சமர்ப்பணம்

அறுசுவையை புதுபிச்ச பிறகு நாமும் புதுசா எதாவது எழுதனும்னு நினைச்சுட்டே இருந்தேனே தவிர... என்ன எழுதறது.. எப்படி எழுதறது.. எப்படி தொடங்குறது.. எங்கேர்ந்து தொடங்குறது .. ம்ஹும் ஒண்ணும் புரிபடல. கடைசியா ஒரு நல்ல விஷயத்தில் இருந்து தொடங்குவோம்னு இந்த அனுபவத்தையே இந்த ப்ளாக்கின் நல்ல தொடக்கமாக முன் வைத்து தொடங்குறேன் :)

நமக்கு வாழ்க்கைல பல விஷயங்கள் இம்ப்ரஸ் பண்ணியிருக்கும்.எனக்கு அப்படி இம்ப்ரஸ் ஆன விஷயங்கள் சிலவற்றில் முக்கியமானதாக இதை கருதுகிறேன். சமீபத்தில் நண்பர்களின் சந்திப்பு சங்கமத்தில் கலக்கும் ஒரு அற்புத வாய்ப்பை எனக்கு ஒரு சகோதரர் ஏற்படுத்தி தந்தார். அந்த ஆனந்தமான ஒரு நிகழ்வு என் வாழ்க்கையில் முதல் முறையாக நான் பார்த்த ஒரு மகிழ்ச்சியும், குதூகலமும் நிறைந்த குடும்ப கொண்டாட்டம் என்றே கூறுவேன். ஏனென்றால் நான் இதற்கு முன்பு அந்த ஒரு அந்நியோன்யத்தையும், அன்பையும், அக்கறையையும் என் குடும்ப விழாக்களில் பங்கேற்ற போது கூட பார்த்ததில்லை. சிறுவயது முதலே என் பெற்றோர் எங்களை எந்த ஒரு குடும்ப விசேஷங்களுக்கும் அழைத்து சென்றதில்லை. அதனாலோ என்னவோ நாங்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆன பிறகும் கூட நாங்கள் கலந்து கொண்ட நெருங்கிய குடும்ப விசேஷங்களிலும் எங்களால் மனதளவில் ஒன்ற முடியாமல் போய்விட்டது. அடுத்தவர் என்ன நினைப்பார்களோ, இப்படி சொன்னாலோ, செய்தாலோ தவறாக போய்விடுமோ என்று பெரும்பாலான நேரங்களில் கல்யாண காட்சிகளுக்கு போனால் கட்டாயம் சாப்பிடாமல் தான் வருவேன். இதற்கு மேற்சொன்ன காரணங்களே காரணம். தவிர, சம்பந்தப்பட்ட உறவுக்காரரின் மனப்போக்கும், லயிப்புக்கு காரணமில்லாமல் போயிருக்கலாம்.

ஆனால்.. ஆனால்.. இந்த ஒதுங்கி போகும் மனோபாவமும், கூச்சதன்மையும், அந்நியோன்யமின்மையும் இந்த நண்பர்களின் சந்திப்பு சங்கமத்தில் தவிடுபொடியானது. அதற்கு காரணம் நான் மேற்சொன்ன அந்த சகோதரரின் உரிமையான பாசமும், கவனிப்பும், அக்கறையும், அன்பும் தான். அவர் மட்டுமல்லாது அவரை சார்ந்த உறவுகளும், நண்பர்களும் அவரை போலவே இருந்தார்கள் என்பது தான் இதில் ஆச்சர்யமே. அவர் இடத்திற்கு, அவர் ஊருக்கு, அவர் வீட்டிற்கு நாங்கள் சென்றிருந்த போது அது ஒரு உறவினரல்லாத வீடு என்ற நினைப்பு எள்ளளவும் எங்களுக்கு ஏற்படாதவகையில் எங்களையும் மறந்து எங்களை அந்த வீட்டில் உரிமையோடு வளைய வர செய்தார்.

