ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட் /Stress management

அறுசுவை தோழர் தோழிகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்.

இந்த வலைப்பகுதியில் ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட்/Stress management (மன அழுத்த மேலாண்மை) பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன்.

சரி, ஸ்ட்ரெஸ் எங்கே தான் இல்லாமல் இருக்கிறது என்று பல சமயம் நமக்கு தோன்றும்.அதே சமயம் ஸ்ட்ரெஸ்ஸை வலுக்கட்டாயமாக நாமே வரவழைத்துக் கொள்கிறோம் என்றும் தோன்றும்.

ஸ்ட்ரெஸ் இப்பொழுது 1 வயது குழந்தை முதல் 80 வயது தாத்தா வரை அனைத்து வயதினருக்கும் பாரபட்சமில்லாமல் இருக்கிறது. இந்த தொடரில் நாம் ஸ்ட்ரெஸ் என்பது என்ன? எத்தனை வகைப்படுகிறது? அதற்கான காரணிகள் என்ன? எப்படி அதை எதிர்க்கொள்ள முடியும்? எந்த பருவத்தினருக்கு, எந்தெந்த சூழ்நிலையில் ஸ்ட்ரெஸ் வருகிறது? அதனால் ஏற்படும் விளைவுகள் என எல்லாவற்றையும் ஆராயலாம்.

நானும் மன அழுத்தத்தில் சிக்கித் தவித்த காலங்கள் உண்டு. எனவே என்னாலும் இதை பற்றி உங்களுடன் சேர்ந்து கலந்துரையாட முடியும் என நம்புகிறேன்.

மன அழுத்தம் என்பது ஒரு வகை பயம், கவலை, தன்னம்பிக்கையின்னை, பதற்றம் இன்னும் சிலருக்கு மூச்சு விடுவதில் சிரமும் ஏற்படுகிறது. சிலருக்கு எப்பொழுதும் எதை பற்றியாவது நினைத்து கவலைப்பட வேண்டும். எந்த கவலையும் இல்லை என்றால், அதுவே ஒரு கவலையாக நினைத்து புலம்புபவர்களையும் நான் பார்த்ததுண்டு.

ஒரு எலாஸ்டிக்கை இழுத்து பிடிப்பது டென்ஷன். அதை மீண்டும் விடும் போது பழைய நிலைக்கு தானாக சென்றுவிடும். ஆனால் இந்த மன அழுத்தமானது, கவலையின் உச்சிக்கு தனது இதயத்தையும், மூளையின் செயல்பாட்டையும் இழுத்து சென்று, அதை மீண்டும் தனது இயல்பு நிலைக்கு திரும்பி செல்ல அனுமத்திக்காமல் செய்கிறது. திரும்பி பழைய நிலைக்கு செல்ல மனம் போராடும் அந்த தருணத்தையே மன அழுத்தம் என்று சொல்லலாம். எவருமே மன அழுத்தத்தில் இருந்து அவதிப்பட வேண்டும் என்று நினைப்பது இல்லை. ஆனால் அவ்வித மன போராட்டத்தில் இருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இப்படி கவலைபடுவதால் உன்னால் எதையாவது மாற்ற முடியுமா என்று கேட்டு சிலர் ஆறுதல் படுத்த நினைத்தாலும் இந்த மனம் அதை ஒப்புக் கொள்வதில்லை. தானாகவே நேரம் எடுத்து சரிநிலைக்கு வந்தால் மட்டுமே உண்டு. எந்தெந்த சூழல்கள் மன அழுத்தத்தை கொடுக்கிறது.

குடும்பம்

பணியிடம்

உறவுகள், நட்புகள்

அன்றாட வாழ்வில் நாம் கடந்து செல்லும் காரணிகள்

சமூகம்

சுற்று சூழல்

ஆரோக்கியம் மற்றும் உடல் சார்ந்த விஷயங்கள்

பொருளாதாரம்

போட்டிகள்

என இன்னும் பல வகையான காரணிகள் உள்ளன. என் வலைபகுதியில் அனைத்தையும் பற்றி பேசலாம். எனவே என்னுடைய சில மன அழுத்ததமும் குறையும் வாய்ப்புள்ளது ;) நான் கேட்டறிந்த சிறிய கதையுடன் முடிக்கிறேன்.

