அறிந்தும் அறியாமலும்... ..பகுதி 1.

சேலம் சிவப்பு, செவ்வாய்ப்பேட்டை கறுப்பு, உடைத்தால் பருப்பு தின்றால் கசப்பு
அது என்ன? இதற்கான விடை தெரியவேண்டுமா? கட்டாயம் நீங்க இந்த கட்டுரைய முழுவதுமாக படித்தால், படித்தமைக்கு பரிசாக இதன் விடையை சொல்வேன். சரி....... சரி யாரும் முறைக்காதீங்க ப்ளீஸ்..

எனக்கு விவரம் தெரிந்த வயது முதலே எனக்கும் குன்றிமணிக்குமான பந்தம் உண்டாயிற்றுனு சொல்லலாம். எங்கள் தோட்டத்து வேலிகளில் அழகாக பூத்து, காய்த்து , வெடித்து ஆனால் அவ்வளவு சீக்கிரம் சிதறாமல் அதிலேயே ஒட்டிக்கொண்டு அழகாக இருக்கும்.

அந்த வெடித்த காயை அப்படியே பறித்து வந்து ஒவ்வொன்றாக எடுத்து, தேங்காய் தொட்டியில் (சிரட்டை, ஓடு) சேகரித்து வைத்துக்கொள்வேன். இப்படியே நிறைய கும்மிணிகளை(குன்றுமணி, குண்டுமணி) சேர்த்துவைப்பதில் அப்படி ஒரு ஆர்வம்.

அவற்றை பிரிப்பதும், கொட்டுவதும் அள்ளுவதுமாக ரொம்ப பிஸியா விளையாடுவேன். கடை வைத்து விளையாடும் பொழுது முக்கிய பண்டமாக கும்மிணி இடம்பெற்றிருக்கும். காசு சேர்ப்பதை விட இதனை சேர்ப்பதில் அலாதி ஆனந்தம்.

கொஞ்சம் வளர்ந்து விவரம் தெரிந்த பிறகு என் தந்தை ஒரு நாள் ஷராப்பு கடைக்கு (நகைக்கடை) அழைத்துசென்றார்.
அங்கு நகை எடைபோடும் பொழுது அந்த குட்டியூண்டு தராசுல, கும்மிணி அழகா உட்கார்ந்து செக்கசெவேல்னு சிரிச்சிண்டிருந்ததை பார்த்து எனக்கு ஒரே ஆச்சர்யமா போயிடுச்சு.
அட இவ்வளவு மதிப்பு வாய்ந்த ஆளா நீ னு விழிகள் வியப்பில் விரிய பார்த்திட்டிருந்தேன்!!
கும்மிணியோட அழகை வர்ணிக்க வார்த்தைகளே போதாதுனுதான் சொல்லணும். அதுக்கு அழகா பெயிண்ட் அடிச்சு, அதுவும் இரண்டும் சரிபாதியாக இல்லாம
கொஞ்சமே கொஞ்சம் கறுப்பும், மீதி பூராவும் சிவப்பாக அவை ஒன்றுடன் ஒன்று கலக்காமல், ஒரு கைதேர்ந்த நிபுணத்துவம் வாய்ந்த வர்ணம் அடிப்பவர் அடித்தது போன்று இருக்கும்.
இவ்வளவு அழகான தாவரம் நிறையப் பேர் அறிந்து இருந்தாலும், தெரியாத ஓரிருவர் இருக்கலாம். தெரிந்தவர்களும் தாங்கள் நினைவுகளை பின்னோக்கி செலுத்தலாம்,
இதனோட இலைகள் மருத்துவ குணம் வாய்ந்தவவை. ஆனால் அழகா இருக்கிற இந்த விதைகள் சாப்பிட உகந்ததல்ல. இதில் கறுப்பு, வெள்ளைனு நிறங்கள் இருக்குனு படிச்சிருக்கேன் ஆனா பார்த்ததில்லை.

இதனோட ஒவ்வொரு கலருக்கும் ஒவ்வொரு வியாதியை குணப்படுத்தும் தன்மை உண்டுனும் சொல்வாங்க. ஆயுர்வேத மருத்துவத்தில் மிகபெரும் இடம் பெற்றுள்ளது என்றும் கூறலாம்.
ஆனா இதை நாமே சரியான மருத்துவ ஆலோசனை இன்றி மருந்தாக எடுத்துக்கொள்ளுதல் மிகப்பெரும் அபாயத்தை உண்டு பண்ணிவிடும்.

