ரோஜா பூவே..!!

உன் மீதான ஈர்ப்பு
தொடங்கியது என்றோ??
தொடரும் என்றும்!!

காண்பவர் நெஞ்சம்
உன்னிடம் தஞ்சம்!!
கவிதை உலகம்
திணறும் கொஞ்சம்!!

மனம் பறிக்கும்
அழகு ராணி நீ!!
வாழ்வின் தத்துவம்
சொல்லும் ஞானியும் நீ!!

உன்னாலே
அழகாகும் புவி!!
தன்னாலே
வளமாகும் என் கவி!!

அறுசுவை அன்புள்ளங்களுக்கு,இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :)

அன்புடன்,
நித்திலா

5
Average: 5 (4 votes)

Comments

Super nithila... I love roses yellow rose is my fav

நித்திலா மனதை மயக்கும் ரோஜாவையும், அழகான கவிதை வரிகளையும் கொடுத்து புத்தாண்டு வாழ்த்து சொல்லி இருக்கீங்க :) மிக்க நன்றி வாழ்த்துக்களுக்கு.
உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ரோஜாவைப்பற்றி ரொம்ப அழகான கவிதை,
இனிய புத்தாண்டு நல்​வாழ்த்துக்கள்ங்க :-)

நட்புடன்
குணா

அன்பு நித்திலா,

Say It with Flowers என்று சொல்வாங்க. அது போல, அழகான கவிதையுடன் நீங்க தந்திருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி.

ரோஜாவின் மணம் போலவே கவிதையும் இனிமை.

அன்புடன்

சீதாலஷ்மி

ஹாய் ப்ரியா,

எனது வலைப்பதிவிற்கு அன்புடன் வரவேற்கிறேன் தோழி :)

//Super nithila// மிகவும் நன்றி தோழி.முதல் பதிவிற்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் :)

எனக்கும் ரோஜாக்கள் என்றால் மிகவும் பிடிக்கும்,எனக்கும் மஞ்சள் ரோஜாதான்

பேவரைட் :)

தங்கள் முதல் வருகைக்கும்,உற்சாகமான பாராட்டிற்கும் மீண்டும் எனது நன்றிகள்.

அன்புடன்
நித்திலா

ஹாய் அருள்,

//மனதை மயக்கும் ரோஜாவையும், அழகான கவிதை வரிகளையும்//

மிகுந்த மகிழ்ச்சி,மிகவும் நன்றி அருள் :)

உங்கள் அன்பான பாராட்டிற்கும்,வாழ்த்திற்கும் மிகவும் நன்றி தோழி :)

அன்புடன்
நித்திலா

வணக்கம் குணா,

//ரோஜாவைப்பற்றி ரொம்ப அழகான கவிதை//

மிகுந்த மகிழ்ச்சி,மிகவும் நன்றி குணா :)

உங்கள் பாராட்டிற்கும்,வாழ்த்திற்கும் மீண்டும் எனது நன்றி :)

அன்புடன்
நித்திலா

சீதாம்மா,

உங்கள் பதிவைப் பார்க்கும் போதே உற்சாகம் ஊற்றெடுக்கிறது.

மீண்டும்,மீண்டும் படித்து ரசிக்கிறேன்.வருகை புரிந்து விருது அளித்ததற்கு எனது

மனமார்ந்த நன்றிகள் :)

//ரோஜாவின் மணம் போலவே கவிதையும் இனிமை//

இதம் தரும் பாராட்டிற்கு மீண்டும் எனது நன்றிகள்மா :)

அன்புடன்
நித்திலா

ரோஜாவே அழகு. அதற்கு அழகு ஊட்டும் கவிதையும் அழகோ அழகு

Be simple be sample

ஹாய் ரேவ்ஸ்,

//ரோஜாவே அழகு.அதற்கு அழகு ஊட்டும் கவிதையும் அழகோ அழகு//

உங்கள் அன்பான பாராட்டிற்கு மிகவும் நன்றி ரேவ்ஸ் :)

