Chicken pox.... help me

Hello Friends

எனக்கு 16thdec chickenpox வந்தது.எனக்கு 18 months old baby இருகிறாள்.எனக்கு இப்பொழது10 நாட்கள் ஆகி விட்டது.நான் அம்மா வீட்டிலிருகிறேன்.அவளை நான் இந்த 10 நாட்கள் தூக்கவே இல்லை.அம்மா தான் பார்து கொண்டார்கள்.அவளும் என்னை தேடவே இல்லை.எல்லாம் ஒரு அளவுக்கு காய்ந்து விட்டது.மூன்று தடவை குளித்து விட்டான்.நான் எப்பொழுது குழந்தை ய தூக்கலாம்.அவளை தூக்காமல் 10 நாட்களஎ கஷ்டமாக இருந்தது.

pls help me...
unga suggestions sollunga friends..
waiting 4 ur reply
<!--break-->

ஹர்ஷினி குழந்தைக்கும் எளிதில் பரவிடும்னுதானே தூக்காம இருந்தீங்க, இன்னும் ஒரு 10 நாட்களாவது பொறுமை காத்திடுதல் நல்லதுனு நினைக்கிறேன். சிலசமயமங்களில் கடைசி சில நாட்களில் எளிதா மற்றவர்களுக்கு பரவிடும். குழந்தைக்குனா வெகு எளிதில்பரவிடும் தனமை உண்டு.
தேடலேனு கவலைபடாதீங்க, தேடி அழுதுட்டே இருந்திருந்திருந்தா அம்மாக்கும் கஷ்டம், உங்களுக்கு இது போன்ற சமயத்தில் இன்னும் மனசுக்கு கஷ்டமா இருந்திருக்கும்.

வீட்டு பெரியவர்களின் ஆலோசனையை கேட்டு அதன்படியே நடந்துக்கிறது நல்லதுனு நினைக்கிறேன். குழந்தைக்கு வராம நமக்குதானே வந்துச்சுனு நினைச்சுக்கிட்டா மனசு ஓரளவு ஆறுதல் அடையும்னு நினைக்கிறேன்.
கொஞ்சம் காத்திருங்க இது பற்றி இன்னும் தெரிஞ்ச தோழிகள் வந்து கூறுவாங்க. டேக் கேர்..

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஹர்ஷினி.. எப்படி இருக்கீங்க..நல்ல குளிர்ச்சியான ஆகாரங்கள் சாப்பிடுங்க.கவலப்படாதீங்க நீங்க இப்பவே குழந்தைய தூக்கலாம் .

நீங்க எழுதியிருந்ததை படித்த உடனே எனக்கு மலரும் நினைவுகள் வந்திடுச்சு..ஆனா அது ஒரு கொடுமையான காலகட்டம்..என் பொண்ணு ஐந்து மாத குழந்தையா இருந்தப்போ என் கணவருக்கு chicken pox வந்துச்சு.வெளிநாட்ல தனியா கைக்குழந்தையும் வச்சுகிட்டு ரொம்ப கஷ்டப்பட்டேன்.ஆனா என்னோட பயம் எல்லாம் எனக்கோ குழந்தைக்கோ பரவிடக்கூடாதேன்னு தான்.அவர தனியா ரூம்ல வச்சு ரொம்ப கவனமா பாத்துக்கிட்டேன்.கதவு கைப்பிடில கூட டிஷ்யூ சுத்தி விட்டுருந்தேன்னா பாத்துக்கோங்க..டாக்டற்கு போன் பண்ணி நாங்க பாதிக்கப்படாம இருக்க ஏதாவது மருந்து இல்ல ஊசி எடுத்த்துக்க முடியுமான்னு கேட்டப்ப அவரு ரொம்ப கூலா சொன்னாரு..இது வரை உங்களுக்கு வந்ததே இல்லன்னா தயாரா இருந்துக்கோங்க 95% உங்களுக்கும் வர்றதுக்கு சான்ஸ் இருக்கு..ஏன்னா chicken pox பொருத்தவரைக்கும் கொப்புளங்கள் போடுறதுக்கு முன்னாடி காய்ச்சல் இருக்குமே, அப்போ தான் கிருமிகள் வேகமாப் பரவும்..அதாவது இது chicken pox னு confirm பண்றதுக்கு முன்னாடியே மததவங்களுக்கு பரவிடும் ..ஆனா ஒவ்வொருத்தர் எதிர்ப்பு சக்திய பொறுத்து 15 நாள்ல காய்ச்சலும் கொப்புளன்களும் வரலாம் வராமலும் போகலாம் அப்படினு குண்ட தூக்கி போட்டார்...ஆனா ஒரு வயது வரை இயற்கையாவே குழந்தைகளுக்கு இதுக்கான எதிர்ப்பு சக்தி இருக்கும்.அதனால அவளுக்கு வரதுக்கு சான்ஸ் ரொம்ப கம்மின்னார். அது மட்டும் ரொம்ப ஆறுதலா இருந்துது.

