
மகிளாவிற்கு மகிழுந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை.
ஆனால் பயிற்றுநர் பெண்ணாக இருக்கவேண்டும். வீட்டிற்கு வந்து அழைத்துச்செல்ல வேண்டும் என்ற தனிப்பட்ட விருப்பங்களையும் கொண்டிருந்தாள்.
ஆனால் அவள் தேடியது போல் பயிற்சி நிலையம் எதுவுமில்லை என மகிளாவின் கணவர் மகேஷ் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.
அதுவும் இல்லாமல் ஒரு பயிற்சி நிலையத்தின் பேரைச்சொல்லி அங்கே சேர்ந்து கொள், மிக நன்றாக பயிற்றுவிப்பார்கள்.
நான் கூட அங்கு சென்றுதான் கற்றுக்கொண்டேன். நீயும் அங்கேயே செல்லேன் என எவ்வளவு சொல்லியும் தன் பிடிவாதத்தின் படியிலிருந்து இறங்கி வரமறுத்ததோடு, பயிற்சி பற்றியும் மறந்துவிட்டாள்.
மகிளா ஒருநாள் கடைக்கு சென்றாள். நடைபயணம் மேற்கொண்டது போலவும் இருக்கும், பொருட்கள் வாங்கியது போலவும் இருக்கும் என்ற 2 இன் 1 என்ற பர்பஸில் சென்றாள்.
அப்பொழுது ஒரு மாருதி காரின் மேலே ஒரு போர்டு தென்பட்டது. அதில் பயிற்சி நிலையத்தின் பெயர் போட்டதோடு மட்டுமல்லாது, அடைப்புக்குறிக்குள் ( பெண்களுக்கு பெண்களே கற்றுத்தரும் பயிற்சி பள்ளி என்றும் வீட்டிலிருந்தே அழைத்துச்சென்றுவிட்டு பின்பு வீட்டிலேயே விட்டுவிடும் வசதியுடன் கூடியது)என்றும் எழுதப்பட்டிருந்தது.
சாலை என்பதையும் மறந்த மகிளா பல்லு பளிச்சினு தெரிகிறார் போல் சிரித்துக்கொண்டே அதிலிருக்கும் எண்ணை நோட் பண்ணாமல் விட்டுவிட்டாள்.
பிறகு என்ன அடுத்த நாள் அதற்கு அடுத்த நாள் என தவமாய் தவமிருந்ததில் ஒருநாள் அந்த அற்புத 4 சக்கர இரதமானது கண்ணிற்கு தட்டுப்பட்டது.
பிறகு என்ன எண்ணைமிக கவனமுடன் குறித்துக்கொண்ட மகிளா , அன்றே அந்த எண்ணிற்கு தொலை பேசினாள்.
கணவரின் சம்மதத்தையும் பெற்றுக்கொண்டாள்.
முதல்நாள் இரதம் வந்தது, மிகப்பெருமிதமாக ஃப்ளைட் ஓட்டப்போகும் ஆர்வத்துடன் ஏறி அமர்ந்து ஸ்டீரிங்கை தொட்டு கும்பிட்டு விட்டு, ஓட்டுநர் சொல்லிக்கொடுக்கும் முறைகளை கவனமுடன் செயலாற்றத்தொடங்கினாள்.
அடடே அதுக்குள்ள நாமே நல்லா ஓட்டுறமே என்ற பூரிப்புடன் இருந்த மகிளாவிற்கு, பயிற்றுநர் அவ்வப்பொழுது அவரிடம் இருக்கும் கிளட்சையும், ப்ரேக்கையும் பிடிக்கலேனா என்னாகும் என்பதை குறைந்த நிமிடங்களிலேயே கண்டுபிடித்துவிட்டாள்.

எந்நேரந்தான் மகிழுந்து மகிழுந்துனே சொல்லிட்டு இருக்கிறது, வாய் கோணறாப்பிலயே இருக்கு.
அதாங்க அந்த காரை ஓட்டுறதுக்கான அதாவது பழக்கறதுக்கான இடம் கோவையின் நெரிசல்மிகுந்த சிவானந்த காலனியும், சத்தி ரோடும்னா நம்ம மகிளாவுக்கு சந்தேகம் வருமா? வராதா நீங்களே சொல்லுங்க.