நான் இதுவரை இதனை மருந்துப்பொருளாக எடுத்துக்கொண்டதில்லை. எனக்கு தெரிந்தது இவ்வளவுதான், இதனைப் பற்றிய விஷயங்கள் தெரிந்தவர்கள் கூறலாம்.

இல்லை இதில் ஏதேனும் மருத்துவ தகவல்கள் தவறாகவோ, விடுபட்டோ இருந்தால் தன்மையுடன் எடுத்துச்சொல்லுங்கள் ஏற்றுக்கொள்கிறேன்.
இந்த தாவரத்துக்கு நேராநேரத்துக்கு தண்ணீர் ஊற்றுவது உரம் போடுவதுனு ஏதுவுமே இல்லாம கவனிப்பாறின்றி வளரும் ஒரு காட்டுச்செடினும் சொல்லலாம்.
மேற்கூறிய விடுகதைக்கான பதிலை நிச்சயம் அறிந்திருப்பீர்கள், இருந்தும் சொல்லாமல் விடுவது சரியாகுமோ!!
குன்றிமணி என்பதே அதற்கான விடை.

அம்மான் பச்சரிசி
பொன்னி அரிசியோ, பாசுமதி அரிசியோதான் கேள்விப்பட்டிருப்போம், நானும்கூட இந்த இலையின் பெயரை பால்பூடு என்று சொல்லித்தான் கேள்விப்பட்டிருக்கேன். சமீபத்தில் கோவையில் நடந்த ஒரு மூலிகை மருத்துவ மாநாட்டில் கலந்து கொண்ட போதுதான் இதன் பெயர் அம்மான்பச்சரிசி என அறிந்து கொண்டேன்!!

இதுவும் கவனிப்பாறின்றி வளரும் ஒரு தாவரமே ஆகும். இதிலிருந்து வரும் பால் போன்ற ஒரு திரவத்தை உடம்பில் உள்ள மருக்களின் மீது வைத்தால் அவை மறைந்துவிடும். நாள்பட்ட மருகாக இருந்தாலும் தொடர்ந்து வைத்துக்கொண்டே இருந்தால் நாளடைவில் மறைந்துவிடும்.
தோழிகளே மேற்கண்ட தாவரங்களைப்பற்றிய மேலதிக தகவல்கள் யாருக்கேனும் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளூங்களேன். இது ஒரு தயைகூர்ந்த வேண்டுகோளாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

5
Average: 5 (5 votes)

Comments

எங்கள் ஊரில் இந்த விடுகதையை

"கன்னியாகுமரில கறுப்பு சுசீந்திரத்தில சிவப்பு
உடைத்தால் பருப்பு தின்றால் கசப்பு
அது என்ன?" என்று கேட்பார்கள்.

இதை (நச்சு விதை) சாப்பிட்டால் பேதியாகும். இதை பயன்படுத்தி நாங்கள் பல்லாங்குழி விளையாடுவோம். இதைப்போல் மஞ்சாடிக்காய்களைப் பயன்படுத்தியும் விளையாடுவோம். இன்றும் என்னிடம் இரண்டுமே இருக்கின்றன. அடிக்கடி எடுத்துப் பார்த்துக்கொள்வேன். மேலும் இதை பிள்ளையார் (களிமண்) சிலை செய்யும்போது கண்கள் வைக்க பயன்படுத்துவார்கள்.

எங்கள் பள்ளியின் மைதானத்தின் ஓரங்களில் அம்மான் பச்சரிசி செடி நிறைய உண்டு. இதில் விளைந்த காயை (அரிசியை ?) பிள்ளைகள் எடுத்து கசக்கி, ஊதி சாப்பிடுவார்கள்.

