மகத்துவம் மிகுந்த மார்கழி

ஆண்டுக்கு 12 மாதங்கள் இருந்தாலும் மார்கழி மாதம் என்பது சிறப்பான மாதமாகும் எங்குப் பார்ப்பினும் கோவில்களில் பூஜைகள், பஜனைகள்,பக்தி பாடல்கள் என்று பல்வேறு சிறப்புகள் பெற்ற மாதம். மார்க்கசீர்ஷம் என்ற வடமொழிச் சொல்லே தமிழில் மார்கழி ஆனது. மார்க்க என்றால் வழி. சீர்ஷம் என்றால் மேலான. ஆக, மார்கழி என்றால் மேலான வழி எனப்பொருள்.
பக்தியே மேலான வழி. அதிலும், இறைவனைச் சரணடைந்து விடுதல் மிக மிக உயர்ந்த வழி.

திறக்காத கோவில்கள் கூட மார்கழியில் திறக்கும் என்று சொல்வார்கள் ஏனென்றால் வருடம் முழுவதும் கோவிலுக்குச் செல்லமுடியாதவர்கள் மார்கழி மாதத்தில் கோவில்களுக்குச் சென்று வந்தால் வருடம் முழுதும் சென்ற பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இம்மாதத்தில் வரும் ஆருத்ரா தரிசனமும்,வைகுண்ட ஏகாதசியும் மிகவும் சிறப்பானவை.
இப்படிப்பட்ட மார்கழி மாதத்தில் நாம் அனைவரும் விரும்பி செய்யும் வேலைதான் கோலமிடுவது.
மார்கழியின் மகத்துவத்தையும்,நான் போட்ட கோலங்களையும் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
அதிகாலை பனியில் நடுங்கும் குளிரில் பக்கத்தில் உள்ள கோவிலில் ஒலிக்கும் சுப்ரபாதத்தைக் கேட்டுக்கொண்டு கோலம் போடுவதில் ஒரு தனிச் சுகம்.
அக்கம் பக்கம் வீட்டுக் கோலத்தினைப் போட்டி போட்டுக்கொண்டு நம் வீட்டுக் கோலம் அழகாகவும் பெரியதாகவும் இருக்கனும் என்று நினைத்துக்கொண்டே வாசல் தெளித்துக் கோலம் போடுவது மனதிற்கு மகிழ்ச்சி.
அதிகாலை நிசப்தம் அமைதியான நேரம் பக்கத்து வீடுகளில் கோலம் போடுபவர்களின் சலசலக்கும் பேச்சுக்கள் எல்லாம் அனுபவிப்பதில் அலாதி இன்பம்.
மார்கழி மாதத்தில் கோலம் போடாத வீடுகளில் கூடக் கோலமிட்டு நடுவில் பசுஞ்சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து அதில் பரங்கி பூவினை வைப்பார்கள் பரங்கிபூவிற்குப் பதிலாகப் பூசணி பூவையாவது வைப்பது பழக்கம்.
மார்கழியின் பனிக் குளிர்ச்சி சிலருக்கு நோய்த் துன்பங்களைத் தரலாம். எனவே இது பீடை மாதம் என்று சிலர் தவறாகத் திரித்துக் கூறி விட்டனர். உண்மையில் அகப்புறப் பீடைகளைப் பக்திப் பணிகளால் அறவே ஒழித்து, தூய்மையாக்கப் பொருத்தமான மாதமே மார்கழி மாதம். பீடு என்றால் சிறப்புப் பெருமை என்ற அர்த்தமும் உண்டு.

எனவே பீடு உடைய மாதம் மார்கழி என்றனர். அதுவே காலப்போக்கில் பேச்சுவடிவாக மருவி பீடை மாதம் என்றாகி விட்டது. மார்கழி வந்தாலே எல்லா மகளிருக்கும் மகிழ்ச்சி பொங்குகிறது. விடியற் காலையில் எழுந்து குளிரிலும் மன உறுதியுடன் நீராடி பனி தலையில் படிய வீட்டையும் முற்றத்தையும் பெருக்கித் தூய்மைப்படுத்துகின்றனர்.