வீட்டாண்ட வந்து அழைச்சுட்டு போய் இன்னொர்ரு வீட்டாண்ட இன்னொரு அக்காவ ஏறசொல்லி இப்ப ஓட்டிட்டு இருக்கிற மகிளாவ நீ பின்னாடி குந்தும்மே, நாளைக்குத்தான் இனி உனக்கு பயிற்சினு சொன்னா எப்படி இருக்கும் மகிளாவோட மனசு!!
இப்படியே 4 பேர்க்கும் ஒவ்வொருவரின் வீட்டு வாசலிருந்து இன்னொருவர் வாசல் வரை பழக்கிவிடும் ட்ரைவிங்னால என்ன அழகா பழகி இருப்பாங்கனு நீங்க நெனக்கிறீங்க.
ஆனா ஃபீஸ்லாம் ரொம்ப கரிக்டா டாண்ணூ 2 வது நாளே பூராத்தையும் வாங்கி போட்டாங்க. 18லிருந்து 20 நாட்கள் மட்டுமே வகுப்பு.
அட நான் என்ன சொல்ல வாரேனா, உங்க கான்செப்ட்லாம் ரொம்ப நல்லா இருக்கு, ஆனா கார் பழகுவதற்கு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தை தேர்ந்தெடுத்து, அல்லது மிகக்குறைவான நடமாட்டம் உள்ள இடங்களிலாவது ஓட்டுவதற்கு பயிற்சி அளிக்கலாமே.
அதேபோல சில நுணுக்கங்களை அதாவது எப்படி ஜெர்க் ஆகாம நிறுத்தறது, ஆஃப் கிளட்ச்ல ட்ராஃபிக்ல எப்படி போறது, மேடான பகுதிகளில் வண்டியை ரிவர்ஸ் எடுப்பது எப்படி போன்றவைகள் மிக முக்கியமானவைதானே!!
அதேபோல் மேடான பகுதிகளில் ஏறும்பொழுது, வண்டி ஆஃப் ஆகிவிட்டால் மீண்டும் எடுக்கும்போது பின்னாடி நகராமல் எடுப்பது எப்படி போன்ற அத்யாவசிய நுணுக்கங்கள் இல்லாமல் ட்ரைவிங் பழகி என்ன பிரயோஜனம்.
இது போன்ற அலட்சியமான இடங்களில் பழகுவது(!!??) பணமும், நேரமும் விரயமாகும் ஒரு விசயம் என்பதோடு மட்டுமல்லாமல், சாலைவிபத்திற்கும் வழிவகுக்கும் என்பதில் எள்முனையளவும் சந்தேகமில்லைதானே?
இந்த கதையில் வரும் நிகழ்வுகளுக்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லைனு சொன்னா நம்பவா போறிங்க!!
Comments
மகிழுந்து
அன்பு அருட்செல்வி,
ம், உங்க அனுபவத்தை அழகாக சொல்லிப் போட்டிங்க.
நானும் கார் ட்ரைவிங் பழகி, லைசென்ஸ் எல்லாம் எடுத்தேன். ஆனா, இப்ப க்ளட்ச் எது, ஆக்ஸிலேட்டர் எதுன்னு கூட மறந்து போச்சு:(
டூ வீலர் ஓட்டக் கத்துக்கணும்னு இப்ப ஆசை இருக்கு. இருந்தாலும் நாட்டு(ரோட்டு) மக்கள் மேல உள்ள அன்பால(!) வேணாம் விஷப் பரீட்சைன்னு அமைதியாக இருக்கேன்:):)
தொடர்ந்து உங்க அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள், நகைச்சுவையாக சொல்லும் விதம் ரொம்ப நல்லா இருக்கு.