அன்புடன்
ஜெயா

அருட்செல்வி புதிய செய்திதான் செல்வி எனக்கு . நான் மொத்தமே சேர்ந்தச்ப்புல ரெண்டூ தான்க்ஸ் பார்த்திருக்கேன்.அதுவும் களீமண் பிள்ளையாருக்கு ரெண்டு கைல தருவாங்க.அம்புடுதான். நல்ல தகவல் செல்வி

Be simple be sample

அருள் அருமையான பகிர்வு வாழ்த்துக்கள் பா :)

குண்டுமணி நாங்க இப்படித்தான் சொல்வோம் பார்க்கவே அழகா அம்சமா இருக்குல்ல இதை சின்னவயசுல வச்சி விளையாடுவோம் இப்ப சமீபத்துல கூட அண்ணா தோப்பில் இருந்து கொண்டுவந்தார்.
குண்டுமணி விசத்தன்மை வாய்ந்ததுன்னு மட்டும் தான் சின்னவயசுல கேள்விபட்டுருக்கேன் அதன் செடி இத்தனை மருத்துவ குணம் அடங்கியதுன்னு நீங்க சொல்லிதான் தெரியுது.

அம்மான்பச்சரிசி இது நிறைய கேள்வி பட்டுருக்கேன் இச்செடி முழுக்க மருத்துவகுணம் அடங்கியது,இதன் பாலை மரு,கால் ஆணியில் தொடர்ந்து தடவினால் விரைவில் குணமாகும்னு சொல்லுவாங்க.
இந்த கீரையை நன்கு சுத்தபடுத்தி நெய்விட்டு வதக்கி சாப்பிட்டால் வாய்ப்புண்,வயிற்றுப்புண் நீங்கும்னு சொல்லுவாங்க.இன்னும் பல மருத்துவ குணங்கள் உண்டு இச்செடிக்கு

பயனுள்ள தகவல்களை பகிர்ந்துகொண்டதற்க்கு மிக்க நன்றி அருள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கேள்விப்படாத தகவல், அசத்தலான தலைப்புடன் ரொம்ப அருமையா இருக்குங்க, விடுகதையும் ரொம்ப அருமை.
வாழ்த்துக்கள்ங்க :-)

நட்புடன்
குணா

பழமொழிகூட ஊருக்கு ஊரு வேற்படும் போல இருக்கு :) நீங்களும் குன்றிமணி சேகரிச்சு வெச்சிருக்கீங்கனு சொன்னதும் சந்தோஷமா இருக்கு :) அம்மான் பச்சரிசி நல்லதொரு மூலிகை அதுவுமில்லாம எளிதா கிடைக்கவும் செய்யுது:)
நல்ல கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி தோழி :) முதல் பதிவிட்டு இருக்கீங்க, நான் முதல்முறையா உங்களோட பேசுறேன், மிக்க நன்றிங்க ஜெயா :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ரேவ்ஸ் நான் பிள்ளையாருக்கு வெச்சு பார்த்தில்லப்பா ...ஆனா மருத்துவ குணம் நிறைந்ததுனு சமீபத்தில் தெரிஞ்சுக்கிட்டேன் :) ரொம்ப நன்றி ரேவ்ஸ் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

குன்றிமணி வெச்சு விளையாடிய சிறுவயது ஞாபகம் வந்திருச்சா சுவா :)
அம்மான்பச்சரிசி பெரிய வேலையெல்லாம் செய்யுது போல சுவா :) நல்ல தகவல்கள் கொடுத்திருக்கீங்க :) நிச்சயம் பலபேர்க்கு உதவும்னு நினைக்கிறேன்.
ரொம்ப அழகா கருத்து தெரிவிச்சமைக்கு மிக்க நன்றி சுவா :)
ஒவ்வொரு பதிவும் உற்சாகமளிக்குதுப்பா :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

குணாதம்பி தொடர்ந்து படித்து உங்க கருத்தினை தெரிவிக்கிறதுக்கு மிக்க நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ரொம்ப பயனுள்ள தகவல்கள். வாழ்த்துக்கள்.அம்மான் பச்சரிசி /இதிலிருந்து வரும் பால் போன்ற ஒரு திரவத்தை உடம்பில் உள்ள மருக்களின் மீது வைத்தால் அவை மறைந்துவிடும். நாள்பட்ட மருகாக இருந்தாலும் தொடர்ந்து வைத்துக்கொண்டே இருந்தால் நாளடைவில் மறைந்துவிடும்./ இது நான் அனுபவித்த உண்மை. வாழ்த்துகள். வளரட்டும் உங்கள் பணி

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு, நான் இத சிறு வயதில் பிள்ளையார் கண்ணுனு சொல்லுவேன்.

