ஒரே ஒரு ஊரிலே... (1)

ஆங்... கதை தான், கதையே தான். ஆனால் நிஜக்கதை. எல்லோருக்குமே சிறு வயது நினைவுகள் மகிழ்ச்சி தரக் கூடியவை. எனக்கும் அப்படித்தான். டவுனில் இருந்து கிராமத்துக்கு வருடத்தில் ஒரு முறை மட்டுமே சென்று வரும் வழக்கம் எங்களுக்கு. என்ன தான் இங்கே நானும் என் தங்கையுமாக விளையாடினாலும், கிராமத்தில் மாமா வீட்டு வாண்டுகளோடு விளையாடிய விளையாட்டுகள் என்றும் மனதில் சில்லென இதம் தருபவை.

எங்களுக்கு விடுமுறை விட்டு நாங்கள் செல்லும் நேரம் அவர்களுக்கு பள்ளி விடுமுறை ஆரம்பமாகாமல் இருந்தால், அவர்களோடு கிராமத்து பள்ளியில் சென்று தரையில் அமர்வதில் துவங்கி, பட்டம் விடுவது வரை... எல்லாமே மனதில் இன்றும் ஆழமாக பதிந்து போயின. அவற்றில் சில இப்போது நினைத்தாலும் “மீண்டும் திரும்புமா அந்த கனா காலம்??” என்று ஏங்க வைக்கும்.

எங்கள் கிராமம் மிக சிறியது ஆனால் மிக மிக அழகானது. ஊரின் ஒரு எல்லையில் பெரிய மரங்களின் நடுவே சுத்தமான குடிநீர் குளம். இன்னோர் எல்லையில் கம்பீரமான கோபுரத்தோடு சிவாலயம். சுற்றி வயல். சாலை ஓரம் புளிய மரங்கள். அப்போதெல்லாம் ஊருக்கு பேருந்து போக்குவரத்து மிக குறைவு. ஒரு நாளைக்கு 3 பேருந்து தான் அதிகபட்சம் ஊருக்குள் வந்து போகும். பேருந்தில் ஏறி, ஊர் காற்றை சுவாசிக்க துவங்கியதுமே எங்களுக்கு மகிழ்ச்சி பொங்கி விடும். பஸ்ஸில் பாட்டும் ஆட்டமுமாக தான் சிறு வயதில் நானும் தங்கையும் போவது வழக்கம். அம்மா அப்பாவை ஊருக்குள் தெரியாதவர்கள் மிக குறைவு. வாத்தியார் வீட்டு பிள்ளைகளாக மிக பிரபலம். அந்த காலத்தில் கிராமங்களில் படித்தவர்கள் என்றாலே மதிப்பு, அதிலும் வாத்தியார்கள் என்றால் கேட்கவே வேண்டாம். பேருந்து ஓட்டுனர்களும் கூட, வீட்டு வாசலிலேயே கொண்டு போய் விடுவார்கள். மண்ணில் காலை வைத்ததும் அம்மாவின் தாயார் திருஷ்டி கழித்து கன்னத்தில் முத்தமிடும் போது துவங்கும் ஆனந்தம்!!! சொல்ல வார்த்தை இல்லை. அப்போது மாமாக்கள் கூட்டு குடும்பம். வீட்டில் மொத்தம் சிறியவர்கள் 6 பேர். எங்களோடு சேர்ந்தால் 8. இந்த 8 வானரங்களும் சேர்ந்து ஊரை ஒரு வழி பண்ணிய கதை தான் இது.

கொண்டாட்டம் முதலில் துவங்குவதே உடைகள் மாறுவதில் தான். எங்கள் வயதை ஒத்த மாமா பெண்கள் எங்கள் மிடி, ஃப்ராக்குக்கும் நாங்கள் அவர்களின் பாவாடை சட்டையிலும் மாறுவதே முதல் வேலை. வயதில் சற்று பெரியவள் தலை எல்லாம் சீவி சிங்காரிப்பாள். அப்போதெல்லாம் பண்டிகை காலத்தில் தான் மல்லி முல்லை போன்றவை தெருவில் விற்பனைக்கு வரும். அதனால் தெரிந்தவர்கள் வீடுகளில் உள்ள டிசம்பர் பூக்கள், கனகாம்பர பூக்கள் எல்லாம் “அத்த பொண்ணுங்க வந்திருக்காங்க” என்ற அறிமுகத்தில் பறித்து வரப்படும். பூக்களை எல்லாம் தொடுத்து தலை நிறைய அந்த பூக்களை வைத்துக்கொண்டு அப்பாவிடம் போய் நின்றால், எப்போதும் ஒரே டயலாக் தான்... “என்னடா வேஷம் இது?”. அவருக்கு என்றுமே இந்த கலர் பூக்கள், இது போல் பாவாடை சட்டை எல்லாம் பிடிக்கவே பிடிக்காது. ஆனாலும் அவர் பேச்சை அங்கே யார் கேட்பது?? ;) போட்டுக் கொண்டு அவர் முன் நின்று கடுப்பேத்தி பார்ப்பதும் ஒரு மகிழ்ச்சி தான்.

