வலையில் பூத்த பூவே..!!

இணையவெளியில்
முகமறியாது
அறிமுகமானோம்!!
சிற்சில வார்த்தைகள்
பேசி ஓர் சிநேகம்
வளர்த்தோம்!!

நட்பெனும் தீபம்
ஏற்றிய நாளெதுவோ?
அறியேன்!!
அறிந்ததொன்றே!!
என்றும் தொடரும்
உறவிதுவென்றே!!

நாம்..!!
அன்றாடம் கதை பேசி
களித்ததில்லை!!
அதனாலே அன்பிலேதும்
மாற்றமில்லை!!

பல நாட்களுக்கு
ஒருமுறை வரும்
உன் நலம் விசாரிப்பு!!
காணும் நேரம்
உள்ளத்தில் ஓர்
ஆனந்த மத்தாப்பு!!

நீ வாழ்த்தாமல்
என் பிறந்தநாள்
கடந்ததில்லை!!
நீ ரசிக்காமல்
எந்த கவிதையும்
என் முகபுத்தகத்தில்
இருப்பதில்லை!!

பரிசுகள் பலவளித்து
எனை திணறடிப்பாய்!!
பூக்கள் நிதமளித்து
எனை நெகிழ வைப்பாய்!!

நேரம் நம் வசமில்லை!!
பேசிட பொழுதுகள்
வாய்ப்பதில்லை!!
ஆயினும்,நம் நேசம்
நம் வசமுண்டு!!
என்றும் வாசமுண்டு
நம் நட்பூவிற்கு!!

உன் அன்பு நெஞ்சம்
மகிழ்ச்சியில் திளைத்து
வாழ்ந்திட நாளும்
பிரார்த்தனை உண்டு!!
வாழ்க நீ பல்லாண்டு!!
மகிழ்வோடு!!

அன்புடன்,
நித்திலா

5
Average: 4.8 (5 votes)

Comments

ஒவ்வொரு வரியும் ரொம்ப ரொம்ப அருமைங்க,
வாழ்த்துக்கள் :-)

நட்புடன்
குணா

நித்திலா கவிதை ரொம்ப நல்லா இருக்கு திரும்ப திரும்ப படிக்க தூண்டுது உங்கள் வார்த்தைகள்

வாங்க குணா :)

முதல் பதிவிற்கு மிகவும் நன்றி குணா :) இரண்டு பக்கமும் பதிவிட்டு

இருக்கீங்க,மீண்டும் எனது நன்றிகள் :)

உங்கள் பாராட்டிற்கும்,வாழ்த்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள் :)

அன்புடன்
நித்திலா

ஹாய் உமா,

எப்படி இருக்கீங்க?

எனது வலைப்பூவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் :)

//கவிதை ரொம்ப நல்லா இருக்கு திரும்ப திரும்ப படிக்க தூண்டுது உங்கள் வார்த்தைகள்//

மிகுந்த மகிழ்ச்சி.மிகவும் நன்றி தோழி :)

உங்கள் வருகைக்கும்,அன்பான பாராட்டிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள் :)

அன்புடன்
நித்திலா

உங்க கவிதையில் வார்த்தை அழகை நான் சொல்லவும் வேண்டுமா... எப்போதும் நன் படித்து ரசிப்பது ஆயிற்றே. இப்போதும், இனிமையாய் இணைய நட்பை அழகாய் சொல்லி இருக்கீங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இணைய நட்பை அழகான வரிகளில் சொல்லி அசத்தி இருக்கீங்க..மேன்மேலும் கவிதை படைக்க வாழ்த்துக்கள் நித்திலா :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அன்பு நித்திலா,

வலையில் பூத்த இந்தப் பூவின் வாசம், படிக்கும் எல்லோரது மனதிலும் நிறைந்திருக்கும் என்றென்றும்.

அழகான எதுகை மோனை, அதன் பொருள் எல்லோரது எண்ணங்களையும் பிரதிபலிப்பதனாலேயே, மீண்டும் மீண்டும் படிக்கவும் ரசிக்கவும் வைக்கிறது.

