நல்லதோர் ஆரம்பம்

பத்தாண்டு துவக்கத்தில் பிரம்மாண்டமாய் நிமிர்ந்து நிற்கும் அறுசுவையில் புத்தாண்டு கொண்டாட்டமாக புதிதாக கட்டப்பட்டுள்ள வலைப்பதிவு எனும் வெற்றிப் படிக்கட்டுகளில் நானும் முதற்படி எடுத்து வைக்க வாய்ப்பளித்த அட்மின் மற்றும் அறுசுவை குழுமத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள் :)

ஒரு மனிதனின் வாழ்க்கையில் அனுபவங்கள் என்பது மிக அருமையானது, தனது முன்னேற்றத்திற்காகவும், குடும்ப நலனிற்காகவும் தனக்கான அடித்தளத்தை அமைத்துக் கொண்டு முன்னேற எத்தனிக்கையில் ஏற்படும் போராட்டங்களும் அதில் கிடைக்கும் பல தோல்விகளும் சில வெற்றிகளும் வாழ்க்கையை சுவாரஸ்யமானாதாக மாற்றும்.

அவ்வாறான, அனுபவங்கள் பலருக்கும் கிடைத்திருக்கும். அவர்களில் ஒவ்வொருவரின் அனுபவமும் மற்றோரிடமிருந்து நிச்சயமாக வேறுபடும்.

அவற்றில், சிறுவயது நினைவுகளை பின்னோக்கிப் பார்ப்பதும் மிக அழகான ஒன்று. ஒவ்வொருவரின் அனுபவங்களும் எழுத்து வடிவம் பெறாதவரை பழைய நினைவுகளாக உறங்கிக் கொண்டிருக்கின்றன.

அவற்றை நாட்குறிப்பு, வலைப்பதிவு போன்றவற்றில் எழுத்து வடிவம் கொடுத்து உங்களுடன் பகிர்கையில், அவை அழியாநிலையை அடையும் என்று மனமகிழ்வுடன் இனிதே என் வலைப்பதிவை "நந்தவனமாக" துவங்குகிறேன். உங்கள் ஆசிகளோடு :-)

5
Average: 5 (4 votes)

Comments

அன்பு குணாங்,

அறுசுவையின் முகப்பையே நந்தவனமாக்கி, எல்லோரையும் அன்புடன் வரவேற்று இருக்கீங்க.

புதிய வலைப்பதிவை பொலிவுடன் துவங்கியிருக்கீங்க, வாழ்த்துக்கள்

அன்புடன்

சீதாலஷ்மி

// புதிய வலை தளத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி...:)
ஒவ்வொருவரின் அனுபவமும் மற்றோரிடமிருந்து நிச்சயமாக வேறுபடும்.
அவற்றில், சிறுவயது நினைவுகளை பின்னோக்கிப்பார்ப்பதும் மிக அழகான
ஒன்று.ஒவ்வொருவரின் அனுபவங்களும் எழுத்துவடிவம் பெறாதவரை பழைய நினைவுகளாக உறங்கிக்கொண்டிருக்குகின்றன.// உண்மை தம்பி..:)

உங்கள் நந்தவனத்தில் உங்களின் பழைய நினைவுகள் நறுமணமாய் பூக்க எனது பாராட்டுகளும் வாழ்த்துக்களும் தம்பி..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

அன்பு தம்பிங். இனிதாய் ஒரு தலைப்பு.அசத்தல் மேலும் தொடர வாழ்த்துக்கள்

Be simple be sample

வலை தளத்திற்கு வருகை புறிந்திருக்கும் தம்பிங் க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் :)
நந்தவனம் பல விதமான பூக்களோடு பூத்து குலுங்க வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

//அறுசுவையின் முகப்பையே நந்தவனமாக்கி, எல்லோரையும் அன்புடன் வரவேற்று இருக்கீங்க.
புதிய வலைப்பதிவை பொலிவுடன் துவங்கியிருக்கீங்க, வாழ்த்துக்கள்//
உங்கள் முதல்
வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றிங்க மேடம் :)