அதே மாதிரி கணவர் குளிச்ச மூணாம் நாள் எனக்கு வந்திடுச்சு.அது வரை எம்பொன்னுக்கு தாய்ப்பால் தவிர வேற எதுவும் பழக்கல. ஆனா டாக்டர் heavy dose மருந்துகள் எடுக்கிறதுனால கண்டிப்பா பால் கொடுக்க கூடாதுன்னு சொல்லிட்டார்.இப்போ என்னை அதே ரூம்குள்ள படுக்க வச்சுட்டு என் கணவர் பாப்பாக்கு தாயுமானவனா மாறிட்டார்.NAAN formula milk வாங்கி கலக்கி கொடுக்க ஆரம்பிச்சார்.என் செல்லம் கூட ஏதோ புரிந்த மாதிரி ரொம்ப அட்ஜஸ்ட் பண்ணினா.இரவெல்லாம் அவ முழிக்கிறப்போ எல்லாம் அவரும் எழும்பி பால் கலந்து கொடுப்பார்.காலையில அவள குளிக்க வச்சு தேவையானதெல்லாம் எடுத்து கொண்டு எங்களோட நண்பர் வீட்ல கொடுத்துட்டு ஆபீஸ் போவார்.எனக்கும் ஜூஸ் லாம் கலந்து வச்சுட்டு போவார்.மதியம் அவரும் குழந்தையும் திரும்ப வர வரைக்கும் காய்ச்சலோட கஷ்டமும் குழந்தையையும் பாக்க முடியாமலும் அழுகையா வரும்.இதுல பீரியட்ஸ் வேற.பால் கொடுக்காம பால் கட்டி வலியும் குளிரும் கூட சேர்ந்து படுத்தி எடுத்து விட்டது.

சரியாக ஏழாவது நாள் இந்தியாக்கு வந்துட்டோம்.ஏற்கனவே லீவுக்கு புக் பன்னின டிக்கெட் தான்.பர்தா போட்டிருந்ததனால யாருக்கும் முகத்தில் இருந்த கொப்புளங்கள் தெரியல.(முகத்தில மட்டும் 40 இருந்தது.போர் அடிக்கிறப்போ அத எண்ணிக்கிட்டு இருந்தேன்).ஊருக்கு வந்த அப்புறம் தான் எனக்கு chicken pox வந்தது எல்லாருக்கும் தெரியும்.அது வரை சொல்லல.இல்லன்னா ரொம்ப டென்ஷன் ஆகியிருப்பாங்க.அதன் பிறகும் பதினைந்தாவது நாள் குளிக்கும் வரை பாப்பாவ தூக்கவே இல்ல.நீங்க சொல்ற மாதிரி என் கைல மட்டுமே இருந்தவ அப்போ அவ்வளவா என்ன தேடல.தூரத்துல எங்க அம்மா கிட்ட இருந்து சிரிச்சுப்பா.ஆனா அப்படி அவளால இருக்க முடியாம போயிருந்தா தான் நாங்க ரொம்ப கஷ்டப்பட்டு இருப்போம்.பதினைந்தாம் நாள் அவள கைல தூக்கி கொண்டு போய் பாலூட்டினப்போ எனக்கு கண்ணீரே வந்திடுச்சு.டாக்டர் சொன்ன மாதிரியே அவளுக்கு சின்ன காய்ச்சல் கூட வரல.

அந்த ஏழு நாட்கள் என் கணவர் பட்ட கஷ்டம் தான் இப்போ நெனச்சாலும் எனக்கு பாவமா இருக்கும்..அப்புறம் எங்களுக்கு ரொம்ப heavy dose tablets கொடுத்தாங்க..paracetamol கூட 800mg தந்தாங்க..அதனால வயிறு புண்ணாகி அது சரியா போக ஒரு மாசம் ஆச்சு..
உங்களுக்கு வேற எதாச்சும் சந்தேகம் இருந்தா கேளுங்க தெரிஞ்சா கண்டிப்பா சொல்றேன்

மேலும் சில பதிவுகள்