தெருவெங்கும் கோலமிடுகின்றனர். செம்மண்ணைப் பூசி அலங்கரிக்கின்றனர். கோலத்தின் நடுவே ஒருபிடி சாணத்தை வைத்து, அதில் பூசணிப் பூ அல்லது அருகம்புல்லைச் சூட்டுகின்றனர். விளக்கேற்றுகின்றனர். மார்கழியில் தினமும் பாடும் பக்திப் பாடல்களுடன் திருப்பாவை, திருவெம்பாவை, தொண்ரடிப் பொடி ஆழ்வார் அருளிய திருப்பள்ளி யெழுச்சி, மாணிக்க வாசகர் அருளிய திருப்பள்ளி யெழுச்சி ஆகிய நான்கு நூற்பாடல்களை வீடுகளிலும், கோவில்களிலும் பாராயணம் செய்கின்றனர்.
சூரியனின் இயக்கம் அயனம் எனப்படும். சூரியன் தெற்கு நோக்கி இயங்குவது தட்சிணாயனம். வடக்கு நோக்கி இயங்குவது உத்தராயனம். இவை இரண்டில் உத்தராயனம் உயர்ந்தது என்பர்.தட்சிணாயனத்தின் கடைசி மாதம் மார்கழி. மேலும் உத்தராயனத் தொடக்கப் புனித நாள் டிசம்பர் 21. இத்திருநாள் மார்கழியின் ஒருநாள்.

இந்த நாளில் சில கோவில்களில் சிறப்புப் பூஜைகளைச் செய்கின்றனர். ஸ்ரீகிருஷ்ண பகவான் மாதங்களில் நான் மார்கழி மாதமாக இருக்கிறேன் என்று பகவத் கீதையில் அருளினார்.
இப்படி மார்கழி மாதத்தின் சிறப்புகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
எனவே இவ்வாறு பல சிறப்புகள் வாய்ந்த மார்கழி மாதத்தின் பயனை எல்லோரும் அறிந்துகொள்வோம்.

5
Average: 4.7 (7 votes)

Comments

புதுபுது தகவல்களுடன் மார்கழி மாதம் பற்றிய பதிவு ரொம்ப அருமைங்க :-)

நட்புடன்
குணா

சூப்பர் ஸ்வர் :)பல நல்ல தகவல்கள் தெரிந்துகொள்ள முடிந்தது..வண்ண கோலங்கள் அழகு.வாழ்த்துக்கள் ஸ்வர் :)

Kalai

Very nice info.... All should know this.... Both kolam,s colour combination so nice swarna...
ithu eppa pottathu? New year kolam ah?

சுவா உங்க இந்த பதிவினை பார்த்த உடனே எனக்கு இந்த பாடல்தான் நினைவுக்கு வருது. மார்கழிப்பூவே..மார்கழிப்பூவே..

அதிகாலைல பனித்துளி போர்த்திய போர்வையோட புற்கள் எல்லாம் ஆழ்ந்த உறக்கத்தில இருக்கும் வேளையில கோலம்மிடுவதுங்கிறது ஒரு அற்புத தருணம். நீங்க அதை நல்லா அனுபவிச்சு கோலம்போடுறீங்கனு நீங்க எழுதிய இந்த பதிவே நல்லா புரிய வெக்குது.

எனக்கலாம் கோலம்கிறது பேப்பர்ல மட்டுமே வரும். வாசலில் தினமும் ஸ்டார் கோலம்தான் போடுறது. உங்களோட நெளிக்கோலம்லாம் பார்த்துட்டு ஆச்சர்யபட்டேன் சுவா :)
அதுவும் மூளைக்கு வேலைகொடுக்கும் ஒரு அற்புதமான செயல்னு படிச்சிருக்கேன்.
புள்ளி பிசகாம வெச்சு, அதை சரியா இணைச்சுனு அழகா போட்டு இருக்கீங்க :)
அழகா நிறைய விஷயங்களை பகிர்ந்துட்டு இருக்கீங்க :)
வாழ்த்துக்கள் சுவா :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஸ்வா, உங்கள் கட்டுரை மட்டும் அல்ல....கலை நயத்துடன் கண்ணுக்கு விருந்தாய் அழகழகாய் நீங்கள் போட்ட கோலங்களும் மனதைக் கவர்ந்து சுண்டி இழுக்கின்றன. இப்படி கோலங்கள் போட்டுதான் என் அண்ணாவையும் கவர்ந்திங்களோ?..;)
மாதங்களில் அவள் மார்கழி //எனக்கு இந்த நாட்டில் எல்லா மாதமுமே மார்கழி தான்..ஆனா கோலம் மட்டும் போட வெளிய போக முடியாது...;) .:)// ... காதலியை //பின்ன காதலனவா அப்படி நினைக்க முடியும்..;) // மார்கழி மாதமாக உருவகப்படுத்திபாடும் அளவுக்கு மார்கழிமாதம் அழகுன்னு நானும் எங்கோ படித்த நியாபகம்... அழகோடு அழகாக வீட்டுவாசலில் கோலமிடுவது இன்னும் அழகு..... உங்க கட்டுரையில் கோவில், பஜனை பற்றி சொல்லி இருப்பது இன்னும் தனிச் சிறப்பு. தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி..வாழ்த்துக்கள் தோழி..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