நேரா நேரத்திற்கு ஒரு தாயை போல வயிற்றை அமைதிபடுத்தி உணவிடுவதிலும் சரி, அது சிறிய ஊரானாலும் அந்த ஊரில் உள்ள சிறப்பான இடங்களை மிகுந்த ஆர்வத்தோடும்,ஒன்றுதலோடும் அழைத்து சென்று காட்டுவதில் ஒரு சக தோழரை போலவும், வந்திருக்கும் நண்பர்களின் குறிப்பறிந்து அவர்களுக்கு வேண்டியதை நேரத்திற்கு நிறைவேற்றி வைப்பதில் ஒரு சேவகனை போலவும் அவருக்கு நிகர் அவரே தான்.

சாதாரணமாக நம் சொந்தம் கூட நம்மை ஒருநாள் அன்பாக அழைப்பார். வந்து ரெண்டு நாள் இருந்துட்டு போங்கன்னு... ஆனா போன ரெண்டாவது நிமிஷமே அவர் முகம் ஆகும் செலவுகளால் மாறிபோவதை நம் ஒவ்வொருவராலும் நிச்சயம் உணர முடியும். முதலில் இருந்த சுரத்து நாம் கிளம்பி வரும்போது காணாமல் போயிருக்கும். ஆனால் இந்த நண்பர் கொஞ்சம் கூட சளைக்கவில்லையே. என்னவோ பர்ஸை காலி பண்றதையே தலையாய நோக்கமா கொண்ட மாதிரி.. இன்னும்..இன்னும்னு செலவு பண்ணிகிட்டே இருந்தார். முகத்தில் சிறு வாட்டமும் இன்றி. அதான் இங்கே ஸ்பெஷலே. போனதில் இருந்து சாப்ட்டு, சாப்ட்டு சாப்பாட்டை பார்த்தாலே ஒரு பயம் வரும் சூழ்நிலையில் இருந்த எங்ககிட்ட இன்னும் வேற என்ன புதுசா பண்ணலாம்னு வேற ஐடியா கேக்கறார்.. பாவம்ல நாங்க..

சும்மா சொல்ல கூடாதுங்க. நம்ம கூட பொறந்தவனோ/வளோ கூட இந்தளவு அன்போடு ஒரு கரண்டி சாப்பாட்டை அன்பா அருகிருந்து போட்டிருப்பாங்களான்னு சந்தேகம் தான். நாங்க அங்கே இருந்த அந்த ஒன்றரை நாள் முழுக்க தானே பக்கத்தில் இருந்து பார்த்து பார்த்து பரிமாறி குறை, நிறைகளை கேட்டுகிட்டார்.

எங்களை மட்டுமல்லாமல், எங்களோடு வழி துணையாக வந்திருந்த உறவுகளையும், அவர்களுக்கு எந்த மனவாட்டமும் ஏற்படாதவாறு அவர்களின் நோக்கமறிந்து அவற்றை நிறைவேற்றி வைத்து மேலும் அவர்களை இப்படியும் ஒரு மனிதரா என்று ஆச்சர்யகடலில் மூழ்க வைத்தார் என்றே சொல்வேன். நாங்கள் வீட்டிலிருந்து புறப்படும் போதிலிருந்து, ஊர் போய் சேரும்வரை வழியெங்கும் போன் செய்து எங்களை அக்கறையோடும், பொறுப்போடும் விசாரித்தது மனதை இன்றும் நெகிழச்செய்த ஒரு விஷயம். ஏனென்றால் எங்க வீட்டில் அந்த வேலையை என் அம்மா ஒருவர் தான் மிக மிக அதிகமாக செய்வார். அந்த தாயன்பை இந்த சகோதரரிடமும் நான் பார்த்தேன். இந்த அரிய குணம் அனைவருக்கும் வந்துவிடாதல்லவா? நம்மை பெற்ற தாய் விசாரிக்கிறாரென்றால், தன் குழந்தையை பற்றிய அக்கறையில் விசாரிக்கிறார் என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் எந்த ரத்தபந்தமுமில்லாத ஒருவர் விசாரிக்கிறாரென்றால் மிக பெரிய விஷயம் தானே.

