டிசைன்டு டீ கோஸ்டர்

தேதி: January 8, 2014

5
Average: 4.6 (5 votes)

 

ப்ளைன் டீ கோஸ்டர்
சாக் பவுடர் (Chalk Powder)
மார்க்கர்
ஃபேப்ரிக் க்ளு
ஃபெவிக்கால்
விரும்பிய நிறத்தில் மெட்டாலிக் பெயிண்ட்
விரும்பிய நிறங்களில் ஸ்டோன்ஸ்

 

தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும்.
டீ கோஸ்டரின் மீது மார்க்கரால் விருப்பமான டிசைனை வரைந்து கொள்ளவும்.
சாக் பவுடரில் சிறிது ஃபெவிக்கால் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
சற்று கெட்டியாகக் கலந்து கொள்ளவும்.
சாக் பவுடர் கலவையை ஒரு பாக்கெட்டில் ஊற்றி கோன் போல செய்து, கோனின் முனையை லேசாக வெட்டிவிடவும். கோஸ்டரில் வரைந்த டிசைனின் மீது சாக் பவுடர் கலவையால் வரையவும்.
பிறகு கோஸ்டரின் ஓரங்களில் சிறு புள்ளிகள் வைத்து, நன்கு காயவிடவும்.
காய்ந்ததும் அதன்மேல் மெட்டாலிக் பெயிண்ட் அடித்து காயவிடவும்.
கடைசியாக டிசைனின் மீது ஃபெவிக்கால் வைத்து உங்கள் விருப்பத்திற்கேற்ப ஸ்டோன்ஸ் ஒட்டி காயவிடவும்.
அழகிய டீ கோஸ்டர் தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

Wow team super design, colour, n good work....

மிகவும் அழகாக உள்ளது. வாழ்த்துக்கள். விரைவில் செய்து பார்க்கிறேன்

அருமை, அருமை...அதிலும் இரண்டாவது புகைப்படம் மிகவும் அழகு...

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

டிசைன்டு டீ கோஸ்டர் சூப்பர் ஆ இருக்கு டீம்...
கலர் காம்பினேஷன் அழகு...

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

தமிழ் நமக்கு சும்மாவே சரியா வராது தான் டீம்... அதனால தானோ என்னவோ, நீங்க இப்படி வருசையா அசத்தும் போது என்ன சொல்லி பாராட்டுறதுன்னு வார்த்தைய தேடுறேன். எதை யோசிச்சாலும் இதை தானே போன முறை சொன்னோம், அதை தானே அந்த க்ராஃப்ட்ல சொன்னோம்னே இருக்கு ;) அதனால் இப்போ யோசிக்கிறதையே டைப் பண்ண ஆரம்பிச்சுட்டேன். போங்கப்பா... உங்க கையில் எல்லாம் கலைவாணி குடி இருக்கா போல. எதை செய்தாலும் இத்தனை அழகா எப்படி தான் வருதோ!!! இதை எல்லாம் நேரில் வந்து கிஃப்ட் என்ற பேரில் கலக்ட் பண்ணிக்கவாச்சும் நான் நாகை வர வேண்டும். இந்த நேர்த்தியில் பாதியாவது இந்த வனிதா கையில் வரலாம்... கடவுள் மனசு வைக்க மாட்டங்கறார்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அழகாக இருக்கிறது. புக்மார்க் செய்து வைக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

அட அட அழகோ அழகு பின்னீட்டீங்க டீம் வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

டீ கோஸ்டர் ரொம்ப அழகா இருக்குங்க...

நட்புடன்
குணா

டீ கோஸ்டர் அருமையா இருக்கு டீம். அப்படியா இங்க ஒரு அரை டஜன் பார்சல் அனுப்பிடுங்க... :)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....