எல்லாம் வெப்பமயம்

இந்த உலகத்துல பிறந்த எல்லா உயிர்களுக்கும் ஏதோ ஒரு பிரச்சனை. இதுல நாம வாழற பூமிய பத்தி நாம எங்க யோசிக்க போறோம்.

இப்ப பாலைவனங்கள் எல்லை விரிவடையுது. கடல் நீர்மட்டம் உயருது. பனிமலைகள் எல்லாம் நம்ம மனசு குச்சி ஐஸ் உருகற மாதிரி உருகுது. விளை நிலம் எல்லாம் விதை போட்டா முளைக்காத மாதிரி மலடா மாறி வருது.

பூமி வெப்பமயமாகறதுக்கு முக்கிய காரணம் நான்கு வாயுக்கள் (உருளை சாப்பிட்டா புடிக்கிற வாயு இல்ல) ஒரு 50 வருடம் அப்படியே பின்னாடி போனோம்னா இவ்ளோ பிரச்சனை இல்ல. பெட்ரோல் பொருள் உபயோகம், தொழிற்சாலைகள் இதெல்லாம் எப்ப தேவைக்கு அதிகமா பயன்படுத்த ஆரம்பிச்சோமோ அப்ப ஆரம்பிச்சாரு வாயு பகவான் அவருடைய வேலையை.

இதோட உபயோகம் அதிகம் ஆகும் போதே கார்பன் டை ஆக்சைடு காற்று மண்டலத்தில் கலக்க ஆரம்பிச்சது. தாவரங்கள் ஒளிச்சேர்க்கைக்கு பயன்பட்டதால நமக்கு அவ்ளோ பிரச்சனை இல்ல. ஆனா காடுகளை அழித்து, மரங்கள் வெட்ட ஆரம்பிச்சதும் பூமியின் அழிவு தொடங்குது.

2வது வாயு மீத்தேன், இது எளிதில் தீப்பற்ற கூடியது. இது கழிவு பொருட்களிலிருந்து உருவாகி இதுவும் காற்றில் கலக்குது. கோடை காலத்தில் குப்பை மேடு எல்லாம் எளிதில் தீப்பிடிக்க இதுவே காரணம்.

3வது வாயு நைட்ரேஸ் ஆக்சைடு. இது உருவாக காரணம் நாம பயன்படுத்துற ரசாயண பொருட்கள் தான். முன்பெல்லாம் விவசாயத்துக்கு இயற்கை உரம் பயன்படுத்துவாங்க. ஆனா காலத்தின் வேகத்திற்கு ஏற்ப குறுகிய அறுவடைக்காக ரசாயண உரங்கள், பயிர்களை காக்க அதிகம் வீரியமுள்ள பூச்சிக்கொல்லி மருந்து இதில் இருந்து வெளிபடும் ஆக்ஸைடு காற்றில் உள்ள நைட்ரஜனோடு கலந்து, மாணிக்கம் எப்படி மாணிக்பாட்ஷாவா மாறினாரோ அது போல இதுவும் நைட்ராக்சைடாக பேரை மாற்றி பூமி வெப்பம் ஆக ஒரு காரணம் ஆகுது.

4வது ஃபுளோரோ கார்பன். 40 வருடத்துக்கு முன்னாடி வரைக்கும் ஏசினா ஒரு அரிதான பொருள். ஆனா இப்ப எங்கும் ஏசி மயம், ஏசி இல்லாத வீடு இப்ப மிக குறைவு (எங்க வீட்டுல இல்லிங்கோ). எங்க டாமி ஏசி இல்லனா இருக்கமாட்டான்னு வேற சில பேரு பெருமை பட்டுக்குவாங்க. ஏசி என்னதான் நம்ம ரூமை குளுமைபடுத்தினாலும் அதில் இருந்து வர குளோரோ புளோரோ கார்பன்(நல்ல எதுகை மோனை) அப்படியே காற்றோடு இரண்டு காதலரின் மனம் போலவே கலந்து பயணம் செய்து ஓசோன் படலத்தை ஓட்டை போட ஆரம்பிச்சாச்சு. சூரிய பகவான் நமக்கு அங்கிருந்து வெயிலை சும்மா இதயத்துல விட்ட அம்பு மாதிரி பாய்ச்சுராரு.

சரி கடைசியா ஒரு கருத்து(பெரிய கருத்து கந்தசாமி) எதையும் மாற்ற நம்மால முடியாது. முடிந்த வரைக்கும் பயன்பாட்டை குறைப்போம். நம்ம சந்ததியினருக்கு ஆரோக்கியமான பூமியை பரிசளிப்போம். (அட நமக்கு கூட ரைமிங் நல்லா வருது)

5
Average: 5 (4 votes)

Comments

ரேவ்ஸ் என்னன்னோ சொல்லியிருக்கீங்க எனக்கு ஒன்னும் பிரியலங்க ;)
இருந்தாலும் நம்ம புள்ளைக்கு பதிவு போடலன்னா எப்புடி :P

//சரி கடைசியா ஒரு கருத்து(பெரிய கருத்து கந்தசாமி) எதையும் மாற்ற நம்மால முடியாது. முடிந்த வரைக்கும் பயன்பாட்டை குறைப்போம். நம்ம சந்ததியினருக்கு ஆரோக்கியமான பூமியை பரிசளிப்போம்.//

நச்சுன்னு ஒரு கருத்த சொல்லியிருக்க நம்ம கருத்து கந்தசாமிக்கு வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஆஹா சுவா .டான்க்ஸ்ப்பாபதிவுக்கு(இங்க மட்டும் என்ன எல்லாம் பிரியுதா என்ன)