இன்னும் அந்த மனிதரை பற்றி நிறைய சொல்ல ஆசைதான். ஒரே இடத்தில் சொன்னால் கொஞ்சம் திகட்டி விடுமோ என்று..இதோடு ஒரு தொடக்கத்தை வைத்து என்னை ஆச்சர்யமூட்டிய அந்த அதிசய மனிதருக்கு இந்த கட்டுரையை பூங்கொத்தோடு சமர்ப்பணம் செய்கிறேன் :)

5
Average: 5 (7 votes)

Comments

Anbu kalpu... blog vandhacha... vazhthukkal. Mudhal padhivu poda piriyappattu on the way'la mob padhivu. Adhaan thamingilam.. ninga sonnadhaiye oruvar ennidam sonnaar ;-) adhanaal ningalum adhaiye solla ketka alavillaa magiChi.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப ரொம்ப அருமையான தொடக்கம்ங்க அக்காங் :-)
பல அன்புள்ளங்களை உறவுகளாக அறிமுகம் செய்து மிகச்சிறப்பான உபசரிப்பில் ஆழ்த்திய அந்த உன்னத மனிதருக்கு நன்றி என்ற மூன்றெழுத்து போதாது.. இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன், அவர் நட்பு கிடைத்ததற்கும், அவர் தந்த வாய்ப்பை வரும்காலங்களில் அவருக்கும் செய்திடவேண்டுமென்று..
முதல் பதிவே முத்தான பதிவாய் தொடங்கியமைக்கு வாழ்த்துக்கள்ங்க அக்காங் :-)

நட்புடன்
குணா

வனி, என்னையே நான் கிள்ளி பார்த்துட்டேன். நம்ம வனியா தங்க்லிஷ்ல வர்றாங்கன்னு :) அப்புறம் தான் புரிஞ்சுட்டேன்.. நீங்க வெளியே இருந்து மொபைலில் ஆர்வமாக போட்ட முதல் பதிவுன்னு. ரொம்ப ஹேப்பி வனி (இதற்குதானே ஆசைபட்டாய் பலகுமாரா பட தாக்கம் தான் இந்த ஹேப்பி ;)) முதல் பதிவு போட்டு முதல் ஆளா ப்ளாக் தொடங்கினதுக்கு தட்டி கொடுத்து ஆசிர்வதிசிருக்கீங்க. இந்த கட்டுரை கூட காலதாமதமாக வந்த ஒன்று தான் நிறைய எழுத நிறைய யோசிச்சு வச்சிருந்தேன். ரொம்ப லேட் பண்ணினா நம்ம கோழீஸ் எங்கே கொம்பு ஊன்றிடுவாங்களோன்னு சீக்கிரமே போட்டுட்டேன்.. அதனால் ஷார்ட்டா போய்டுச்சி B)

//ninga sonnadhaiye oruvar ennidam sonnaar ;-) // எனக்கும் தெரியுமே அந்த ஒருத்தர் ஆருன்னு ;)

மீண்டும் ஹேப்பி வனி.. முதல் பதிவு போட்டு வாழ்த்தியதற்கு. :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

குணாங்க, கூடுமானவரை அறுசுவைல எல்லா இழைகள்லயும் உங்க பதிவு இல்லாம இருந்ததில்லை. அதை பார்க்கும் போது அளவு கடந்த ஹேப்பி. ரொம்ப அழகா எல்லாரையும் பாராட்டி என்கரேஜ் பண்றீங்க. இந்த ஒரு பெருந்தன்மையான, மற்றவரின் படைப்புக்கு மரியாதை தரும் பண்பு பாராட்டுக்குரிய ஒன்றே. உங்களை நினைச்சா பெருமையா இருக்குங்க தம்பிங்க. உங்களை போன்ற தூய நட்பு கிடைத்ததற்கும் இறைவனை பிரார்த்திக்கிறேன் :)

உங்கள் பதிவிற்கு நன்றி + ஹேப்பி தம்பிங் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அட. இன்ப அதிர்ச்சி. பல நாள் கழித்து கல்ப்ஸ் பதிவு . ஏற்கனவே மிஸ் பண்ணீட்டோம் நு கவல படறோம். இப்ப இன்னும் பல விஷயங்கள் சொல்லி புகை கிளப்ப போறீங்கன்னு தெரியுது.. இனிய அனுபவத்தை நாங்களூம் சேட்க தயார் தான்க்ஸ் கல்ப்ஸ்.