அடுத்தது படை சேர்ந்து களத்துமேட்டுக்கு போவது. வீட்டு ட்ராக்டர் எப்போது கிளம்புகிறதோ ஓடிப்போய் ஏறிவிடுவோம். மாமா பிள்ளைகளும் எங்களை காரணம் சொல்லி எப்படியும் அனுமதி வாங்கி விடுவார்கள். ட்ராக்டரில் பயணிப்பதே ஒரே குஷி தான்.

அங்கே சென்று பனை நுங்கு வெட்டி வர செய்வோம். கிராமத்தில் உள்ளவர்கள் மரம் ஏறி நுங்கு வெட்டி வருவார்களே தவிர, நகரம் போல அதை முழுதாக வெட்டி எடுக்க அவர்களுக்கு தெரியாது. பதநீரும் எங்கள் கிராமத்தில் பழக்கம் இல்லை. நுங்கை மேலே சீவி விட்டு கண் போல திறந்து கொடுப்பார்கள். அதை லாவகமாக விரல் விட்டு உறிஞ்சி குடித்து, நுங்கையும் சாப்பிட வேண்டும். நம்ம டவுனு பிள்ளைகளுக்கு இதெல்லாம் சரி வருமா சொல்லுங்க?? நமக்கு முழுதாக எடுத்த நுங்கை வீட்டில் அம்மா மேல் தோலையும் நீக்கி சாப்பிட கொடுத்து தானே பழக்கம். விரலை விட்டதும் நேரா முகத்தில் அடிக்கும் உள்ளே இருக்கும் நீர். பேக்கு மாதிரி நம்மை பார்த்து சுற்றி எல்லோரும் சிரிப்பதும், சொல்லிக்கொடுப்பதும், மீண்டும் மீண்டும் முயற்சி செய்வதும்... ஒரு வழியா நுங்கு உள்ளே போகுதோ இல்லையோ, அதன் நீர் ஆடை முழுவதும் இருக்கும். கிராமத்திலேயே பிறந்து வளர்ந்த மாமா பிள்ளைகள் சிந்தாமல் சிதராமல் முழுவதும் சாப்பிடுவதை கண்டால் ஆத்திரமாய் வரும். பாவிங்களா!! இப்படி முழுங்கறீங்களே, இங்க ஒன்னும் முழுசா வாயில் போகலயேன்னு இருக்கும். விரல் வலிக்க துவங்கியதும் போதும் என்று கிளம்பி விடுவோம். வயல்களில் சில இடங்களில் களிமண் இருக்கும். அவற்றை சிறிது சேகரித்துக்கொண்டு, சாப்பிட்டு முடித்த நுங்கு மட்டையையும் சேகரித்துக்கொண்டு மீண்டும் வீடு வந்து சேருவோம்.

இனி பகல் முழுக்க சேகரித்த களிமண்ணும், நுங்கு மட்டையும் பல வடிவங்களில் மாறும்... அதை எல்லாம் அடுத்த பாகத்தில் தொடருவோம். என்னோடு என் கிராமத்தை சுற்றிப்பார்க்க கிளம்பிட்டீங்களா? :)

5
Average: 5 (5 votes)

Comments

ஆஹா ஆரம்பமே அசத்தல். நானும். லீவுக்க. ஊருக்கு போன து நியாபகம் வருது. எனக்கு இன்னைக்கு வரைக்கும் நுங்க. சாப்பிட வராது.. நாங்களூம் வனி. ஊருக்கு ரெடி ஆகிட்ட்டோம். டாய் கட்றா வண்டீய...