அன்புடன்
சீதாலஷ்மி
அருள் அக்காங்,
ரொம்ப பயனுள்ள பதிவுங்க,
நிறைய இடங்களில் டிரைவிங் ஸ்கூல்ங்கிற பேர்ல கொள்ளைதான்.. :-( மேலும் எழுதிட வாழ்த்துக்கள்ங்க :-)
நட்புடன்
குணா
அருள்
அருள் அசத்துங்கறீங்க போங்க கருத்தான கதைக்கு வாழ்த்துக்கள் :)
//இந்த கதையில் வரும் நிகழ்வுகளுக்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லைனு சொன்னா நம்பவா போறிங்க!!//
இதுக்கு பேர்தான் எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைங்கறதா :p
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
மகிழ்ச்சி
வாங்க சீதாமேடம் :) முதற்கண் என்னோட நன்றியை உரித்தாக்கிவிடுகிறேன் :) ஏன்னா உங்களோட பதிவு எனக்குள்ள மாபெரும் சந்தோஷத்தை கொடுத்துள்ளது.
குழந்தைகள் வளரும் வரை அவர்களை பற்றிய சிந்தனைகள், நோய் நொடியில்லாம வளர்த்தணும்னு ஒரு வித பயத்திலயே குடும்ப வண்டி ஓடும். அப்போ எல்லாம் வண்டிய தொடவே பயப்படுவேன். (இத்தனைக்கும் எனக்கு டிவிஎஸ் 50 ல கல்லூரி போன அனுபவம் உண்டு.)
எங்க வண்டி எடுத்துட்டு போய் விழுந்து அடிபட்டுட்டா ரொம்ப கஷ்டமாச்சேனு
எடுக்கவே மாட்டேன். ட்ராஃபிக் ஒரு பயம் இப்படியே ஓட்டியாச்சு, சரி 4 சக்கரத்தை ஏன் விட்டுவைப்பானேனு அதிலயும் நம்ம திறமைய காமிப்போம்னு பழகப்போனா இப்படி.
ஆனா இப்பலாம் ஓட்டலேனாலும் சக்கரம் உருளும் அளவுக்கு பக்கத்து கடைகளுக்கு, வகுப்புகளுக்கு அழைத்துச்செல்லனு போய்ட்டிருக்கேன்.
உங்களோட பதிவு படிக்கும் போது உங்களோட அன்பான பேச்சு போலவே இருக்கு :)
மிக்க மகிழ்ழ்சி கலந்த நன்றிங்க :)
குணா தம்பி வாங்க :) உங்க பதிவுக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி :) நல்லா சொல்லித்தர இடங்களும் இருக்கு, ஆனா நல்லா விசாரிச்சு சேரணும்.
வாங்க சுவா :) ஆஹா பழமொழியெல்லாம் சொல்லி ஓட்டுறீங்களா :) எப்படியும் கண்டுபிடிச்சுடுவீங்க, அதுக்கு ஏன் நாமளே சொல்லிடுவமேனு சொல்லிட்டேன் :)
சுவா உங்களோட ஊக்கப்படுத்தும் பதிவும் பாராட்டும் மகிழ்ழ்சியளிக்கிறது தோழி :)மிக்க நன்றி :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
அருள்
ஹாய் அருள்,
உங்க வலைப்பதிவு வேகமா வளருது,மனமார்ந்த பாராட்டுக்கள் :)
உங்க தலைப்பு ரொம்ப பிடிச்சிருக்கு :)
நகைச்சுவையோட ரொம்ப இயல்பா மகிழுந்து பயிற்சி பற்றி எழுதி இருக்கீங்க,
கடைசி மூன்று பத்திகள் அருமை,சிந்திக்க வேண்டிய ஒன்று,மனமார்ந்த
வாழ்த்துக்கள் அருள் :)
அன்புடன்
நித்திலா
அருள்
ஹஹா... சூப்பரு அப்பு. நிச்சயம் உங்களுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைன்னு நான் நம்பறேன். ;)