குணாங் இப்ப தம்பிங் அப்படின்னு சொன்னாலே உங்க நியாபகம்தான் வரும்.ஏதாவது பதிவி போட்டா கூட தம்பிங். ஏன் இன்னும் லைக் போடலன்னுதான் யோசிக்கிறேன்.எங்கே எல்லாருக்கும் கிடைச்ச அன்பு தம்பிங் நீங்க.

Be simple be sample

கலக்கிட்டீங்க கல்ப்ஸ். :-)
பூங்கொத்து பெற்ற அந்த அதிசய மனிதருக்கு என்னிடமிருந்தும் அன்போடு ஒரு பூங்கொத்து. @}->-- @->-- ;-)

‍- இமா க்றிஸ்

கல்ப்ஸ் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வரதுல உங்களை அடிச்சுக்க முடியாது :)
அருமையான கட்டுரையை அழகா கொடுத்துருக்கீங்க பா சூப்பர்
நீங்க சொன்ன ஒவ்வொறு வார்த்தைகளும் நிதர்சனமான வார்த்தைகள் பா அந்த அதிசய மனிதருக்கு உங்களோடு சேர்ந்து நாங்களும் அன்போடு பூங்கொத்தை சமர்ப்பிக்கிறோம் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரேவதி,

இன்ப அதிர்ச்சி உங்களை போன்ற தோழிகளின் இவ்வாறான பதிவுகளை பார்க்கும் போது தான். ஏனென்றால் சொந்தங்களே வருஷம் என்ன, மாமாங்கம் கழிச்சு வந்தாலும் எங்கேடா போனே.. எப்படி இருந்தேன்னு கூட கேக்க மாட்டாங்க. ஆனால், உங்களை போன்ற தோழிகள் நினைப்பதோடு நில்லாமல் இத்தனை ஆர்வத்தோடு விசாரித்து பதிவிடுவது நட்பிற்கும், உறவு என்ற வார்த்தைக்கும் ஒரு அர்த்தத்தை தருகின்றன. மிக்க நன்றி ரேவதி. நான் எங்கேயும் போகல :) உங்களை போன்ற தோழிகளையும், அன்னை இல்லம் அறுசுவையையும் விட்டு எங்கே போக முடியும்.. குட்டீஸ் ஸ்கூல் போனதும் பெண்டு கழட்டறாங்க. அதனால் எங்கும் அசைய முடியவில்லை. இனிமேல் தொடர்ச்சியாக வர பார்க்கிறேன்.

உங்கள் பதிவிற்கும், அன்பான விசாரிப்பிற்கும் மீண்டும் என் நன்றிகளும், மகிழ்ச்சியும் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

இமாம்மா :)

//கலக்கிட்டீங்க கல்ப்ஸ். :-)// கலக்கினது நானில்லை.. அந்த மனிதரும், அங்கே வேடந்தாங்கல் பறவைகள் போல் எந்த ஊரானாலும், நாடானாலும் கவலைப்படாமல் நட்புக்கு மரியாதை தந்து பறந்து வந்து திக்குமுக்காட வைத்த தோழமைகள் தான் :)

வரவிற்கும், பதிவிற்கும் ஹேப்பியோ ஹேப்பி :) எவ்ளோ தூரத்தில் இருந்தெல்லாம் பூங்கொத்து கொரியரில் வந்துட்டே இருக்கு. சம்பந்தப்பட்டவர் தாமதிக்காம ரிசீவ் பண்ணிக்கனும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சுவா,

//கல்ப்ஸ் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வரதுல உங்களை அடிச்சுக்க முடியாது :)//

வெக்க வெக்கமா வருதுப்பா :D.

என்ன ஆச்சர்யம் பாருங்க.. நான் வார்த்தைல தான் சொல்லியிருக்கேன். இதிலயே நான் குறிப்பிட்ட அந்த அதிசய மனிதரை பார்க்கமலேயே புரிஞ்சுட்டீங்க ;)

உங்கள் வருகைக்கும், அன்பான பதிவிற்கும் டாங்க்ஸ் சுவா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்ப்ஸ் அசத்தலான கட்டுரைய வழங்கி இருக்கீங்க வாழ்த்துக்கள் என்றென்றும் :)

