சாக்லெட் கடல்பாசி

தேதி: December 31, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

 

கடல்பாசி - ஒரு பாக்கெட்
சாக்லெட் பார் - ஒன்று
சர்க்கரை - அரை கப்
பால் - அரை கப்
பாதாம் (துருவியது) - 2 தேக்கரண்டி


 

தேவையானவற்றைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் சாக்லெட் பாருடன் ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து கரைத்துக் கொள்ளவும்
மற்றொரு பாத்திரத்தில் ஒரு பெரிய டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, அதனுடன் கடல் பாசியைச் சேர்த்து நன்கு கரையும் வரை கொதிக்கவிடவும்.
கடல் பாசி நன்கு கரைந்ததும் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை கொதிக்கவிடவும்
கொதித்த கலவையுடன் சாக்லெட் கலவையை ஊற்றி கொதிக்கவிடவும்.
கலவை நன்கு கலந்துக் கொதிவரத் துவங்கியதும் பாலைச் சேர்த்து கலந்துவிட்டு கொதிக்கவிடவும்.
கலவை சற்று கெட்டியாக ஆரம்பித்ததும் தட்டில் பரவலாக நிரப்பி துருவிய பாதாமைச் சேர்க்கவும். ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து துண்டுகள் போடவும்.
சுவையான சாக்லெட் கடல்பாசி ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கலக்கலான புத்தாண்டு துவக்கமா??? அசத்துங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கடல்பாசி வெச்சு அழகா ஒரு ஸ்வீட் பரிமாறி இருக்கீங்க, நல்லா இருக்கு வாழ்த்துக்கள் ரேவ்ஸ் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ரேவதி அக்கா என்ன மாறி குட்டிஸ்(ஹா ஹா ) ;-) ஃபேவரிட் சாக்லெட் கடல்பாசி சூப்பர்...

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

Hi Revathi sister Very easy and sweet tasty receipe try pannittu solren

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

எனது. குறீப்பை வெளீயிட்ட அட்மின் அண்ணா அறூசுவை குழுவினர்க்கு நன்றீ

Be simple be sample

நல்லதோர் ஆரம்பம் புத்தாண்டில் துவக்கமாக சாக்லேட் கடற்பாசி :-) அசத்துங்க

நட்புடன்
குணா

புத்தாண்டூக்கூ முதல். பதிவு . தான்க்யு வனி

Be simple be sample

ஆமாபா ரொம்ப தான்க்ஸ். செல்வி

Be simple be sample

கனிஆமா உங்க. மாதிரு. குட்டிஸ்க்காக செய்ததுதான் தான்க்ஸ் கனி

Be simple be sample

ஆமா. சுபி .ரொம்ப. ஈசிதான்பா கண்டிப்பா. செய்துட்டு சொல்லுங்க. தான்க்யு

Be simple be sample

ஆமா தம்பிங் புத்தாண்டு தொடக்கம் ஸ்வீட்டோட எடுத்துக்கோங்க. தான்க்ஸ். தம்பிங்

Be simple be sample

ரேவ்ஸ் இத பாக்கவே இல்லையே நானு :o ஈசியான ஸ்வீட் அருமை பா வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹாய் ரேவ்ஸ்,

ரொம்ப நாள் கழித்து இப்பதான் சமையல் பக்கம் வந்திருக்கேன்.முதல் பதிவு

உங்களுக்குதான் :)

புத்தாண்டை இனிப்போட தொடங்கி வைச்சிருக்கீங்க.அசத்தலான

குறிப்பு,வாழ்த்துக்கள்,தொடர்ந்து கலக்குங்க :)

அன்புடன்
நித்திலா

தான்க்ஸ். சுவா.

அப்படியா நித்தி. தான்க்யு சோமச் பா.

Be simple be sample

ஹாய் ரேவ்ஸ். சௌக்கியமா? எங்க ஊர் வட்டிலாப்பம் மாதிரி இருக்கு உங்க சாக்லேட் கடல்பாசி. விருப்பபட்டியல்ல சேர்த்துட்டேன். சீக்கிரம் ட்ரை பண்றேன்பா.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

ஹாய். உமா . நலம்பா.நிங்க . அட அப்படியா செய்துட்டு சொல்லுங்க. உமா தான்க்ஸ்

Be simple be sample

கடற்பாசி என்பது கற்கண்டு வடிவத்திலும் இருகுமா? அல்லது
குச்சு வடிவில் மட்டும் தான் இருக்குமா?. கேள்வி எங்கு டைப் பண்றதுனு தெரியல அதனால தான் இங்கு கேட்கிறேன்.

கடற்பாசி மேல் படத்துல இருக்கற மாதிரி. கச்சியாதான் கிடைக்குது மஞ்சு

Be simple be sample

பதில் தந்தமைக்கு நன்றி

choclate kadarpaasi is very nice

ரேவதி இன்று உங்க சாக்லெட்கடல்பாசி செய்தேன் மிகவும் அருமயா இருந்தது

வெறும் கடல்பாசியை விட இந்த ப்பிளெவெர் ரொம்ப நல்ல இருந்தது நன்றி

Thanku pa seithu parthutu sonnathuku .

Be simple be sample