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

உங்களோட கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி தோழி :)
உங்களோட வாழ்த்தும் பதிவும் உற்சாகம் அளிக்கிறது.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஆமாம் இதை பிடிக்காதவங்க மிகக்குறைவுனுதான் சொல்லணும் :)
மிக்க நன்றி தோழி தங்கள் கருத்தினை பகிர்ந்து கொண்டமைக்கு.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

Hi arul this kundumani seeds are used as gum called pasakaram in gold jewellery making

அன்பு அருட்செல்வி,

அம்மான் பச்சரிசி - தகவல், படம் இரண்டுமே புதிதாகத் தெரிஞ்சுகிட்டேன். நன்றி.

குண்டுமணி - களிமண் பிள்ளையாரில் கண்களாக வச்சிருப்பாங்க. பல்லாங்குழி விளையாட சேர்த்து வச்சிருந்ததுண்டு - சிறு வயதில்.

நகைக் கடைகளில் இதை எடை போட உபயோகிப்பாங்க என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.

இதைப் பற்றி ஒரு சின்ன உருவகக் கதை படிச்சிருக்கேன் பல ஆண்டுகளுக்கு முன்னால் - அதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

அந்தக் கதை -

வெகு காலத்துக்கு முன்னால ஒரு மலையடிவாரத்துல பல நூறு மனிதர்கள் சேர்ந்து, அங்க இருந்த கற்களை வெட்டி எடுத்து, வண்டிகளில் ஏத்திக்கிட்டு இருந்தாங்க. அந்த மலையடிவாரத்துல ஒரு சின்ன செடி/கொடி - அது துவண்டு போய் இருந்தது. அந்த மனிதர்கள் சாப்பிட்டு விட்டு, கை கழுவும் தண்ணீரை அதற்கு ஊற்றுவாங்க. அந்த செடியும் வாடாமல் ஜீவித்திருந்தது.

அந்தக் கற்களுக்கு ரொம்ப தற்பெருமை - செடியிடம் அவை சொன்னது - ‘பார், நாங்க எவ்வளவு முக்கியமானவங்க என்று. எங்களை பத்திரமாக வண்டியில் ஏற்றி, வேறு ஒரு இடத்தில் பாதுகாக்க, கொண்டு போகப் போறாங்க. உனக்கு போனால் போகுதுன்னு அவங்க கை கழுவும் தண்ணீரை ஊத்துறாங்க’ என்று.

கொடி துவண்டு போய் பதில் சொல்லாமல் இருந்தது. கற்கள் வெட்டி எடுத்து, முடித்து, வண்டியை கிளப்பும்போது, ஒரு மனிதர் இந்தத் தாவரத்தின் மேல் பரிதாபப்பட்டு, இதையும் வண்டியில் போட்டுக் கொண்டார்.

போய்ச் சேர்ந்த இடத்தில் இதை நட்டு, நன்றாகத் தண்ணீர் ஊற்றிப் பராமரிச்சாங்க. கொஞ்ச நாளில் அழகழகாக, சிவப்பு நிறத்தில் மணிகள் தோன்றியது.

ஒரே மாதிரி அளவு, ஒரே மாதிரி எடை.

அங்கு இருந்த நகைக் கடைகளில் தங்கத்தை எடை போட இந்த மணிகளை பயன் படுத்த ஆரம்பிச்சாங்க.

வண்டிகளில் ஏற்றி வந்த, தற்பெருமை பேசிய கற்களை என்ன செய்தாங்க தெரியுமா?

அவை சுண்ணாம்பு கற்கள் - அவற்றை, காளவாயில் இட்டு, கொதிக்க வச்சு, நீர்க்க வச்சு, உபயோகப் படுத்தினாங்க. கற்கள் சூடு தாங்காமல் துடித்து, கர்வம் அடங்கின.’

கதை நல்லா இருக்கா அருட்செல்வி? இது சிறுவர்களுக்கான கதை. சின்ன வயசுல படிச்சது.

என்னவாக ஆகப் போகிறோம் என்று தெரியாமல் கர்வப்படக் கூடாது என்ற நீதியை சொன்ன அழகான கதை. எனக்குப் பிடிச்ச பல கதைகளில் ஒன்று இது.