காலைல நான் ஒரு வேலையா போகும்போது அறுசுவைய மொபைல்ல பார்த்தேன். இந்த தலைப்பை பார்த்த உடனே என்னடா நாம இன்னும் போடலியே அப்புரம் எப்படினு ஒரே ஷாக். அதெப்படி கல்ப்ஸ் கோவைல நான் டைப்படிச்சு வெச்சிருந்த தலைப்பை இப்படி எடுக்க முடிஞ்சுது :) நிஜமாவே எனக்கு ஒரே ஆச்சர்யம்தான், இப்பத்தான் வந்தேன் வந்த உடனே இங்கு பதிவு போட்டு ஆச்சர்யத்தை பகிர்ந்து கொண்டேன் தோழியே!!
உங்கள் எழுத்துக்கு இருக்கும் ஏராளமான ரசிகைகளில் நானும் ஒருத்தினு சொல்லிக்கிறேன் இவ்விடத்தில் பெருமையுடன் :)
மேன்மேலும் நல்ல பல கருத்துக்களை பகிர்ந்து கொள்ள என் மன்ப்பூர்வமான வாழ்த்துக்கள் கல்ப்ஸ் :) குட்டீஸ் கேட்டெனு சொல்லிடுங்கோ :)

தலைப்பை மட்டுமே பார்த்துட்டு பதிவு போட்ட எனக்கு இப்ப ஒரு விஷயம் புரியுது :)
கல்ப்ஸ் நீங்க ஒரு அருமையான விசேஷத்துக்கு போய் நல்லா கொண்டாடிட்டு வந்திருக்கீங்கனு புரியுது, அழகா,விளக்கமா எழுதி இருக்கீங்க :) அடுத்த பதிவினை எப்ப வெளியிடுவீங்க எதிர்பார்ப்போட இருக்கோம் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கல்ப்ஸ்
சமர்ப்பணம். மனதை தொடுகின்றது தோழி.

அட.. இப்போதுதான் பார்க்கிறேன்!! முதல் பதிவே நல்ல படிப்பினைத் தரக்கூடிய பதிவாக கொடுத்து இருக்கின்றீர்கள். விருந்தினர்களை எப்படி எல்லாம் உபசரிக்க வேண்டும், கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதை ஒரு அதிசய மனித கதாபாத்திரத்தின் மூலம், என் போன்றவர்களுக்கு பாடமாக எடுத்து இருக்கின்றீர்கள். நானும் என் வாழ்க்கையில் அது போல் நடந்துகொள்ள இனியாவது முயற்சிக்கின்றேன்.

அது என்ன முதல் படம்? வெளியே ச்சோ என்று பெய்யும் மழையை, லாட்ஜ் ஜன்னல் வழியே ஒரு பெண் பார்ப்பது போல்? அதற்கு எதாவது சிறப்பு அர்த்தம் இருக்கின்றதா? கொட்டும் மழையில் அங்குமிங்கும் உங்களை யாரேனும் அலைக்கழிக்க விட்டார்களா? ;-)

(இந்த வலைப்பதிவிற்கான தலைப்பு ஒன்றினை அட்மினுக்கு அனுப்பி வைத்தால், அதை அவர் உங்கள் வலைப்பதிவு முகப்பில் சேர்த்துவிடுவார். :-))

பாபு என்ற பெயரில் வந்திருக்கும் பதிவை படிச்சுட்டு என்னால சிரிக்காம இருக்கவே முடியல... அதிசய மனிதன்னு சொல்லி சொல்லி திகில் கேரக்டர் ஆக்காதீங்கப்பா... பாவம் அந்த மனுஷன் ரொம்ப அப்பாவி தங்கமணி ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு கல்ப்ஸ் வித்தியாசமான கலக்கல் கட்டுரை. சூப்பர் ஆரம்பம் கல்ப்ஸ்...:) வழக்கம் போல உங்கள் நையாண்டி, நகைச்சுவை எல்லாமே கொஞ்சம் கூட குறையாம கட்டுரையை எழுதியிருக்கீங்க... அந்த மாபெரும் அதிசிய ( சைஸ்ல சொல்லலீங்க) மனிதருக்கு எனது ஸ்பெஷல் சல்யூட்.. வாழ்த்துக்கள் கல்ப்ஸ்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