Be simple be sample

Mukkiyama karuthulla pagirvu. Asathuringa revs. Namma revs'annu asandhu poren. :-)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

mm super kalakkureenga room pottu yosipeengalo

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

பூமி வெப்பமாதலப் பத்தி அருமையா ரத்தின சுருக்கமா எழுதி இருக்கீங்க ரேவ்ஸ். வாழ்த்துக்கள்.ப்ளாஸ்டிக் பயன்பாட்ட கம்மி பண்ணினாலே பூமி வெப்பமாதல ஒரு 25% கட்டுப்படுத்தலாம். நல்ல தகவல்கள பகிர்ந்தமைக்கு நன்றி ரேவ்ஸ்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

நல்ல விழிப்புணர்வு கட்டுரையா சொல்லியிருக்கீங்க, மாணிக்பாட்ஷா விளக்கம் ரொம்ப அருமைங்க :-)
கடைசி கருத்தும் நல்ல ரைமிங்& ரொம்ப சூப்பர்ங்க அக்காங் :-)

நட்புடன்
குணா

அன்பு ரேவதி,

இன்றைய சூழ்நிலைக்குத் தேவையான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் அருமையான பதிவு.

தொடருங்க உங்க கருத்துக்களை.

அன்புடன்

சீதாலஷ்மி

இதுவரை வெப்பமயம் ஆகுறதுன்னா என்னான்னு தெரிஞ்சுக்காதவங்க கூட இந்த பதிவ படிச்சா எளிதில் புரிஞ்சுப்பாங்க. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க ரேவதி. மண்டையில பல்ப் எரியவச்சுட்டீங்க நல்ல ஒரு விழிப்புணர்வு கட்டுரை.

என்ன பண்ணறதுன்னு தெரியாம தான் இவ்ளோ சீரியஸ் வனி.தான்க்ஸ் பா

Be simple be sample

சுபி. ரூம் போட்டு யோசிக்கலப்பா. படிச்சத கொஞ்சம் ஷார்ட்டா பகிர்ந்துகிட்டேன் .பதிவுக்கு நன்றீ சுபி

Be simple be sample

ஆமா சுமி.இங்க தமிழ்நாட்டுல 2012 ல பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமா நீலகிரிதான் வந்துருக்கு. அங்க நாங்க பிளாஸ்டிக் பார்க்கலபா.நாம ஒத்துழைச்சாதான் இதெல்லாம் மாறும். பதிவு க்கு நன்றீ. சுமி

Be simple be sample

குணாங் தம்பிங். அன்பு தம்பிங் சொன்னா சரிதானுங்.டான்க்ஸ்

Be simple be sample

சிதாம்மா. பதிவு க்கு மிக்க நன்றீ .

Be simple be sample

உமா எப்படி இருக்கிங்க. உங்க பதிவுக்கு மிக்க நன்றீ. உமா

Be simple be sample

ரேவ்ஸ் நல்லதொரு விழிப்புணர்வு கட்டுரை....மேன்மேலும் கட்டுரைகள் படைக்க வாழ்த்துக்கள் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ரேவ்ஸ் எவ்ளோ பெரிய விஷயத்தை எடுத்து சொல்லியிருக்கீங்க. வாழ்த்துக்கள் பா

நம் சுயநலத்தால் இயற்கையை சீரழிச்சுட்டு இருக்கோம். உணர்ந்து திருந்தினால் நல்லது. இல்லைன்னா எல்லாரும் முதுகுல ஆக்சிஜன் சிலின்டரை கட்டிட்டு அலைய வேண்டியதுதான்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

செல்வி ரொம்ப தான்க்ஸ் பா.

Be simple be sample

ஹாய் கவி .எப்படி இருக்கிங்க.பதிவுக்கு ரொம்ப தான்க்ஸ் பா

Be simple be sample

ரேவதி நீங்க சொன்னது ஏற்கனவே நான் ஒரு செமினார்க்கு போன அப்ப இதை பத்திதான் அவுங்களும் எங்களுக்கு சொன்னாங்க. உண்மைதான் இந்த உலகம் வெப்பமயமாதல். இருந்தும் இதுக்கு என்ன தீர்வு என்றும் தோன்றும் போது அதிகமாக பெட்ரோல், டீசல் உபயோகிப்பதை தவிர்க்கவும்.

நல்ல பயனுள்ள பதிவு ரேவதி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

சகோதரிக்கு வாழ்த்துக்கள். நல்ல தலைப்பு தொடருங்கள்.
இயற்கையை மனிதன் வென்று விடலாம் என்று மனப்பால் குடித்த மனிதன் மேலும் மேலும் தோற்று கொண்டிருக்கிறான்.
சென்ற வருடத்தை விட இந்த ஆண்டு நமது தமிழகத்தில் பெய்ய வேண்டிய மழை அளவு 28% சதவிகம் குறைந்துள்ளது. அதற்கு காரணம் நமது வசதிக்காக மரங்களை மட்டுமல்ல மலையையும் வெட்ட ஆரம்பித்து விட்டான் மனிதன்.
இனி கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சென்றுவிட்டது மனிதனின் அட்டூழியம்.

அன்புடன்
THAVAM

பாரதி,பிவி,தவம் அண்ணா பதிவுக்கு மிக்க நன்றீ .தாமதமான பதிவுக்கு மன்னிக்கவும்

Be simple be sample