நட்புடன்
குணா

உங்கள் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் ரொம்ப நன்றிங் அக்காங், :)

நட்புடன்
குணா

உங்கள் வாழ்த்துக்களுக்கும் ரொம்ப நன்றிங் அக்காங் :)

நட்புடன்
குணா

மனமார்ந்த வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங் அக்காங் :)

நட்புடன்
குணா

Guna Anna
Chinnatha irunthalum
ninavukalai niyabagapadutha
ubayogama ullathu Ungal Valaipathivu

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

குணா நந்தவனம்னு அழகா பேர் சூட்டி, நல்ல பல கருத்துக்களை பகிர்ந்து கொள்ளப்போகும் தங்களுக்கு வாழ்த்துக்கள் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

குணா தம்பியும் வலைப்பதிவுப் பகுதிக்கு வந்துட்டீங்களா. ஹி ஹி எனக்கு முன்னாடியே வந்துட்டீங்க. வாழ்த்துக்கள்.

உங்கள் நந்தவனத்தில் மணம் வீசும் மலர்கள் பூத்துக் குலுங்கட்டும். நாங்கள் வந்து ரசித்து செல்கிறோம் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றிங்க சகோதரி :-)

நட்புடன்
குணா

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றிங்க :-)

நட்புடன்
குணா

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றிங் கவிதா அக்காங் :-)

நட்புடன்
குணா

தங்களின் வலைப்பூவிற்கு எனது வாழ்த்துக்கள் குணா :)

நந்தவனத்தில் பல பூக்கள் நாளும் மலர்ந்து வாசம் வீசட்டும்,அறுசுவை

முகப்பையே படமாக இணைத்ததற்கு பாராட்டுக்கள் :)

உங்கள் எழுத்தில் பூக்கவிருக்கும் மலர்களை காண காத்திருக்கிறோம்,

மீண்டும் வாழ்த்துக்கள் குணா :)

அன்புடன்
நித்திலா

நந்தவனம் மலர் நிறைந்து மணம் வீச என் அன்பு வாழ்த்துக்கள். :-)

‍- இமா க்றிஸ்

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றிங்க நித்திலா :-)
முதல் படமாக அறுசுவையின் முகப்பு பக்கத்தை முதல்பதிவில் இட விரும்பினேன் :-) அதையே Screenshot எடுத்து Crop செய்து அப்லோட் பண்ணிட்டேன்ங்க :-)
பாராட்டுக்கு மிக்க நன்றிங்க

நட்புடன்
குணா

உங்கள் அன்பான வாழ்த்திற்கு ரொம்ப நன்றிங்க :-)

நட்புடன்
குணா

சகோ குணா
நந்தவனம் பேரு நல்லாருக்கு
நிறைய மலர்கள் மலர்ந்து மணம் வீச வாழ்த்துக்கள்

நந்தவனத்தில் பூத்த முதல் பூவே இப்படி மணம் வீசுது...வாழ்த்துக்கள்!

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

அருமையான முதல் பதிவு குணா :) வாழ்த்துக்கள்!

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றிங்க :-)
உங்களை போன்றோர் அனைவரின் வருகையினால் நந்தவனம் பல மலர்கள் மலர்ந்து மணம்வீசும் என்பதில் ஐயமில்லை..

நட்புடன்
குணா

உங்கள் பாராட்டிற்கும் வருகைக்கும் ரொம்ப நன்றிங்க அக்காங் :-)

நட்புடன்
குணா

வாழ்த்துக்கும் வருகைக்கும் ரொம்ப நன்றிங்க :-)

நட்புடன்
குணா

வாழ்த்துக்கள் குணா’ங்க. :) தொடர்ந்து கலக்குங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நன்றிங்க அக்காங்க :)

நட்புடன்
குணா