கவிதைகள் பலவிதம்.....

காதல்ரோஜா

ரோஜா செடியும்
காதல் செடியும்
ஒன்றுதான் போலும்...
மண்ணில் பதியம் போட்டு
வளர்ப்பது
ரோஜா செடி....
மனித மனங்களில்
பதியம் போட்டு
வளர்ப்பது
காதல் ...செடி...

வலி

நினைவின்
வலி
கொடுமையானது
என்று சிலர்
சொல்லலாம்..
மறப்பதின்
வலி
அதை விடக்
கொடுமையானது
என்று பலர்
சொல்லலாம்..
ஆனால்.....
நினைப்பதா...மறப்பதா..
என்று தெரியாமல்
இருப்பது
எவ்வளவு கொடுமை...
என்று
எனக்கு மட்டும்தான்
தெரியும்....

உணர்வுகள்

பட்டாம்பூச்சியின்
காதலை
ரோஜா உணர்ந்ததுபோல..
வேரின் காதலை
மரம்
உணர்ந்தது போல..
மழையின் காதலை
மண்
உணர்ந்தது போல...
தாமரையின் காதலை
சூரியன்
உணர்ந்தது போல...
உன் மீது
எனக்கு இருக்கும்
காதலை...
நீ
எப்போதடா
உணர்வாய்...?????

புரிதல்

என்
மெளனத்தில்
உள்ள காதலை
புரிந்து கொள்ளாத
நீயா....
என் வார்த்தைகளில்
உள்ள காதலை
உணர்வாய்....??

விதை

ஒவ்வொரு
முறையும்
புதிய உத்வேகத்துடன்
வெளியே வருவேன்
என்ற லட்சியத்தினால் தான்
பூமிக்குள் தன்னை
புதைத்துக்
கொள்கிறதோ...???

யோகம்

என்னைப்பார்
யோகம் வரும்
என்று சொன்னது
கழுதை...
பார்த்தேன்..
யோகமும் வந்தது...
அதன் சொந்தகாரி
உருவத்தில்....
ஆம்....
அவள் பெயர்
யோகராணியாம்...

5
Average: 4.6 (5 votes)

Comments

Super :-) vaazthukkal blogku. Kalpu blog first post madhiri thamingilam. :P on the way to chn. Adjust maadi sumi. Raththina surukamaay azagu kavidhaigal. Thodarunga.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நாம் வைத்த செடியில் பூக்கும் முதல் பூவைப் பார்க்கும் போது எந்த அளவு மனம் குதியாட்டம் போடுமோ அது போல என் கவிதைப் பூக்களை வலைத் தளத்தில் வெளியிட வாய்ப்பு தந்த பாபு அண்ணாவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்..:), என் கவிதையை இவ்வளவு விரைவில் வெளியிட்ட அறுசுவை குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள்....:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

தங்கிலீஸ்னாலும் முதல் பதிவு போட்டு முதல் ஆளா ப்ளாக் தொடங்கினதுக்கு பாராட்டியிருக்கீங்க.. அதற்கு எனது நன்றிகள் வனி...:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

hi sumi
Azhagana varikal , simply super

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

சுமி கவிதைகள் அனைத்தும் அருமை தொடர்ந்து பூக்கட்டும் கவிதை பூங்கா மனமார்ந்த வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

எல்லா கவிதைகளும்
நல்லா இருக்குங் அக்காங் :-)
அதிலும் யோகம் கவிதை நல்ல காமெடிதான் போங்க :-)

நட்புடன்
குணா

சுபி, உங்கள் பாராட்டுக்கு ரொம்ப நன்றி..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

அன்பு சுவா,

உங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் ரொம்ப நன்றிப்பா.. :)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

அன்பு தம்பி,
உங்கள் பாராட்டுக்கும், வாய்த்துக்கும் ரொம்ப டேங்ஸ்...:)

//அதிலும் யோகம் கவிதை நல்ல காமெடிதான் போங்க :-)// நம்மலே ஒரு காமெடி பீசு, அதனோட எபெக்ட்டு கவிதையிலும் வந்திடுச்சு போல தம்பி ..;)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

வாழ்த்துதான் வாய்த்தா மாறிடுச்சுங்ளா?? :-) ஹிஹி

நட்புடன்
குணா

அன்பு சுமி,

கவிதைகளுடன் தொடங்கியிருக்கும் வலைப்பதிவுக்கு வாழ்த்துக்கள்!

கவிதைகள் நன்றாக இருக்கு. பாராட்டுக்கள்.

அன்புடன்

சீதாலஷ்மி

// வாழ்த்துதான் வாய்த்தா மாறிடுச்சுங்ளா?? :-)// அது வாழ்த்துக்கு ஒரு வாய்தா தம்பி....( நல்ல வேள வாத்துன்னு அடிகாம இருந்தேனே...;) இதுக்காகவே உங்களுக்கு டபுள் வாழ்த்து தம்பிங்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

உங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் சீதாம்மா..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

சுமி கவிதைகள் எல்லாமே நல்லா இருக்குங்க. வலி ங்கிற தலைப்புல இருக்கற கவிதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. தொடர்ந்து எழுதுங்க வாழ்த்துக்கள்.

கவிதை யோடு தொடக்கம் . சூப்ப்ர் சுமி. மேலும் தொடர வாழ்த்துக்கள்

Be simple be sample

உங்களின் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் உமா..:)
//வலி ங்கிற தலைப்புல இருக்கற கவிதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. // ..:)
//தொடர்ந்து எழுதுங்க // ஆதரவுக்கு என் அன்பு அறுசுவை தோழிகள் இருக்கும் போது என் எழுத்தும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். மீண்டும் நன்றி..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

உங்கள் வாழ்த்துக்கு ரொம்ப நன்றி தோழியே..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

சுமி அழகான வார்த்தைகளை கோர்த்து கவிதையா படைச்சமைக்கு வாழ்த்துக்கள் :)
ரொம்ப நல்லா இருக்கு சுமி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

உங்களின் வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் ரொம்ப நன்றி அருள்...:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

கவிதைகள் ஒவ்வொன்றும் அழகு. வாழ்த்துக்கள் சுமி! கடைசி கவிதையில் சிரித்து விட்டேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

உங்களின் வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றி கவி....:)
//கடைசி கவிதையில் சிரித்து விட்டேன் :)// எழுதும் போதே எனக்கும் சிரிப்பு தான் கவி.. அந்த கழுதை கேட்டா எனனை என்ன செய்யுமோன்னு ...;)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

சுமி அனைத்து கவிகளும் சூப்பர், யோகத்தை பார்த்து சிரிப்பை நிறுத்த முடியவில்லை...:)

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

உங்களின் பதிவுக்கு மிக்க நன்றி ரேணுகா...:)
//யோகத்தை பார்த்து சிரிப்பை நிறுத்த முடியவில்லை...:)// ..;)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

வாழ்த்துக்கள் உங்கள் கவிதை மிகவும் அருமையாக இருக்கிறது. தொடர்ந்து உங்கள் கவிதை பயணத்தை தொடரவும்.

சூப்பர்ப் சுமி :)

"புரிதல்" கவிதை எக்சலன்ட்! எல்லா கவிதைகளுமே அருமை!

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)