Be simple be sample

சிறு வயது கொண்டாட்ட்ங்கள் ரொம்ப அருமைங்க, //என்னோடு என் கிராமத்தை சுற்றிப்பார்க்க கிளம்பிட்டீங்களா?// :) ஆமாங்க அக்காங்க
மேலும் எழுதுங்க :)

நட்புடன்
குணா

வனி உங்க கிராமத்துக்கு எங்களையும் கூடவே கூட்டிட்டு போய்ட்டீங்க சூப்பர் நாங்க ரெடி சுற்றிப்பார்க்க ;)

உங்களோட அனுபவத்தை படித்ததும் எனக்கும் என் சின்ன வயசு ஞாபகம் மனசு முழுக்க ஆக்ரமிச்சுடுச்சி நாங்களும் சின்னவயசுல பள்ளி விடுமுறைக்கு பாட்டி வீட்டுக்கு போனதும் மாந்தோப்புல விளையாடினது ஆற்றில் குளிச்சதெல்லாம் நினைவுக்கு வருது மீண்டும் வராதான்னு ஏங்க வைக்குது.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வனி,

ஒரே ஒரு ஊரிலேன்னு.. தொடங்குதே எங்களை எல்லாம் உக்காரவச்சு வாய்ல கொசு,ஈ, எறும்பெல்லாம் போற அளவுக்கு வாயை பிளக்க வச்சு கதை சொல்லுவீங்கன்னு பார்த்தா.. எங்கேயோ கொண்டு போய்ட்டீங்க..வீட்ல வேலை போட்டது போட்டபடி இருக்கு. நான் ஓடிபோய் வெரசா முடிச்சுட்டு உங்களோட பயணப்படுறேன் வனி. சிறுவயதுக்கே பேக்கடிச்சு போன மாதிரி இருக்கு வனி.. எங்களுக்கும் மனசில் சிறுவயது அனுபவங்கள் அலையடிக்க தொடங்கிருச்சி டோய்ய்ய்.... கோடி கொடுத்தாலும், தவமிருந்தாலும் திரும்பமுடியாத அந்த பால்ய பருவத்திற்கு உங்கள் கட்டுரையின் மூலம் மறுபடி கொண்டு சென்றதற்கு கோடி நன்றிகள்.. வாழ்த்துக்கள் வனி :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வனி சூப்பர் :) கதையோடவே பிரயாணம் செய்ய வெச்சுட்டீங்க :)
சொந்த ஊர்ப்பாசம் அப்படியே உங்க எழுத்தில மிளிர்கிறது, என்ன வாகனத்தில அழைச்சுட்டு போகப்போறீங்க வனி :) வாழ்த்துக்கள் :) அடுத்த பதிவை படிக்க ஆவலா இருக்கு..:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சூப்பர் தங்கச்சி ;)

எப்படியும் Maldives பற்றி எழுதுவீங்கன்னு நினைச்சேன், பிலிம் ரோல் கொஞ்சம் ப்ளாஷ்பேக்கில் போயிடுச்சோ...
சரி, சரி பரவாயில்லை நாங்க எல்லோரும் அட்ஜஸ்ட் மாடி :)

உங்க கதையையும், புகைப்படங்களையும் காண ஆவலுடன் காத்திருக்கிறேன் ;-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

ப்ளாக் வந்த நாளில் இருந்து நான் இப்படி தூங்கிட்டே இருக்கனே, எதாவது எழுதிட்டு தான் பொங்கலுக்கு ஊருக்கு போகனும்னு நேற்று முடிவா உட்கார்ந்து எழுதினது. எனக்கு அம்புட்டு திருப்தி இல்லை தான். மனசுக்கு வந்த ஃப்ளோல அப்படியே தட்டிட்டு போனேன். அடுத்த அடுத்த பதிவாது ஒழுங்கா எழுத பார்க்கறேன் :) அதனால் கோச்சுக்காம எல்லாரும் மாட்டு வண்டியில் ஏறிடுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இன்னைக்கு வரை எனக்கும் தெரியாது ரேவ்ஸ் ;) அட்டாச் பண்ணிருக்க ஃபோட்டோ போன முறை ஊருக்கு போனப்போ வீட்டில் வந்து ஒரு பையன் வெட்டி தந்தது. அப்பவும் சாப்பிட தெரியாம தான் முழிச்சேன் :)

வண்டி கட்டியாச்சா? எல்லாரையும் கூட்டிகிட்டு பத்திரமா வந்து சேருங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரேவ்ஸ் அக்காங்க வண்டியை கட்டிட்டாங்க... ஏறிப்புடுங்க குணாங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பர் சுவா... எங்க ஊரில் தோப்பே கிடையாது :) எல்லாம் வயல் தான். அதனால் வித்தியாசமா வரப்புல நடக்கலாம் வாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நல்ல காலம்... பாட்டு பாட போறேன்னு நினைக்காம போனீங்க ;)

