அநியாயம். 4 மாசம்... ஏறக்குறைய 120 டேஸ். 80 நாவல். நீங்களா இருந்தா ஒரு நாளைக்கு 2/3 கூட முடிச்சிருப்பீங்க. 3:)//

ஹுஹும்ம்... நான் ஒரு நாளைக்கு ஒரு கதைக்கு மேல் படித்தததா சரித்திரம் இல்லை...

கதை படிச்சு முடிச்சு கொஞ்ச நேரம் அனலைஸ் செய்வேன்... :)

//ரெசலுஷன், கோல்... என்னம்மா இதெல்லாம்?? இன்னும் ஆஃபீஸ் ஃபீல் போகலயா?//

வீட்டில் இருந்தாலும் ஏதாவது செய்தே ஆகனும்'ல ;) ஒரு ப்ரபஷ்னல் ரைட்டர் ரேஞ்சுக்கு ஆகலாமான்னு யோசிக்குறேன் ;-)
பயப்படாதீங்க :D

//நாங்களாம் இப்படி செட் பண்ணவே மாட்டோமாக்கும் ;) செட் பண்ணி பண்ண முடியாம போனா அதுவே முதல் ஃபெய்லியர் ஆயிடுமே :P தோல்வியை நாமே தேடக்கூடாதுன்னு, இந்த பக்கமே நான் போறதில்லை.//

அது சரி! இப்படி எல்லாம் கூட எஸ்கேப் ஆக வழி இருக்கா...

என்ன innovative'அ யோசிக்குறீங்க :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

எனக்கு ரமணி அம்மாவை ரொம்பவும் பிடிக்கும்.அவர் கதைகளில் தான் புதுமையான பெயர்களை முதன் முதலில் பார்த்தேன்.

No pains,No gains

ANANTHAGOWRI.G