பாபு அண்ணா,

//விருந்தினர்களை எப்படி எல்லாம் உபசரிக்க வேண்டும், கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதை ஒரு அதிசய மனித கதாபாத்திரத்தின் மூலம், என் போன்றவர்களுக்கு பாடமாக எடுத்து இருக்கின்றீர்கள். நானும் என் வாழ்க்கையில் அது போல் நடந்துகொள்ள இனியாவது முயற்சிக்கின்றேன். // கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......(இமாமா கொஞ்ச நேரம் உங்க கர்ர்ர்ர்-ரை கடன் வாங்கிக்கறேன்) அண்ணா, நான் பாடமா எடுக்கல.. அதிசய மனிதரின் விருந்தோம்பல் தான் எங்களுக்கு பாடமாக இருந்தது. நீங்களும் பிராப்த்தம் இருந்தால் வாழ்க்கையில் ஒருமுறையாவது அவரை மீட் பண்ணிடுங்க. விருந்தோம்பல் பத்தி இன்னும் நிறைய அவர்கிட்டருந்து நேரடியா நீங்க கத்துக்கலாம். நான் பார்த்த மனிதர்களே ஒரு தினுசு. நாய்குட்டிங்க எப்பவும் நம்ம கையை பார்த்துட்டு இருக்க மாதிரி, நம்ம கைல என்ன இருக்கு.. நம்மால என்ன ஆதாயம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து உபசரிக்கும் மனிதர்கள் மத்தியில் இந்த மனிதரின் உபசரிப்பு உண்மையில் எனக்கு வித்தியாசமாக பட்டது. அதனாலேயே இந்த சமர்ப்பணத்தை இங்கே அர்ப்பணித்தேன். எனக்கெல்லாம் ஒரு குட்டி உதவி செய்தாலே வாழ்நாளெல்லாம் மறக்க முடியாம இருப்பேன்.. அத்தனை பூஞ்சைமனசு நமக்கு ;) நான் மேலே சொன்ன விஷயங்கள் என் வரையில் பெரிய விஷயம்.

// அது என்ன முதல் படம்? வெளியே ச்சோ என்று பெய்யும் மழையை, லாட்ஜ் ஜன்னல் வழியே ஒரு பெண் பார்ப்பது போல்? அதற்கு எதாவது சிறப்பு அர்த்தம் இருக்கின்றதா? கொட்டும் மழையில் அங்குமிங்கும் உங்களை யாரேனும் அலைக்கழிக்க விட்டார்களா? ;-)//

பாபு அண்ணே, ஜன்னல் லாட்ஜ்ல மட்டும் தான் இருக்குமா? வீடுங்கள்ல இருக்காதா? (ஹவ்வ்வ்வ்வ்..) தவிர ஜன்னலுக்கு வெளியே தெரியறது மழை இல்லீங்கண்ணா.. கண்ணாடியோட டிசைனோ/பளபளப்போ ஏதோ ஒண்ணு. இது என் கணிப்பு. கொட்டும் மழைல இடம் தெரியாம யாராவது அலைகழிஞ்சதை முன்னாடி கேள்விபட்டீங்களா?

படத்தோட விளக்கம் இதாங்கண்ணா.. மனிதர்கள்ல பலவிதம் இருக்க, இப்படியும் ஒருத்தரான்னு ஜன்னல் வழியே இயற்கையை ரசிச்சுட்டே யோசிச்சுட்டு இருக்காங்க அந்த பொண்ணு. எங்கே நிக்கறோம் பாருங்க நாங்க ;) சிறுவயது முதலே தனிமை எனக்கு பிடித்த ஒன்று. அதனாலோ என்னவோ இந்த படம் என்னை மிகவும் கவர்ந்து விட்டு அதையே போட்டேன். தோழிகள் பலரும் பிரச்சனைக்குரிய நேரங்களில் தக்க அறிவுரையை தருவார்கள். ஆனால் அவைகளை நாம் அலசிபிழிந்து எடுத்து ஒரு முடிவுக்கு வருவது பெரும்பாலும் இதுபோன்ற தனிமையில் தான். அந்த வகையிலும் இந்த படம் பிடித்து போய் போட்டேன்.. போதுமாங்கண்ணா வெளக்கம் :)

அண்ணா, உங்களின் மதிப்பில்லா கருத்து பகிர்தலுக்கு மட்டற்ற மகிழ்ச்சிகள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அன்பு கல்பனா