சீரியஸா சொல்லனும்னா, நம்ம ஊரில் ட்ரைவிங் ஸ்கூல் பலதில் நீங்க சொல்லும் சின்ன சின்ன விஷயங்களை சொல்லி தர மாட்டாங்க. அவங்க சொல்லிக்கொடுத்ததை மட்டுமே வெச்சுகிட்டு வண்டி ஓட்டவும் முடியாது தான். கொஞ்சம் நல்லா வண்டி ஓட்டும் யாரையாவது கூட வெச்சுகிட்டு நாம முதல்ல தனியா எடுத்து பழகனும். நாம முதல்ல நம்மை நம்பனும்... இதுவும் ட்ரைவிங் கத்துக்க அவசியம். நான் வண்டி ஓட்ட கத்துகிட்டு லைசன்ஸ் வாங்கியது 2003’ல். ஆனா முதன் முதலில் தனியா கார் ஓட்டியது 2006ல் தான். இவர் சொல்லி இவர் அருகில் இருக்க ஓட்டியது. அவருக்கு என் மேல் இருந்த நம்பிக்கை, எனக்கும் தைரியம் தந்தது.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
செல்வி
செல்விஆஹா சுப்பரு .. பின்னி பெடல் எடுக்கிறீங்க செல்வி.. காமெடில கலக்குரிங்கோ
Be simple be sample
அருள்
மகிளாவின் மகிழுந்து கற்ற அனுபவத்தை உங்களுக்கே உரித்தான நகைச்சுவையோடு கூறியிருப்பது கட்டுரைக்கு சுவையை கூட்டியது. நாமெல்லாம் சைக்கிள் ஓட்டவே பயிற்சி நிலையம் தேடுற ஆளு. இதில் எங்கேர்ந்து மகிழுந்து பயிற்சி எடுக்கறது.. அப்படியே எடுத்தாலும் அது மகிழுந்து பயிற்சியா இருக்காது. சோகவூந்து பயிற்சி ஆய்டும். அதுக்கு தான் தயக்கம் காட்டுறேன். எங்களை போன்ற எல்.கே.ஜி பொண்ணுங்களுக்கு உங்களோட அனுபவகட்டுரை ரொம்பவே பயன்படும்னே நம்பறேன். அங்காங்கே செண்ட் போல உங்க நகைச்சுவைய தெளிச்சு உருப்படியா வண்டி ஓட்ட விடாம பண்னிட்டீங்க.. பாருங்க கெக்கபிக்கன்னு சிரிச்சுட்டே படிச்சு முடிச்சேன்.. வளரட்டும் உங்கள் நகைச்சுவையோடு கூடிய படைப்புகள் பா.. மனம் நிறைந்த வாழ்த்துக்களோடு :)
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
ஹாய் அருள்
அருள்
நானும் டிரைவிங் கத்துகிட்டேன் அதுவும் என் கணவர்கிட்டேயே.
ரிவர்ஸ் கியர் சொல்லித் தரவே இல்லை.கேட்டால் வாழ்க்கையில் எப்பவும் ரிவர்ஸில போகக் கூடாதாம்.
இது எப்படி இருக்கு.?
நல்லா நகைசுவையோட எழுதறீங்க.
மனம் நிறைந்த நன்றிகள்
மிக்க நன்றி நித்திலா :) தொடர்ந்து ஊக்கப்படுத்தும் பதிவுகள் இடுவது மகிழ்ச்சியா இருக்கு :)
வனி :)//நிச்சயம் உங்களுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைன்னு நான் நம்பறேன்//
நல்லது,நல்லது இதை இதைத்தான் எதிர்பார்த்தேன் :)
சின்ன சின்ன விஷயங்களையும் கற்றுக்கொடுக்கும் பயிற்சிநிலையம்லாம் இருக்கு வனி :)
இங்க கோவைல தனியா ரேஞ்சே அமைச்சு சொல்லித்தர நிலையம் இருக்கு. நாமளே போய்க்கணும், வீட்ல வந்து அழைச்சிட்டு போகமாட்டாங்க. மேலும் மலைப்பாதை பயிற்சி, மண்ரோடு பயிற்சி, நகரபயிற்சி, இரவுநேர சாலைப்போக்குவரத்து பயிற்சினு நல்லாவே சொல்லித்தராங்க.
ஒருநாள் தியரி கிளாஸ் உண்டு அதில காரோட டயர் மாத்துறது, ஆயில் செக்பண்ணுவதுனு இன்னும் சின்ன சின்ன மெக்கானிஸம்லாம் கூட சொல்லித்தராங்க.