அன்புடன்

சீதாலஷ்மி

நித்தி மீண்டும் ஒரு பூ
நட்"பூ"
இணையதள நட்பை பற்றிய வரிகள்
அருமையா இருக்கு பா

முகம் அறீயா தோழிக்கு ஒரு கவிதை அழகு நித்தி

Be simple be sample

ஹாய் வனி,

//எப்போதும் நன் படித்து ரசிப்பது ஆயிற்றே// கேட்பதற்கே மிகவும் மகிழ்ச்சியாக

இருக்கிறது,மிகவும் நன்றி வனி :)

//இப்போதும், இனிமையாய் இணைய நட்பை அழகாய் சொல்லி இருக்கீங்க//

தங்களின் மனம் நிறைந்த பாராட்டிற்கு மீண்டும் எனது நன்றிகள் :)

தங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள் :)

அன்புடன்
நித்திலா

ஹாய் அருள்,

//இணைய நட்பை அழகான வரிகளில் சொல்லி அசத்தி இருக்கீங்க//

மிகுந்த மகிழ்ச்சி,மிகவும் நன்றி அருள் :)

தொடர்ந்து வந்து உற்சாகப்படுத்தும் உங்கள் வரவிற்கும்,வாழ்த்திற்கும் எனது

மனமார்ந்த நன்றிகள் :)

அன்புடன்
நித்திலா

வணக்கம் சீதாம்மா,

உங்கள் பதிவு எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.தொடர்ந்து எனக்கு

விருதளிப்பதற்கு எனது மனமார்ந்த நன்றிகள் சீதாம்மா :)

//வலையில் பூத்த இந்தப் பூவின் வாசம், படிக்கும் எல்லோரது மனதிலும் நிறைந்திருக்கும் என்றென்றும்//

மிகுந்த மகிழ்ச்சி,மிகவும் நன்றிமா :)

//அழகான எதுகை மோனை, அதன் பொருள் எல்லோரது எண்ணங்களையும் பிரதிபலிப்பதனாலேயே, மீண்டும் மீண்டும் படிக்கவும் ரசிக்கவும் வைக்கிறது//

அழகான,அன்பில் தோய்ந்த பாராட்டிற்கு எனது ஆயிரமாயிரம் நன்றிகள்மா :)

தங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் மீண்டும் எனது நன்றிகள்மா :)

அன்புடன்
நித்திலா

ஹாய் நிக்கி,

//இணையதள நட்பை பற்றிய வரிகள்
அருமையா இருக்கு பா//

ரொம்ப சந்தோஷம்டா.நன்றி நிக்கி :)

வருகைக்கும்,கருத்திற்கும் ரொம்ப நன்றிடா :)

அன்புடன்
நித்திலா

ஹாய் ரேவ்ஸ்,

//முகம் அறீயா தோழிக்கு ஒரு கவிதை அழகு நித்தி//

ரொம்ப சந்தோஷம்டா.நன்றி ரேவ்ஸ் :)

வருகைக்கும்,கருத்திற்கும் ரொம்ப நன்றிடா :)

தாமதமாக பதிலளிப்பதற்கு அனைவரும் மன்னிக்கவும்.

அன்புடன்
நித்திலா

அழகான வார்த்தைகளினால் ஆன நட்பு எனும் முத்துமாலையை எதுகை, மோனையோடு நன்கு பளபளப்பாக கவிதை எனும் பெயரில் உங்கள் வலைதளத்தில்அணிவித்திருக்கிறீர்கள் நித்திலா.. :) அருமை ....அருமை... பாராட்டுக்கள். உங்கள் கவிதைகள் தொடர வாழ்த்துகிறேன்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

ஹாய் நித்திலா உங்க வரிகள் சூப்பர், எல்லோர் மனதிலும் ஓடும் ஓட்டம் தான், அருமையான வார்த்தைகளை கொண்டு வரிசை படுத்திருக்கீங்க... வாழ்த்துக்கள்

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா