புதிய பகுதிகளுடன் அறுசுவை!!!

அன்பு அண்ணா & டீம்... புது புது பகுதிகளுடன், புது தோற்றத்துடன் அழகாக கண்ணுக்கும் விருந்தாக புதிய அறுசுவை அருமை. உங்கள் அனைவரின் உழைப்பும் தெரிகிறது. வாழ்த்துக்கள். :) இது அவசர பதிவு... இன்னும் பார்த்துட்டு படிச்சுட்டு வரேன்.

என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. அபாரம் அற்புதம். கடந்த டிசம்பர் 6ம் திகதியிலிருந்து அறுசுவை எப்பொழுது மீண்டும் தொடங்கும் என்று தினசரி இரண்டு மூன்று தடவைகள் அவதானித்து வந்தேன். நான் ஒரு silent
அறுசுவை reader இன்று பார்த்ததும் மிக்க மகிழ்ச்சி. அறுசுவை டீமுக்கு எனது வாழ்த்துகளும் நன்றிகளும்.

உங்களில் ஒருவனாக
ஈஸ்வரன்

என்ன அழகு எத்தனை அழகு எங்கள் அறுசுவை 17 நாட்கள்காத்திருப்பிற்க்கு பின் என்ன ஒரு அழகிய கைவண்ணம் நன்றி நன்றி நன்றி

அறுசுவையின் அழகு பிரம்மிப்பு ஊட்டுகிறது :) ஒரு வித உற்சாகத்தை அளிக்கிறது. பள்ளிக்கு செல்லும் முதல்நாள் நினைவுக்கு வருகிறது. புது பேக், புதுபுத்தக்கம், புதுபென்சில், புது யூனிஃபாம்னு மனம் பூராவும் மணம்வீசுமே அது போன்ற உணர்வை தருகிறது. அதேபோல்தான் வகுப்பில் நுழைந்தவுடன் எல்லாமே புதுசாக, ஆர்வத்துடன் சுத்தி முத்தி என்ன நடக்குதுனு விழிகள் வியப்பில் ஆழ இருக்கும் நிலைதான் இப்பொழுது எனக்கு தோன்றுகிறது.
இதற்காக எவ்வளவு உழைப்பினை கொடுத்துள்ளீர்கள் என்பதும் விளங்குகிறது.
மேன்மேலும் அறுசுவை சிறப்புற எங்கள் அனைவரின் வாழ்த்துக்கள் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அறுசுவை டீம் அண்ணாவாழ்த்துக்கள்.நானும் தினம் வந்து பார்த்துட்டு போய்டுவேன்.இன்னைக்கு மிகவ ஹாப்பிதான். எது முதல்ல பார்க்கலாம்.அடுத்து என்ன பார்க்கலாம் ந்னு ஒரே ஆவல்.

Be simple be sample

புதிய தளம் ரொம்ப அழகாகவும் & அருமையாகவும் உள்ளது,
ஒவ்வொரு புதிய பகுதியிலும் படங்கள், வியக்கத்தக்க தள வடிவமைப்புகள் ரொம்ப அருமை. அறுசுவை அட்மின் மற்றும் குழுவினர்க்கும் வாழ்த்துக்கள் :-)
அனைவருக்கும் இனிய காலையில் நல்லதோர் ஆரம்பம் :-)

நட்புடன்
குணா

அருமையான அட்டகாசமான அறுசுவை, புதுப் பொலிவுடன் எல்லா பகுதிகளிலும் முன்னேற்றத்துடன் பார்க்கும் போதே மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு, வாழ்த்துக்கள் அட்மின்.

அறுசுவை புதிய தளத்தை காணும் போதே உற்சாகம் ஊற்றெடுக்கிறது.

அழகு,அருமை,அற்புதம்,அட்டகாசம்,அமர்க்களம் என்று அடுக்கிக் கொண்டே

செல்லலாம்.பாபு அண்ணாவிற்கும்,அறுசுவை குழுவினருக்கும் எனது மனமார்ந்த

வாழ்த்துக்கள் :)

அறுசுவை என்றும் புகழ் வானில் சிறகடித்து பறந்திடட்டும்.நன்றி.

அன்புடன்
நித்திலா

அறுசுவை புதிய தோற்றத்தில் பார்க்க மிகவும் அருமை, புதுமை.. வாழ்த்துக்கள்..

அழகு +அற்புதம் + அபாரம் + அருமை + அமர்க்களம் + அசத்தல் = அறுசுவை!

புத்தம்புது தோற்றத்தில், பல புதிய பகுதிகளுடன், கண்ணைக்கவரும் வண்ணமாய் ரொம்ப அருமையா இருக்கு அறுசுவை! அனைவரது உழைப்பும் தெரிகிறது. அறுசுவை அட்மின் மற்றும் குழுவினருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!!

சின்னதாய் ஒரு வட்டமிட்டு அனைத்தையும் இன்றே அள்ளி சுவைக்க நினைக்கிறேன், ஆனாலும் நாட்கள் பல வேண்டுமென தெரிகிறது! எல்லா பகுதிகளையும் மெல்ல படித்துவிட்டு மீண்டும் வருகிறேன். அறுசுவை மேலும் மேலும் மெருகேடிற, மனமார்ந்த வாழ்த்துக்களுடன், சுஸ்ரீ. நன்றி! வணக்கம்.

அன்புடன்
சுஸ்ரீ

அன்பு அண்ணா மற்றும் டீம்,
திருமணமான புதிய பெண் எப்போது மறுவீடு வருவாள் என்று 17 நாட்கள் எதிர்பார்த்து காத்திருந்தேன்.இன்று காலையின் இன்ப அதிர்ச்சியாக புதுப் பெண் நல்ல அழகான மெருகோடு.. கூடுதல் பொலிவோடு.. தன் கையில் அடங்கா புத்தம் புதிய விசயங்களோடு ரொம்ப ரொம்ப நன்றாகவே அலங்காரம் செய்து கொன்டு தான் வந்து இருக்கிறாள்...:) இந்த மெருகிற்கு மெருகூட்டிய உங்களுக்கும் டீமிற்கும் எனது வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். மேன்மேலும் அறுசுவை சிறப்புற எங்கள் அனைவரின் வாழ்த்துக்கள்...:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

மேலும் சில பதிவுகள்