சுவா. அருமையான பதிவு. . நல்லா விளக்கமா அழகா சொல்லிருக்கிங்க . கோலமும் அழகோ அழகு

Be simple be sample

முதல் பதிவிற்க்கு மிக்க நன்றி தம்பிங் க :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி கலை உங்களை இங்கு பார்ப்பதில் மகிழ்ச்சி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி ப்ரியா :) புத்தாண்டு கோலம் இல்லங்க முன்னாடி போட்டது ;)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அருள் உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிப்பா :)

/அதிகாலைல பனித்துளி போர்த்திய போர்வையோட புற்கள் எல்லாம் ஆழ்ந்த உறக்கத்தில இருக்கும் வேளையில கோலம்மிடுவதுங்கிறது ஒரு அற்புத தருணம்./
ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க பா :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுவா,

மார்கழி மாததின் அருமை பெருமைகள் எனக்கு தெரிந்தது ஒரு சில தான். ஆனால் உங்களின் இந்த கட்டுரை பல விஷயங்களை அறியபடுத்தியது மனதுக்கு ஜீலீர் என்ற சந்தோஷத்தை தந்தது. வீட்டுக்குள்ளேயே துறுதுறுன்னு பேசிட்டு இருந்த நம்ம வீட்டு பொண்ணு, மேடை ஏறி பேசும் போது எத்தனை ஆனந்த கண்ணீரோடும், பெருமையோடும்,கர்வத்தோடும் பார்ப்போம்.. கேட்போம். அந்த ஆனந்தத்தை இன்று நான் உணர்கிறேன். ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லா எழுதறீங்க சுவா. ஆர்டிபிஷியல் கலர் எதுவும் இல்லாம வெகு எதார்த்தமா இருக்கும் உங்க வார்த்தைகள். கீப் இட் அப் சுவா. இன்னும் இன்னும் நிறைய நீங்க எழுதனும்.. வாழ்த்துக்கள் பா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

/கலை நயத்துடன் கண்ணுக்கு விருந்தாய் அழகழகாய் நீங்கள் போட்ட கோலங்களும் மனதைக் கவர்ந்து சுண்டி இழுக்கின்றன./
மிக்க நன்றி சுமி :) /
/இப்படி கோலங்கள் போட்டுதான் என் அண்ணாவையும் கவர்ந்திங்களோ?..;)/
என் கைவண்ணத்தை கல்யாணத்துக்கு பிறகுதானே பார்க்கிறார் உங்கண்ணா அப்றம் எப்படி நான் கவர்வது ;)

தொடர்ந்து வரும் உங்கள் பதிவிற்க்கும் ஊக்கத்திற்க்கும் மிக்க நன்றி சுமி:)

/தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி../ அவ்வ்வ்வ்வ்
என்னையும் நம்.....பி அண்ணா ப்ளாக் கொடுத்திருக்காங்க :o

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரேவ்ஸ் மிக்க நன்றிங்கோ :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கல்ப்ஸ் உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிப்பா :)

/வீட்டுக்குள்ளேயே துறுதுறுன்னு பேசிட்டு இருந்த நம்ம வீட்டு பொண்ணு, மேடை ஏறி பேசும் போது எத்தனை ஆனந்த கண்ணீரோடும், பெருமையோடும்,கர்வத்தோடும் பார்ப்போம்.. கேட்போம். அந்த ஆனந்தத்தை இன்று நான் உணர்கிறேன்./
கல்ப்ஸ் இதற்கெல்லாம் முழு காரணம் நீங்க எல்லோரும் தானே, பாபு அண்ணா நீங்க அருள் வனி ரேவ்ஸ் எல்லோரும் கொடுத்த ஊக்கமும் நம்பிக்கையும் தான் :)
மார்கழியின் சிறப்புகளை பற்றி எழுதுன்னு சொன்னதே உங்கண்ணாதான் உங்கள் வாழ்த்துகளை அவரிடம் செலுத்திவிடுகிறேன் :)
/ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லா எழுதறீங்க சுவா./
:o உங்களை போன்ற எழுத்தாளர்களுக்கும் கவிதாயினிகளுக்கும் நடுவில் நான் சிறு துரும்புன்னு கூட சொல்ல முடியாது என்னைப் போய்ய்ய்ய்ய்ய் !!!

