கர்பகால பிரச்சனை

நான் தற்போது ஆறு மாதம் கர்பமாக உள்ளேன். எனக்கு முதுகு பகுதி வலி பயங்கரமாக உள்ளது. படுத்து எழுந்து திரும்பவே முடியல. இடுப்பு எழும்பும் வலிக்கிறது. உட்கார்ந்தபடி குனிந்து ஒரு பொருளை எடுக்கும் போது மூச்சு அடைக்கிறது. எத்தனை தலையனை வைத்தாலும் என்னால் நிம்மதியாக உறங்க முடிவதில்லை. என்ன செய்வது? இது நார்மலா? வீசிங் பனிக்காலத்தில் வரும். தற்போது சில நேரம் வருகிறது. அதனால் குழந்தைக்கு எதாவது பாதிப்பு ஏற்படுமா? உதவுங்கள் தோழிகளே.

hi Ashvitha..Congrats... Idhu ellamey normal dha enakum veesing problem irukku.. enaku delivry aagi 6month dha aachu..na consiv ah irukum podhu enkoda periyavunga yarum illa nanum ipadi moochu problem varum podhu veesing nu ninaippa.. aana reason adhu illa naama sapadu konjam adhikam eduthalo illa sapita udaney paduthalum indha madhiri problem varum.. kolandhaiku endha problem varadhu...

Thank u so much abi. உங்களுக்கு நெஞ்செரிச்சல் இருந்ததா? docter thantha tonic ennala kudika mudiyala. jelusil sapdra. ithum normala?

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

aama ashvitha nenju eruchal adhikama irundhuchu.. adhuvum spicy ya masala add pannadhu edhu sapitalum ennala thongavey mudiyadhu romba nenju eruchala irukum.. ninga konjam karam kammiya sapidunga... sariyagidum

அபி எனக்கு ஒரு டவுட். என் friend ஒருவருக்கு கர்பமாக இருக்கும் போதே துளியாக பால் வர ஆரம்பித்ததாம். அப்படி வந்தால் தான் குழந்தை பிறந்த பிறகு பிரச்சனை இல்லாமல் தாய்பால் புகட்ட முடியுமா? இல்லையேல் எதாவது பிரச்சனை வருமா? help me.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

ashvitha enaku adhu pathi detail theriyala.. aana enakum prgnt ah irukum podhu vandhuchu aana kulandha pirandhu 1wek appuram pal varala.. na en kulandhaiku formula milk dha kodukura.. ninga yaravadhu experiance irukaravunga kitta kettu parunga...

pragnanta erruum bodhu pal varadathukum
deliveryku apparam pal varadhukum endha sambadamum ellai enaku delivery
agi 4month complete ayiduchu ennakum before delivery pal varala but na ennum en babyku mother feeding dhan panren ava normal weight,height helthyya erruka so tention agadhigea kandhipa ungae kuladaiku mother feeding mattum dhan pannuvenu nambikaya errugae
wish you all the very best

தற்போது எட்டு மாதம் நடக்கிறது. முன்பை விட அதிக அளவு உடல் வலியை உணர்கிறேன். வலது பக்க முதுகு எழும்பு அதிக வலியை தருகிறது. மேலும் இரவில் கால் நரம்பு திடீரென இழுத்து கொள்கிறது. சரியானாலும் அன்று முழுவதும் முட்டிக்கு கீழ் பின்புறம் வலி எடுத்து நடக்கவே சிரமமாக உள்ளது. கால் வீக்கம் இல்லை. சில நாட்களாக பேய் கனவாக வந்து பயந்து எழுந்துக் கொள்கிறேன். காலை தூக்கி பேன்ட் போட முடியவில்லை எழும்பு வலிக்கிறது. வாக்கிங் போனால் அசதியாகவும், அடிவயிற்றில் கனமாகவும் உள்ளது. நான் என்ன செய்ய? எதாவது பதில் போடவும் friends or sisters. PLZZZ

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

custom search செய்ய முடியவில்லை சிஸ்டர்ஸ் ப்ளீஸ் help me. . . 33 வாரம் நடக்கிறது. பாப்பாவின் தலை கீழ் நோக்கி உள்ளது. இப்பவே இப்படி ஆகுமா? சுகப்பிரசவம் ஆகவே தினமும் கடவுளை பிராத்திக்கிறேன். கொஞ்சம் பயமாக உள்ளது. தலை இந்த வாரத்திலே கீழே போய் இருப்பது பிரச்சனை ஒன்றும் இல்லையே?

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

குழம்பாதீர்கள்,கவலையும் படாதீர்கள்.
பாப்பா வயிற்றினும் வட்டமடித்துக்கொண்டே இருக்கும்.
அதாவது நீ அடைத்த பலூன்போல இருப்பிடத்தில் குட்டி பாப்பா சுழன்றுகொண்டே இருக்கும். தலை கீழே,மேலே,பக்கவாட்டில் வந்துதான் செல்லும்.
இப்படி வரும்போது பின்பக்கமிருந்து வலி ஆரம்பித்து இடுப்புவலியாக சுற்றி மேல் வயிறு பின் வஜினாவில் வலிக்கும்(சூட்டுவலிபோல பல மடங்கு)இப்பவியும் குட்டி உந்தி தள்ளுவதால் வரும்.அதாவது தலையை பலூனின் ஒரு பக்கமும் காலை ஒரு பக்கமும் வைத்து ஸ்விம் பண்ணுவதுபோல உந்தும். அப்படி உந்தி உந்திதான் வஜினல் பாத் ஓபன் கிடைக்கும்.. இதுதான் லேபர் பெயின். நல்லா நிம்மதியா படுத்து இருங்கள். கொஞ்சநேரம் பாப்பா விளையாடுவதை கவனியுங்கள். அப்படியும் வேறு டவுட் பயம்னா தாமதிக்காமல் டாக்டரை பாருங்க.

மிக்க நன்றி ரேனு மேடம். பாப்பா தலை கீழே தான் தொடர்ந்து இருக்கும் என்றும், உடலை தான் அசைத்து கொண்டிருக்கிறது என்று தவறாக நினைத்துவிட்டேன். இப்போது தான் புரிகிறது சுற்றி சுற்றி வரும் என்று. கவனித்தால் தெரிகிறது. ஆனால் எது தலை எது பின்புறம் எது முட்டிக் கை, கால் என்பது விளங்கவில்லை. ஆனால் நன்றாக வட்டமடிக்கிறது. நன்றி மேடம்.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

மேலும் சில பதிவுகள்