ஒரு மகா அறிஞர் தனது சொற்பொழிவை கேட்க வந்த மக்களின் மன அழுத்தத்தை தீர்க்க எண்ணி அனைவரிடமும், பல காரணங்களால் உங்கள் அனைவருக்கும் மன அழுத்தம் இருக்கும். அவ்வாறு ஒருவர் மீது உள்ள கோபதாபங்கள், மனபாரம், எரிச்சல்கள் என அனைத்தையும் ஒவ்வொன்றாக எண்ணி அதற்கு சமமான எண்ணிக்கையில் தக்காளிகளை எடுத்து அங்குள்ள கோணிப்பைகளில் நிரப்பி நான் சொல்லும் வரை உங்களுடன் வைத்திருங்கள் என்றாராம். அனைவரும் எதோ காரணம் இருக்கும் என எண்ணி தங்களின் மன கவலை மற்றும் கோபதாபங்களின் எண்ணிக்கையில் தக்காளிகளை பையில் நிரப்பினார்கள். சிலர் அதிக பழிவாங்கும் உணர்ச்சி காரணங்களால் 50க்கும் மேற்பட்ட தக்காளிகளை எடுத்து வைத்தனர். ஆனால் அறிஞர் அவற்றை தங்களுடனே எப்போதும் வைத்திருக்க வேண்டும், தூங்கும் போது கூட அருகில் வைத்திருக்க வேண்டும் என்று கூறி விட்டார். இரண்டு நாட்கள் எதுவும் பிரச்சனை இல்லை. ஆனால் நாட்கள் செல்ல செல்ல தக்காளிகள் அழுகி யாராலும் அருகில் அதை வைத்துக் கொள்ள முடியவில்லை. துர்நாற்றம் அறை முழுவதும் நிரம்பி இருந்தது. பின் அனைவரும் அறிஞரிடம் ஓடி வந்து விவரத்தை சொல்ல, அப்போது அவர் சொன்னாராம் கோபதாபங்களும், கவலைகளும் தக்காளியை போன்றது. உங்களின் மனதில் அதை நீங்கள் வைத்திருக்க வைத்திருக்க அழுகி உங்கள் மனதின் நிம்மதியையும், உடலையும் கெடுத்து விடும். அந்த அழுகிய தக்காளியுடன் சேர்த்து உங்களின் தேவையில்லாத சிந்தனைகளையும் அப்புறபடுத்தி விடுங்கள் என்றாராம். அனைவரும் அவர் சொல்ல வந்ததை புரிந்துக் கொண்டு மானசீகமாக நன்றி தெரிவித்தார்களாம்.

இன்னும் அடுத்த பதிவில்,

5
Average: 4.9 (8 votes)

Comments

சரியான தலைப்பை தேர்ந்தெடுத்திருக்கீங்க ரம்யா, தற்சமயம் எல்கேஜி குழந்தை கூட ஸ்ட்ரெஸ்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். நிச்சயம் ஸ்டெரெஸ் சம்பந்தமான கருத்துக்கள் அனைவருக்கும் பயன்படும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை :) வாழ்த்துக்கள் ரம்யா :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மன அழுத்தம் பற்றிய ஆரம்ப பதிவே அருமையா இருக்குங்க, வாழ்த்துக்கள் :-)

நட்புடன்
குணா

ரம்யா, மிக நல்ல பகுதி, ஆரம்பமே எப்பவும் போல கலக்கல்ஸ் தான் ரம்ஸ்.

இன்று மிக தேவையான ஒன்று ஸ்ட்ரெஸ மேனேஜ்மென்ட் தான். இதை தாங்க முடியாமல் நான் படும் பாடு, ஹூம். ஓரளவுக்கு இதை பற்றி தெரிந்தாலும் கையாள முடியாமல் தவிக்கும் நிலை தான் உள்ளது. உங்க பகுதிக்கு இனி நான் தொடர் வாசகி.

மனமார்ந்த வாழ்த்துக்கள் ரம்ஸ்

அன்புடன்
பவித்ரா

ஸ்ட்ரெஸ் மேனேஜ்மெண்ட் பற்றி ஸ்மார்ட்டா சொல்லியிருக்கீங்க கதை நல்ல
பொருத்தம்.
இந்த பயணம் இனிதே தொடர வாழ்த்துக்கள்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

மன அழுத்தத்தை பற்றி நீங்கள் தொடங்கியிருக்கும் இந்த பகுதியை நான் வரவேற்கிறேன். ஆரம்பமே அசத்தல்...வாழ்த்துக்கள் ரம்ஸ்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

தேவையான நேரத்தில் அருமையான தலைப்பு... வாழ்த்துக்கள் ரம்மி.. :)

வித்யா பிரவீன்குமார்... :)

அறுசுவையில் பலருக்கும் தேவையான தலைப்பு. பலரும் ஏதோ ஸ்ட்ரெஸ் இருந்த நேரம் மன ஆறுதலுக்காக அறுசுவையோடு தங்களை இணைத்துக் கொண்டார்கள் என சொல்ல கேட்டிருக்கிறேன். அனுபவமும் கூட. அழகான கதையோடு நல்ல தொடக்கம். தொடருங்கள் :) வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இன்றைய உலகில் அனைவரும் சிக்கி தவிக்கும் விசயம். மேலும் பற்பல கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள். :)

ரம்யா
மிகவும் பயனுள்ள பக்கம். வாழ்த்துகள்.

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

ஹாய் ரம்யா
ஆசிட் -அது வைக்கப்பட்டு இருக்கும் பாத்திரத்தை அரிப்பது போல தான் இதுவும்.. நல்ல தகவல்

ரம்ஸ் இன்றைய காலத்திற்க்கு ஏற்ற பயனுள்ள பகுதி ஆரம்பமே அருமை வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரொம்ப அருமையான தலைப்பு... தேவையானதும் கூட...

நீங்கள் சொல்லி இருப்பதும் / விதமும் / சின்ன கதையும் அருமை...

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

அன்பு ரம்யா

இன்றைய கால கட்டத்துக்குத் தேவையான விஷயத்தைப் பற்றி, மனதில் பதியும் விதமாக, அழகாக சொல்லியிருக்கீங்க.

தொடர்ந்து படிக்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்.

அன்புடன்

சீதாலஷ்மி

hi u r multi talented.. (cooking,stories....)in all department u r dng grt..congrats:-)..sorry i dnt know how to type in tamil here..