பயணம்

பூமியில் உயிர்களின் தோன்றலின் போதே பயணங்கள் தொடங்கியது. முதன்முதலில் ஆதிமனிதனின் இடம்பெயர்தலே பயணத்தை தொடங்கியது..

நடைபயணமாகவே இடம் பெயர்தல் இருந்த காலக்கட்டத்தை சக்கரத்தின் கண்டுபிடிப்பு அடுத்த கட்ட பயணத்திற்கு மனித வாழ்க்கை வந்தது..

பல பயணங்கள் வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. வாஸ்கோடகாமாவின் கடற்பயணம் இந்தியாவை அடிமை படுத்த வழி வகுத்தது.

சீனாவின் குடியரசை உருவாக்கிய மா சே துங் மற்றும் அவரை சார்ந்த மக்களின் உயிரை பாதுகாத்துக் கொள்ள 8000 கிலோமீட்டர் தூரத்தை தொடர்ந்து 370 நாட்கள் ஓடிய பயணமே நீண்ட நெடிய பயணமாக காலம் பதிந்துள்ளது..

சுற்றுலா பயணம் எப்போதும் மகிழ்ச்சியயை மனதில் தேக்கி வைக்கிறது.. போக்குவரத்து, பயணத்தை எளிதாக்கி விடுகிறது.. ஆனாலும் மனதிற்கு பிடித்தவர்களின் கை கோர்த்து நடந்து செல்லும் பயணம்... இனிமையான தருணமாகவே இருந்து விடுகிறது.

ரயில் பயணங்கள் சுகமான தாலாட்டுடன், காலத்தை பின்னோக்கி செல்வது போல் காட்சிகளையும் கடந்து சென்றுக் கொண்டே இருக்கிறோம்.

தேடல்களே பயணங்களை தொடங்குகிறது. சிலர் வேலை தேடி பயணம், சிலர் நண்பரை தேடி பயணம், சிலர் காதலை தேடி பயணம் இன்னும் சிலர் வாழ்வை தேடி பயணம்.. ஒவ்வொரு பயணத்திலும் ஒரு கதை கிடைக்கிறது. சிலருக்கு சிறுகதையாய் முடிகிறது. சிலருக்கு தொடர்கதையாய் தொடர்கிறது..

சிலரது பயணங்கள் புத்தகங்களுடனே பயணிக்கிறது... இன்னும் சிலரின் பயணங்கள் புத்தகத்தின் உள்ளே கதாபாத்திரங்களுடனும், குதிரைகளுடனும், போர்களத்திலும் பயணித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

எஸ். ராமகிருஷ்ணனின் "தேசாத்திரி" பயணம் பற்றிய புத்தகம் நம் பயணங்களின் எண்ணத்தை மாற்றிவிடும். பயணத்தின் போது மழை, வெயில், மேகம், கடல் எல்லாம் நம் நண்பர்களாக மாறிவிடும்.

பயணங்கள் பல ஆச்சர்யங்களையும்,அதிசயங்களையும் தன்னுளே புதைத்துக் கொண்டு உள்ளது. இந்த ஆச்சர்ய உலகத்தின் மீது நம்பிக்கை வைத்து நாமும் பயணத்தை ரசனையுடன் பயணிப்போம்..

ஜனனம்....
என்பதே ஒரு
வெற்றிப் பயணம்தான்
நம் அணைவருக்கும்...

அன்று
தொடங்குகிறோம்
வாழ்க்கை எனும்
பயணத்தை!!!

மழலை பருவத்தில்
அன்னையின் விரல்பிடித்து
தொடரும் பாச பயணம்...
பள்ளிப்பருவத்தில்
தோழமைகளின்
கரம் பிடித்து சில
விளையாட்டு பயணம்...
கல்லூரிப்பருவத்தில்
நல்ல நட்புகளும்
இனிமையான காதலுடனும்
கை கோர்க்கும் பயணம்....
இளமை பருவத்தில்
திருமண பந்தத்துடன்
தொடரும் உண்மை பயணம்...
நம் மழலை கை பிடித்து
தொடரும் அன்பு பயணம்...
எதையும் பொருட்படுத்தாது
பொருள் தேடும் பொறுப்பான
பயணம்....
முதுமை பருவத்தில்
மன அமைதியும்
இறை அருளும் தேடும்
இன்ப பயணம்....
முடிவில்லாத பயணங்கள்தான்
இப்படி....
முடிந்தவரை தொடருவோம்.......

5
Average: 4.3 (7 votes)

Comments

ரேவ்ஸ் அருமையான தொடக்கம் பயணம் பற்றி ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க.
வலைப்பதிவின் பயணம் இன்னும் இன்னும் தொடர வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சமைச்சுட்டு வரும் முன் சுவா முந்திட்டாங்க ;) பரவாயில்லை, நான் சொன்னாலும் சுவா சொன்னாலும் மகிழ்ச்சியே. வாழ்த்துக்கள் புது ப்ளாகுக்கு. எப்போ எப்போன்னு காத்திருந்தேன்... படிக்க இனிமையாய் பல வகைப் பயணம் பற்றி ரேவ்ஸ் எழுத்து அருமை. உங்க எழுத்தான்னு இன்னும் என்னால நம்ப முடியல ரேவ்ஸ். சூப்பர். அசத்துங்க தொடர்ந்து. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரேவ்,