அன்புடன்

சீதாலஷ்மி

பதிவிட்டமைக்கு மிக்க நன்றி ப்ரியா :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அருமை :) என்பதிவில் தங்களின் சிறுகதை எனக்கு நம்பவேமுடியவில்லை.
பலமுறை படித்து பார்த்து மகிழ்ந்தேன். அதிலிருக்கும் கருத்து கட்டாயம் அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய ஒன்று.

நான் எனக்கு வரும் அனைத்து பதிவுகளையுமே, மயிலிறகை ஒழித்து வைத்து அவ்வப்பொழுது குட்டி போட்டுள்ளதா என்று எடுத்து பார்க்கும் சிறு பள்ளிபிள்ளையை போல் எடுத்து படித்து மகிழ்வேன். அதிலிருக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் எனக்கு அவ்வளவு பிடிக்கும்.

பாராட்டு என்பது எவ்வளவு மதிப்பு மிக்கது என்பதை நானறிவேன்.
ஆனால் அதையே மண்டைக்குள் ஏற்றாமல் இதயத்தில் வைத்து வணங்கவேண்டும் என்பதை உணரவைத்தது இக்கதை. மிக மிக அருமைங்க :)

//கதை நல்லா இருக்கா அருட்செல்வி? இது சிறுவர்களுக்கான கதை. சின்ன வயசுல படிச்சது. //ம்ம் ரொம்ப ரொம்ப புடிச்சிதுங்கோ,
அப்ப கொஞ்சநாள் முன்னாடிதான் படிச்சேனு சொல்லுங்கோ.

அம்மான் பச்சரிசி நிறைய வீட்டைச்சுத்தி முளைச்சு இருக்கு, ஆனா அதனோட அருமை சமீபகாலமாகத்தான் தெரிந்து கொண்டேன்.
பகிர்விற்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி சீதாமேடம் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கடைசியாக நீங்கள் சொல்லி இருக்கும் மூலிகை - ஒரு முறை கை நகத்தைச் சுற்றி உலர்ந்து வெடிப்புகள் போல வந்திருந்தது. அந்தப் பாலை அடிக்கடி ஒற்றி வந்தால் சுகமாகும் என்று ஒரு ஆசிரியத் தோழி சொன்னார். விளையாட்டாக முயற்சித்தேன். நல்ல பலன் கிடைத்தது.

எனக்கு குன்றிமணி காய்கள் காய்ந்து விரிந்து இருக்கும் போது அப்படியே சேகரித்து உலர்பூ அலங்காரமாக வைக்கப் பிடிக்கும்.
இந்தத் தடவை இந்தியாவில் எங்கோ மஞ்சாடி மரத்தில் காய்த்திருந்தது பார்த்தேன். கொத்துக் கொத்தாக அழகாக இருந்தது.

சீதாம்மா கதை சூப்பர். பகிர்வுக்கு நன்றி.

‍- இமா க்றிஸ்

தங்களின் மேலான கருத்துக்களை பார்க்கும்பொழுது அளவிலா மகிழ்ச்சி:)

அம்மான் பச்சரிசி மிக எளிதான வைத்தியமுறை என்பதில் சந்தேகமில்லை.
குன்றிமணி பழமொழி சொல்லாம விட்டுட்டீங்களே? :)
மஞ்சாடி மரம்னா என்னங்க இமா, நான் இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன்.

சீதாம்மா கதைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் நன்றி சொல்லலாம் :)

தங்களின் கருத்தினை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிங்க இமா :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அருள்,
லீவில் ஊருக்கு போகும் போதெல்லாம் பல்லாங்குழி விளையாட குன்றிமணியை தேடி எடுத்திருக்கோம்... கண்ணில் பார்த்தே எத்தனை வருஷம் ஆச்சு...

நல்ல பதிவு மேடம் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

உங்களுக்கும் குன்றிமணி வெச்சு விளையாடிய ஞாபகம் வந்திடுச்சா பிந்து :)
இந்த முறை ஊருக்கு வரும்போது பார்த்திடுங்க.. கூடவே ஷினிக்குட்டிமாக்கும் அறிமுகம் செய்துடுங்க பிந்து :)
மிக்க நன்றி..:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

இந்த இலையை அரைத்து எலுமிச்சை சாறு கலந்து நாள்பட்ட காயங்கள் மேல் பற்று போட்டு வர அவை மாறும்