அன்புடன்
நித்திலா

நித்தி மேடம், உங்க கவிதை ஒன்று ரெண்டு நல்லார்ந்தா.. இப்படி இருக்குது அப்படி இருக்குன்னு சொல்லலாம். எல்லா கவிதையும் தேர்ந்தெடுத்த முத்துக்கள் மாதிரி அத்தனை அருமை. இதில் என்ன வார்த்தைன்னு சொல்லி பாராட்ட.. நீங்க மட்டும் ஆணா பொறந்திருந்தா.. உங்க கவிதையாலயே பெண்களை அசரடிச்சிருப்பீங்களோன்னு நினைக்கறேன் :D

வாழ்த்துக்கள்ங்க மேடம்.. மணம் தொடர்ந்து பரவட்டும் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நித்தி
மனம் பறிக்கும் அழகு ராணி நீ,
சூப்பர் கவி(தை)
வாழ்த்துக்கள்

பூவை வைத்து நி(த்தி)லா சொன்ன கவிதை... :) வாழ்த்துக்களுக்கு நன்றி நித்திலா. உங்களுக்கும் எங்கள் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வணக்கம் கல்ப்ஸ் மேடம்,

நீங்கள் எனது பக்கத்திலா?கனவோ என்று நினைத்தேன்.

தங்கள் வருகைக்கும்,வாழ்த்திற்கும் எனது நன்றிகள் :)

அன்புடன்
நித்திலா

ஹாய் நிக்கி,

//மனம் பறிக்கும் அழகு ராணி நீ,
சூப்பர் கவி(தை)//

ரொம்ப சந்தோஷம்டா.நன்றி நிக்கி :)

தங்கள் வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி நிக்கி :)

அன்புடன்
நித்திலா

ஹாய் வனி,

//பூவை வைத்து நி(த்தி)லா சொன்ன கவிதை// மிகவும் நன்றி வனி :)

தங்கள் வருகைக்கும்,வாழ்த்திற்கும் மீண்டும் எனது நன்றி :)

தாமதமாக பதிலளிப்பதற்கு அனைவரும் மன்னிக்கவும்.

அன்புடன்
நித்திலா

காண்பவர் நெஞ்சம்
உன்னிடம் தஞ்சம்!!
கவிதை உலகம்
திணறும் கொஞ்சம்!!

மனம் பறிக்கும்
அழகு ராணி நீ!!
வாழ்வின் தத்துவம்
சொல்லும் ஞானியும் நீ!!

நித்திலா அருமை, உதடுகள் மீண்டும் மீண்டும் சொல்லிட துடிக்கும் வரிகள்...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ரொம்ப அருமையான கவிதை நித்திலா. ஸோ ஸ்வீட்!

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

ஹாய் ரேணுகா,

எனது வலைப்பூவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் :)

//நித்திலா அருமை, உதடுகள் மீண்டும் மீண்டும் சொல்லிட துடிக்கும் வரிகள்//

மிகுந்த மகிழ்ச்சி,மிகவும் நன்றி தோழி.தங்கள் வார்த்தைகள் உற்சாகம்

அளிக்கிறது.மிகவும் நன்றி ரேணுகா.வரிகளை குறிப்பிட்டு கூறியதற்கு நன்றி தோழி.

தங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் மீண்டும் எனது நன்றிகள் :)

அன்புடன்
நித்திலா

பிந்து மேடம்,

//ரொம்ப அருமையான கவிதை நித்திலா. ஸோ ஸ்வீட்//

உங்களின் மனமார்ந்த பாராட்டில் மிகவும் மகிழ்ந்தேன்.மிகவும் நன்றி மேடம்.

தங்களின் வருகைக்கும்,கருத்திற்கும் மீண்டும் எனது நன்றிகள் :)

அன்புடன்
நித்திலா