20 நாள் கழிச்சு, அதுவரை சைக்கிள் கூட தள்ளிட்டு போகமுடியாதவங்களை கூட அழகா கார் ஓட்ட வெச்சிடுவாங்க.
இன்னும் நிறைய சொல்லிட்டே போகலாம்.
ஆனா நம்ம கதையின் நாயகியோட கண்டிஷனால பணம்,நேரம் விரயம், கூடவே பலனும் குறைவு, அதுனால அப்படி போகாம நல்லா விசாரிச்சு போங்கனு சொல்றேன்.
ஆனா நீங்க சொன்ன தன்னம்பிக்கையும் கூடவே வந்திடும்ப்பா, முதல் முறை ஸ்ட்ரீங் பிடிக்கும்போது கைலாம் உதறும் அதே 4,5 ரவுண்ட் வந்தப்புறம், நாய்க்குட்டிய வாக்கிங் அழைச்சிட்டு போறாப்பில இருக்கும்.
தொடர்ந்து ஊக்கபடுத்துங்க வனி :) மிக்க நன்றி :)
ரேவ்ஸ் ரொம்ப ரொம்ப நன்றிப்பா :) உங்க ஒவ்வொர் பதிவும் எனக்கு உற்சாகமளிக்குது :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
கல்பூ, நிகிலா
ஹா ஹா கல்பூ இந்த சைக்கிள் சவாரி பத்தி ஒரு பெரிய பதிவே எழுதலாம்:) அவ்வளவு விஷயம் எனக்கு நடந்திருக்கு, அப்பாவோட பெரிய சைக்கிள எடுத்துட்டு தள்ளவேமுடியாம தள்ளிட்டு, கால் எட்டாம கிழ விழுந்துனு ஏகப்பட்ட விஷயம் இருக்கு :)
சோகவுந்து அடடா இப்படி உங்களைத்தவிர யாருமே எழுத முடியாது போங்க.
நல்ல ட்ரைவிங் ஸ்கூல் போனா நிச்சயம் யார்வேணாலும் காரோட்டலாம்.
எனக்கு தெரிஞ்சவங்க ஸ்கூட்டிய தள்ளி நிறுத்தினா ஸ்கூட்டி நகராதுப்பா, ஆனா அவங்க அப்படி இப்படினு தள்ளாடுவாங்க, ஆனா இப்ப கார், ஸ்கூட்டி எல்லாமே நல்லா ஓட்டுறாங்க. அதெல்லாம் ஒரு பயமும் இல்ல கல்பூ. மகிளா மாதிரி கண்டிஷன் போட்டு அரைகுறையா பழகாம நல்ல இடத்தில சேர்ந்து நல்லபடியா ஓட்டுமாறு வாழ்த்துகிறேன் கல்பூ :)
நிகிலா சூப்பர் போங்க, கார் ஓட்டிட்டு போகும் போது முட்டுசந்து வந்தாக்க என்ன பண்ணுவீங்கனு நினைச்சுப்பார்த்துக்கிறேன் :)
எனக்குகூட ட்ரைவிங் பழகும்போது அந்த டீச்சரம்மா 3 கியர்தான் பழக்கிவிட்டாங்க, லைசென்ஸ் எடுக்கும்போது 4 த் கியர் போடச்சொன்னார், ஆனாலும் போட்டுட்டன்ல.. :)
மிக்க நன்றி நிகிலா உங்க கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
;))
//நம்பவா போறிங்க!!// ;))
- இமா க்றிஸ்
அருள்!
சான்ஸே இல்லைங்க, எப்படி இப்படி எல்லாம்? :-)
மகிழுந்து'ன்னா என்னன்னு யோசிச்சு கண்டுபிடிக்கவே கொஞ்ச நேரம் ஆச்சு ;-) கலக்குறீங்க :)
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)
இமா :) பிந்து :)
இமா கண்சிமிட்டலுக்கு மிக்க நன்றிங்க :))
பிந்து :) //மகிழுந்து'ன்னா என்னன்னு யோசிச்சு கண்டுபிடிக்கவே கொஞ்ச நேரம் ஆச்சு ;-)//நிஜமாவா சொல்றீங்க??
மகிழ்ச்சி கலந்த நன்றிங்க :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.