வாழ்த்துகள். நல்லா அனுபவிச்சு , ரசிச்சிருக்கீங்க. நல்ல நடிப்புடா சாமி. என்னமா நடிக்கிறாங்க எல்லோரும். அறுசுவைல நல்ல நடிகர்களும் இருக்காங்கப்பா. ஆனாலும் வாழ்த்துகளுடன் என் சார்பிலும் ஒரு பாராட்டும் ஒரு பூங்கொத்தும் அந்த நல்ல்ல்ல மனிதருக்கு க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்(எங்களை விட்டுட்டு நல்லா எஞ்ஞாய் பண்ணியிருக்கீங்க. ம்ம்ம்ம்ம்ம்ம் )

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

அக்கா மிகவும் அழகான ஆழமான தொடக்கம்... நீங்க சொன்ன அத்தனையும் ஆணித்தரமான உண்மை...

// சும்மா சொல்ல கூடாதுங்க. நம்ம கூட பொறந்தவனோ/வளோ கூட இந்தளவு அன்போடு ஒரு கரண்டி சாப்பாட்டை அன்பா அருகிருந்து போட்டிருப்பாங்களான்னு சந்தேகம் தான்// சந்தேகமே இல்லை என் வாழ்க்கைலை 100% உண்மை...

// போனதில் இருந்து சாப்ட்டு, சாப்ட்டு சாப்பாட்டை பார்த்தாலே ஒரு பயம்// இன்னும் அந்த பயம் போகவே இல்லை ......

சில பேர வாழ்நாள் முழுக்க மறக்கவே முடியாதுனு சொல்லுவோம் ல அந்த மாதிறி மனிதர் இவர்... எதிப்பார்ப்பே இல்லமா எதையும் செய்யனும் நு நினைக்கிற மனேபாவம் கொண்ட மனிதர்கள் சிலர் தான் இருப்பார்கள்... இங்கே ஒரு குடும்பமே இருக்கு.. ரொம்பவே ஆச்சரியாமான உண்மை ...

இன்னும் அந்த நாட்கள் நினைவில் இருந்து போகவே இல்லை இனியும் போகாது......

அந்த மனிதர் செய்த எல்லாவற்றிற்க்கும் நன்றின்ற ஒரு வாத்தையை விட வேர என்ன சொல்ல நு தெரில ... _()_

அங்கு வந்த எல்லருக்கும் கூட நன்றி என்னிடம் அன்போடும் அக்கறையோடும் நடந்து கொண்டதற்க்கு... :-)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கல்ப்ஸ் அக்காங் &
ரேவ்ஸ் அக்காங்,
எனக்கும் இத்தனை அக்காக்கள் கிடைச்சிருக்கீங்க, உங்கள் இருவரின் அன்புக்கும் பாராட்டிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள் அக்காங்ஸ் :-)

நட்புடன்
குணா

அன்பு கல்பனா,

இதுக்குத்தான், இதுக்குத்தான் - கல்பனா வேணும்கறது.

அங்க வந்திருந்த எல்லார் சார்பிலும், அழகாக ஒரு சமர்ப்பணம் செய்திருக்கீங்க. எல்லார் சார்பிலும் உங்களுக்கு நன்றி.

இப்படியெல்லாம் மனம் விட்டு, பேசணும்னு எல்லோருக்குமே நினைப்புதான். ஆனால், ஆச்சரியத்திலும், திணறத் திணற அவங்க செய்த உபசரிப்பிலும், எல்லோரும் வாயடைச்சுப் போயிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.

//அவர் மட்டுமல்லாது அவரை சார்ந்த உறவுகளும், நண்பர்களும் அவரை போலவே இருந்தார்கள் என்பது தான் இதில் ஆச்சர்யமே.//

நீங்க சொல்லியிருப்பதிலேயே ஹைலைட்டான விஷயம் இதுதான். இதை அப்படியே அங்கு வந்திருந்த அனைவரும் வழி மொழிவாங்க என்பதில் சந்தேகமே இல்லை.

நன்றி கல்பனா,

அன்புடன்

சீதாலஷ்மி

நல்ல கட்டுரை மேடம் :-)

அந்த ஜன்னல் படம் அழகா இருக்கு :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)