குக்கர்

குக்கர்: எது சிறந்தது Stainless steel bottom or Aluminium bottom பதில் அளிக்கவும்,நன்றி

For Health reasons stainless steel cooker is better. Aluminium should not come in contact with your food. You can cook rice and dal directly in the cooker and do not have to keep a vessel inside if you do not wish to.

Thank u

Hi...
This website is really awesome...it helped me a lot and i learnt variety of dishes from this website..one obligation..the recipes are mixed here...if it is segregated like sweets, lunch,dinner,snacks,breakfast etc like this it will more helpful..thanks for understanding...

தங்களது பாராட்டிற்கு மிக்க நன்றி.

//if it is segregated like sweets, lunch,dinner,snacks,breakfast etc//
?!!
சமையல் குறிப்புகளில் எந்த பிரிவிற்கு சென்றாலும், வலப்புறம் உள்ள பெட்டிகளில் குறிப்புகள் அனைத்தும், இனிப்பு, சட்னி, சிற்றுண்டி.. என்று தொடங்கி 200க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன. இத்தனை பிரிவுகள் எந்த தளத்திலும் இல்லை என்று சொல்லலாம். அறுசுவை தளம் தொடங்கிய தினத்தில் இருந்தே குறிப்புகள் ஏராளமான பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டே கொடுக்கப்பட்டு வருகின்றன. இவை எப்படி உங்கள் பார்வையில் படாமல் போனது என்று தெரியவில்லை. :-)

ஒன்றிரண்டு பிரிவுகள் என்றால் மெயின் மெனுவில் வருமாறு செய்து விடலாம். 200 க்கும் மேற்பட்ட பிரிவுகளை அப்படி கொடுப்பது இயலாது. எனவே, அவை வலப்புறம் Navigational blocks கொடுக்கப்பட்டுள்ளன.

அன்பு சரண்யா,

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் குக்கரில், டைரக்டாக சாதம் வைத்தால், அடி பிடிக்கும் வாய்ப்பு இருக்கு.

அலுமினிய குக்கரில் உள்ளே தனியாக பாத்திரம் வைக்காமல், நேரடியாக - பிரியாணி, சாத வகைகள் சமைக்க முடியும்.

அது மட்டுமில்லை, குக்கரை எக்சேன்ஜ் ஆஃபரில் மாற்ற வேண்டி வந்தால், அலுமினிய குக்கருக்குத்தான் மதிப்பு அதிகம்.

அன்புடன்

சீதாலஷ்மி

நான் என் குழந்தைக்கு எப்போதும் அலுமினிய குக்கரில் சமைத்து கொடுக்கிறேன். சமீபத்தில் ஒரு வலைதளத்தில் அலுமினிய பாத்திரதில் சமைத்தால் உடல் நல பாதிப்புகள் வரும் என பார்த்தேன். (எங்கள் வீட்டில் எல்லா சமையல் பாத்திரஙளும் அலுமினியம் தான்).
அலுமினிய பாத்திரதில் சமைத்தால் உடல் நல பாதிப்புகள் வருமா?

M Esakki

புளிப்பான பொருட்கள் நிச்சயம் பாத்திரத்துடன் தாக்கமடையும். அதைத் தவிருங்கள். சாதம் தவிர மீதி எல்லாவற்றுக்கும் ஏதோ ஒரு புளி சேர்த்துவிடுவோம் இல்லையா! :-) நான் எப்பொழுதும் சட்னி, சாலட், சம்பல் வகைகளைப் பரிமாற அலுமினியக் கரண்டியோ பித்தளை, வெள்ளிக் கரண்டியோ பயன்படுத்துவது இல்லை. (எவர் சில்வரைச் சொல்லவில்லை.) மரக் கரண்டி அல்லது கண்ணாடிக் கரண்டிகளைத் தான் பயன்படுத்துவேன். //அலுமினிய பாத்திரதில் சமைத்தால் உடல் நல பாதிப்புகள் வரும்// வராது என்பதில்லை. கேக் பேக் செய்ய, பிட்டு அவிக்க அலுமினியம் பிரச்சினை இல்லை. ரசம், புளிக்குழம்பு வைக்க மண் பாத்திரம் அல்லது செரமிக் ஆரோக்கியமான வழி. அப்படி இல்லையென்று சமைத்தால், உடனே வேறு பாத்திரத்திற்கு மாற்றிவிடுங்கள்.

‍- இமா க்றிஸ்

ரசத்தை அலுமினிய பாத்திரத்தில் வைத்தால் பாத்திரம் பளீர் என்று மின்னும்... அதற்கு அர்த்தம் இப்போது தான் புரிகிறது..
அய்யய்யோ இனி உடனே மாற்றி விட்டு விடுவேன்..
தகவலுக்கு நன்றிகள்..

மேலும் சில பதிவுகள்