என்னதான் தலை கீழ நின்னாலும் அந்த கொண்டாட்டம் இனி கிடைக்காது தான் கல்பு... அட்லீஸ்ட் ஃப்ளேஷ் பேக் ஓட்டியாது சந்தோஷப்பட்டுக்கலாம்னு தான். வெரசா வேலையை மூட்டை கட்டிட்டு, பெட்டி கட்டி கிளம்பிப்போடுங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சொந்த ஊர் பாசம் எப்பவும் யாருக்குமே விட்டுப்போகாது தானே?? :) வாகனம்... நம்ம ஊர் மாட்டு வண்டி தான். கொஞ்சம் சொகுசா வேணும்னா அதுலயே டயர் வண்டி கட்ட சொல்றேன் ரேவ்ஸ்கிட்ட.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மாலத்தீவு பற்றி எழுதினாலும் இப்போ வெறும் ஃப்ளாஷ் பேக் தானே ;) ரீல் இன்னும் கொஞ்சம் ரிவர்ஸ்ல போயிட்டுது, அம்புட்டு தான். ஃபோட்டோஸ் அதிகம் இல்லை அக்கா... எங்க ஊருக்கு போறேன்... பெங்களூர் விட்டா சென்னை, சென்னை விட்டா பெங்களூர். ஒன்னுத்துக்கும் நேரம் இல்லாம போச்சு இப்போ. மாலத்தீவு பற்றி எழுதனும், அதுக்கு முன் சிரியா முடியனும்... அதனால் கொஞ்சம் காலம் ஆகும் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு வனி,

ஆஹா கிளம்பிட்டாங்கய்யா, கிளம்பிட்ட்ட்டாங்க!

வனி, ஆரம்பமே ஜோர். இதோ உங்க கூட நாங்களும் வந்துட்டே இருக்கோம்ல.

சித்திரக் கூடத்தில் அழகான வாழ்க்கைச் சித்திரங்களை, தீட்டத் தொடங்கியிருக்கீங்க.

பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு வனி
அது ஒரு கனாக் காலம்.
சின்ன வயதில் என் சின்ன பாட்டி வீட்டுக்கு சென்ற போது குளத்தில் தூண்டில் போட்டு மீன் பிடித்ததை மறக்கவே முடியாது.
சின்ன பானை வைத்து கூட்டாஞ்சோறு ஆக்கி விளையாடியது எல்லாமே இனிமையான நினைவுகள்.
தொடர்ந்து எழுதுங்க வனி.நாங்களும் கூடவே வருகிறோம்.

ஒரே ஒரு கிராமத்திலே ஆரம்பமே அசத்தல். உங்க வாழ்க்கையில நடந்த அனுபவங்களை படிக்கும் போது நானும் என் மனமெனும் டைரியை புரட்டி பார்க்கிறேன். என் பாட்டி வீட்டுக்கு சென்ற நியாபகங்கள் என் கண் முன்னே... நானும் உங்களுடன் உங்க் கிராமத்தை சுத்தி பார்க்க கிளம்பிட்டேன் என் பால்ய கால நினைவுகளையும் சுமந்து கொண்டு...:) வாழ்த்துக்கள் வனி..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

எப்போ ஊரை சுற்றி காட்டுவீங்க மேடம்??? சீக்கிரம் வாங்க...

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

பொறா...மையா இருக்கு. ஹ்ம்!
உங்க கூட கிராமத்தில் பயணிக்க ஆயத்தமாகிட்டேன். சீக்கிரம் அடுத்த போஸ்ட் போட்டுருங்க.

‍- இமா க்றிஸ்

நீங்களும் கிளம்பிட்டீங்களா... வெரி குட். சீதா... பின்னூட்டமே அசத்தலா எப்படி போடுறதுன்னு உங்ககிட்ட தான் கத்துக்கனும். நன்றி மேடம் நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீங்க சொன்னதை படிச்சதும் எனக்கு சிறு பிள்ளையாக இருந்த போது பாபனாசத்தில் மீன் குட்டி என்றெண்ணி தவளை குட்டி பிடித்தது தான் நியாபகம் வருது. ஹஹஹா. நன்றி நிகிலா. உண்மையில் இனிமையான நினைவுகள் தான். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஒழுங்கா படிக்கனும் தலைப்பை... இல்லைன்னா பனிஷ்மண்ட் கொடுப்பேன் ;)

எல்லாரும் கூட்டமா பாட்டிங்க வீட்டுக்கு போலாம் வாங்க சுமி ;) நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எதுக்கு பொறாமை? நீங்க எங்களை விட அதிகமா இப்பவும் எஞ்சாய் பண்றீங்களே ;) இமா’கு ஒரு ஸ்பெஷல் இடம் போடுங்கம்மா ரேவ்ஸ்... வண்டி கட்டியாச்சா? நன்றி இமா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வரேன் அக்கா... ஏன் இம்புட்டு வேகமா தேடுறீங்க? அடிக்கவா? சொல்லிட்டு தானே ஊருக்கு போனேன்? மண்டையை காட்டுங்க, ஒரு கொட்டு வைக்கனும். 3:)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா