ஜப்பானீஸ் சாட்டின் எம்ராய்டரி

தேதி: December 31, 2013

5
Average: 4.8 (4 votes)

 

தைப்பதற்கு துணி
சாட்டின் லேஸ் - பச்சை மற்றும் விரும்பிய நிறம்
எம்ராய்டரி நூல் ( பூ போடுவதற்கான நூல் ) - பச்சை மற்றும் விரும்பிய நிறம்
தடிமனான எம்ராய்டரி நூல்
எம்ப்ராய்டரி ஃப்ரேம் (Hoop)
மெல்லிய ஊசி
தடிமனான பெரிய ஊசி
பென்சில்
கட்டர்

 

குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். துணியை விரும்பிய அளவிற்கு நீள்சதுர துண்டாக வெட்டிக் கொள்ளவும்.
படத்திலுள்ள டிசைனை பென்சிலால் துணியில் வரைந்துக் கொள்ளவும். (ஐந்து நீண்ட கொடிகள், இலைகள், முடிவில் மூன்று சிறிய வட்டங்கள்).
பிறகு ஃப்ரேமில் துணியை பொருத்திவிட்டு, மெல்லிய ஊசியில் பச்சை எம்ப்ராய்டரி நூலைக் கோர்த்து படத்தில் உள்ளது போல் கொடி தையல் போடவும். வட்டத்தினுள்ளே சக்கரம் போல் சாதாரண தையல் தைக்கவும். (சக்கரத்தில் ஐந்து கோடுகள் இருப்பது அவசியம்).
தடிமனான பெரிய ஊசியில் சாட்டின் லேஸைக் கோர்த்து, கீழ் முனையில் முடிச்சுப் போடவும். மேல் முனையில் 2 சென்டிமீட்டர் அளவில் படத்தில் உள்ளது போல் குத்தி இழுக்கவும்.
கடைசியில் இதேபோல் வரும். (இப்படி செய்ய முடியவில்லை என்றால், ஊசியில் ஒற்றையாக நூலைக் கோர்த்து, சாட்டின் லேஸை ஒரு சென்டிமீட்டர் அளவில் மடித்து தைத்துக் கொள்ளவும்).
சக்கரம் போல் தைத்துள்ள இடத்தில் கீழிருந்து மேலாக சாட்டின் லேஸை குத்தி இழுக்கவும். சக்கரத்திலுள்ள ஐந்து கோடுகளில் ஒரு கோடு விட்டு, அடுத்த கோட்டில் சாட்டின் லேஸை தைக்கவும்.
இவ்வாறு அந்த வட்டம் முழுவதும் ஒரு கோடு விட்டு அடுத்த கோட்டில் சாட்டின் லேஸை தைக்கவும். சுற்றிலும் தைத்து முடிந்ததும் சக்கரத்திலுள்ள கோடு மறைந்து, ரோஜா இதழ் போல் வரும்).
தடிமனான பெரிய ஊசியில் பச்சை சாட்டின் லேஸைக் கோர்த்து, துணியில் கீழிருந்து மேலாக குத்தி இழுத்து, படத்தில் உள்ளது போல் ஒரு சென்டிமீட்டர் அளவில் இடைவெளி விட்டு மீண்டும் குத்தி இழுக்கவும். இதேபோல் அனைத்து இலைகளிலும் தைத்துக் கொள்ளவும்.
மெல்லிய ஊசியில் தடிமனான எம்ப்ராய்டரி நூலைக் கோர்த்து, ஊசியில் இருமுறை நூல் சுற்றவும்.
பிறகு ஊசியை அதே முனையில் குத்தி இழுக்கவும். மொட்டுத் தையல் போல் வரும். இதேபோல் விரும்பிய நிறங்களில், விரும்பிய இடங்களில் மொட்டுக்கள் தைத்து நிரப்பவும்.
கடைசியாக சிறு துணியை பூ ஜாடி போல் வைத்துத் தைக்கவும். பிறகு துணியின் அடிப்பகுதியில் லைனிங் வைத்துத் தைத்து, ஒரங்களில் துணி அல்லது லேஸ் வைத்து தைத்து முடிக்கவும்.
விரும்பியவாறு ஃப்ரேம் செய்து சுவரில் மாட்டலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

மிக அழகாய் இருக்கிறது :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முசி
ரொம்பவும் அழகா இருக்கிறது.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி.
நன்றி,வனி.
நன்றி,நிகிலா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அழகாக இருக்கு முசி.

‍- இமா க்றிஸ்

வாழ்த்திர்க்கு மிக்க‌ நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

சூப்பர். சூப்பர். சூப்பரோ சூப்பர்.

எல்லாம் சில‌ காலம்.....

வாழ்த்திர்க்கு மிக்க‌ நன்றி;பாலநாயகி

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.