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுவா
மார்கழி மாதம் பீடு உடைய மாதம்.
ஆமாம் அது தேவர்களுக்கு அதிகாலைப் பொழுது என்பார்கள்.

என்னை பற்றி தான் உங்களுக்கு தெரியுமே ;) எனக்கும் இது போல விஷயத்துக்கும் எட்டா தூரம். அதனால் நீங்க சொன்ன எல்லா தகவலுமே எனக்கு புத்தம் புதுசு. நல்ல தகவல். தெரிந்து கொள்ள செய்தமைக்கு நன்றி சுவா. :)

கூடவே உங்க கோலம் எல்லாம்... சான்ஸே இல்லைங்க, நமக்கு சுட்டுப்போட்டாலும் வராது நேரா ஒரு கோடு போட. நிறைய நாள் நினைத்தது உண்டு... பேப்பரில் வரைய பயன்படுத்தும் பென்சில் போல தரையில் கோலம் போடவும் ஒரு பென்சில் கண்டு பிடிக்காம விட்டுட்டாங்கன்னு ;) அழகாக இருக்கு சுவா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நிக்கி உங்கள் வருகைக்கு மிக்க நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

/என்னை பற்றி தான் உங்களுக்கு தெரியுமே ;)/ ஆமாங்கோ ;)

இதை பற்றி போட ரொம்ப யோசித்து சரி போடுவோமே என்றுதான் முயர்ச்சித்தேன் வனி ஆனால் எல்லோருமே புதுசா இருக்குன்னு சொல்லும்போது சந்தோசமாக இருக்கு :)
/கூடவே உங்க கோலம் எல்லாம்... சான்ஸே இல்லைங்க,/ மிக்க நன்றி வனி இது ஒரு பெரிய விசயமே இல்லை வனி முயர்ச்சி செய்து பாருங்க ஈசியா வந்திடும் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அன்பு ஸ்வர்ணா,

அழகாகத் தொகுத்து எழுதியிருக்கீங்க. உங்க கோலங்களும் உங்க எழுத்தைப் போலவே அழகு! பாராட்டுக்கள்!

அதுவும் நீங்க கொடுத்திருக்கும் தலைப்பு பார்த்ததும், மனசுக்குள்ள ஒரே குஷி! ஏன் தெரியுமா? நான் பிறந்தது மார்கழியாச்சே :):)

மார்கழி மாதம் கோலம் போடுவதற்காக, சீக்கிரமே எழுந்த காலங்கள், கோல நோட்டில் போட்டு, சேர்த்து வைத்த கோலங்கள், முதல் நாளே சிமெண்ட் தரையில் சாக்பீஸ் வைத்து, ப்ராக்டீஸ் பண்ணியது, மற்ற எல்லா வீடுகளிலும் என்ன கோலம் போட்டிருக்காங்க, எத்தனை புள்ளி கோலம், என்று சர்வே எடுத்தது, என்று ஒரே மலரும் நினைவுகள் வந்துடுச்சு.

இப்ப எல்லாம் ஒரு ஸ்டார் கோலம் மட்டுமே. இப்ப உங்க கட்டுரை படிச்சதும், திரும்பவும் அந்த பொற்காலம் வராதா என்று ஏக்கமா இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு சீதாமா உங்கள் பதிவு மிகவும் உற்சாகமாக இருக்கிறது உங்கள் வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றிங்க மா :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஏராளமான தகவல்கள். அருமையான கட்டுரை சுவா.

‍- இமா க்றிஸ்

இன்றுதான் உள்ளே நுழைந்தேன். கட்டுரைகள் இரண்டும் சுவாரசியமாக இருந்தன. வானவில் கலர்கலராகக் கலக்க என் வாழ்த்துக்கள். ;)

‍- இமா க்றிஸ்

சுவர்ணா,
கோலங்கள் ரொம்ப அழகா இருக்கு :-)

மாரகழி மாதம் பற்றி நீங்கள் சொல்லி இருப்பதும் அருமை!

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

இமாம்மா தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பிந்து வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.