என்னை போன்ற பெரும்பாலானோருக்கு தெரியாத தகவலை துணையாக வைத்து பயணத்தை தொடங்கி அருமையான கவிதை வரிகளில் இந்த பக்கத்தை முடிவாக்கி அதில் ஒரு தொடர் புள்ளியை வைத்து இனிமையான தொடக்கத்தை வச்சிருக்கீங்க. முதல் கட்டுரையே முத்தாக இருக்கு. வாழ்த்துக்கள் ரேவ் :) வளர்ந்து கிளை பரப்பி விருட்சமாகட்டும் உங்கள் பயணம் :)

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்.. நீங்க எந்த ரேவ்ஸ்.. ? நான் நினைக்கறேன். முன்னாடியெல்லாம் ஒரு அழகான குட்டி பொண்ணு போட்டோவை பேஸ்புக் ஐடில வச்சுட்டு ஒரு ரேவதி வந்திருந்தாங்க. அவங்களை இப்ப பேஸ்புக்ல அவ்வளவா காணல.. அவங்க தானா நீங்க?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

"பயணம்" பற்றி இனிதாக விளக்கி தனது எழுத்துப்பயணத்தை துவக்கியுள்ள ரேவ்ஸ் அக்காவிற்கு எனது வாழ்த்துக்கள் :-) பல புது விளக்கங்கள் சேர்ந்த கவிதை மாதிரி ரொம்ப அருமையா இருக்குங்.. மேலும் எழுதுங்க :-)

நட்புடன்
குணா

ரேவ்ஸ் பயணம் பற்றி இவ்வளவு அழகா எழுத உங்களாலதான் முடியும் :)
கூடவே அந்த கவிதை அருமை :) உங்க கருத்துக்களையும், கவிதைகளையும் படிக்க ஆவலோட இருக்கேன் :) வாழ்த்துக்கள் ரேவ் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

எதிர் பார்க்கவே இல்லை. கட்டுரை வெளீவரும்னு அட்மின் அண்ணாவுக்கும் அறூசுவை க்குழுவினருக்கும் மனமார்ந்த நன்றீ

Be simple be sample

முதல் பதிவு சுவா . நீங்க வந்து சொன்னதும்தான் ஓடி வந்து பார்த்தேன். நம்பவே முடியலை. தான்க்யு. சுவா .

Be simple be sample

வனி உங்களால மட்டுமா நம்ப முடியல.என்னாலயும்தான். நானும் எவ்வளோ காமெடியா யோசிச்சாலும் இவ்வளோ சீரியசா வரும்னு எதிர்பார்க்கலை.வனி கொடுத்த ஊக்கம் உற்சாகம் தான்க்ஸ் முதல். காரணம் . தான்க்யு சோமச் வனி

Be simple be sample

கல்ப்ஸ் என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணல்யே.. மெய்யாலூமே என்னை தெரியலயா.ரேவதி பேஸ்புக்ல இல்லனாதான அதிசியம். தான்க்யு கல்ப்ஸ் .திரும்ப கேக்கறேன் என்னை தெரியலயா

Be simple be sample

அன்பு தம்பிங் . இனிய பயணமாய் அமைந்தத்ல எனக்கு மகிழ்ச்சி . வாழ்த்துக்கு நன்றீ

Be simple be sample

இப்படில்லாம் காமெடி பண்ண கூடாது.ஏதோ. எழுதிருக்கோம்.அம்புட்டுதான் பதிவு க்கு மிக்க நன்றீ செல்வு

Be simple be sample

ஹாய் ரேவா
ஜனனம் என்பது வெற்றிப் பயணம் தான்.அற்புதமான வரிகள்.
வாழ்த்துக்கள்.வெற்றி எப்போதும் உங்களுடன் இருக்கட்டும் பா

ஹாய் நிகி. பதிவு க்கு மிக்க நன்றீபா.ரொம்ப நாள் கழிச்சு நாம அறூசுவைல சந்திக்கிறோம்

Be simple be sample

ஹாய் ரேவ்ஸ்,

முதலில் மனமார்ந்த வாழ்த்துக்கள் :)

பயணத்தில் தொடங்கிய உங்கள் வலைப்பூ பயணம் வெற்றிப்பயணமாக

அமையட்டும்.பயணம் குறித்து அழகா சொல்லியிருக்கீங்க,கவிதை

அருமையாயிருக்கு ரேவ்ஸ் :) பாராட்டுக்கள்டா :) தொடரட்டும் ரேவ்வின் எழுத்து

பயணம் :) தாமதமாக பதிவிடுவதற்கு மன்னிக்கவும்.மீண்டும் எனது வாழ்த்துக்கள் :)

அன்புடன்
நித்திலா

அன்பு ரேவதி,

அருமையான தொடக்கம். இனிமையான இந்தப் பயணம், என்றும் தொடர மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

கருத்துக்களும் கவிதையும் அருமை, அருமை! தொடருங்க இந்த இனிமையான பயணத்தை.

அன்புடன்

சீதாலஷ்மி

தாமதமான என்ன பரவாஇல்லை.நித்தி பதிவு க்கு நன்றீ

சீத்தம்மா வாழ்த்துக்கு நன்றீ மா

Be simple be sample

உங்க வலைப் பதிவுல முதன் முதலா பயணத்தை துவக்கியிருக்கீங்க ரேவ்ஸ்... வாழ்த்துக்கள் ரேவ்.
//ஜனனம்....
என்பதே ஒரு
வெற்றிப் பயணம்தான்
நம் அணைவருக்கும்...// மறுக்க முடியாத வரிகள். பயணத்தின் பல பரிமாணங்களை கவிதையின் மூலம் அழகா சொல்லியிருக்கீங்க. அருமை ரேவ்ஸ். என் மனமார்ந்த பாராட்டுக்கள்.:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

அருமையான கவிதை ரேவதி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)