ஒரு கடிதம் எழுதினேன்.....

அன்புத் தோழமைகளுக்கு வணக்கம். வலைப்பதிவில் என் முதல் பதிவு சீரியசாக இல்லாமல் கொஞ்சம் சிரிக்க வைக்கும், அட்லீஸ்ட் சிறு புன்னகையையாவது ஏற்படுத்தும் பதிவாக இருக்க வேண்டும் என நினைத்தேன். அதனால்தான் இந்த “பாரடி(Parody)” பாடல் எழுதும் முயற்சி :)
குணா சினிமாவில் இடம்பெற்ற “கண்மணி அன்போடு காதலன்….” பாடல்தான் என் கையில் சிக்கிய ஆடு :)
அறுசுவை பட்டி மன்றங்களில் பக்கம் பக்கமாக வாதாடினாலும் மேடைப்பேச்சு என்றாலே நடுக்கம் ஆரம்பிச்சிடும். அப்படிப்பட்ட ஒருவரை அவரது நண்பர் பட்டிமன்றமேடையில் கலந்து கொள்ள அழைக்கிறார். அவருக்கு பதிலளிக்கும் விதமாக இவர் சொல்ல சொல்ல நண்பரை ஒரு கடிதம் எழுதி தர சொல்கிறார். அதுதான் இந்த “பாரடி(Parody)” பாடலுக்கான சூழ்நிலை.

தோழனே அன்போடு நான் எழுதும் லெட்டர்… சீ.. மடல் இல்ல கடுதாசி வச்சுக்கலாமா…. வேண்டாம் கடிதமே வச்சுக்கலாம்… படி

தோழனே அன்போடு நண்பன் நான் எழுதும் கடிதமே

பாட்டாவே படிச்சிட்டியா? அப்போ நானும், ம் முதல்ல தோழனே சொன்னேல்ல இங்க அன்பனே போட்டுக்க.
அன்பனே உன் வீட்டுல சௌக்கியமா
நான் இங்க சௌக்கியம்

அன்பனே உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே

தலைப்பை நெனச்சி பாக்கும் போது பாய்ன்ட்ஸ் மனசுல அருவி மாதிரி கொட்டுது
ஆனா அத பேசணும்னு நினைச்சா இந்த பேச்சுதான்… வார்த்த….. வெறும் காத்துதான் வருது

தலைப்பை எண்ணிப் பார்க்கையில் பாய்ண்ட்ஸ் கொட்டுது
அதை பேச நினைக்கையில் வார்த்தை முட்டுது..

அதே தான் பிரமாதம் கவிதை படி….

தோழனே அன்போடு நண்பன் நான் எழுதும் கடிதமே
அன்பனே உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே
தலைப்பை எண்ணிப் பார்க்கையில் பாய்ண்ட்ஸ் கொட்டுது
அதை பேச நினைக்கையில் வார்த்தை முட்டுது.. ஓஹோ
தோழனே அன்போடு நண்பன் நான் எழுதும் கடிதமே
அன்பனே உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே

ம்ம்ம், அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல பக்கம் பக்கமா எழுதி படிச்சு வச்சது எல்லாம் மேடையேறினதும் தானா மறந்து போயிடுது.
இதுவும் எழுதிக்கோ நடுவுல நடுவுல அன்பனே நண்பனேன்னு ஏதாவது நீயா போட்டுக்கோ!
எழுதும் போது என்ன தப்பு வந்தாலும் அடிச்சு திருத்திக்கலாம் ஆனால் மேடைப்பேச்சில் அது முடியுமா… முடியாது. ஐயோ ஐயோ… நான் என்ன பண்ணுவேன்
அதையும் எழுதணுமா?
ம்ஹும்.. இது பயம்
என் பயம் என்னன்னு சொல்லாம ஏங்க ஏங்க அழுகையா வருது ஆனா நான் அழுது, என் பயம் உன்னை தாக்கிடுமோ அப்படின்னு நினைக்கும் போது
வர்ற அழுகை கூட நின்னுடுது ஹா! ஹா!
ரசிகர் உணர்ந்து கொள்ள இது எழுத்து விளையாட்டு இல்லை
அதையும் தாண்டி புனிதமானது

மனப்பாடம் செய்த பேச்சு கூட
தன்னாலே மறந்து போகும் மாயம் என்ன என் தோழனே என் தோழனே
என்ன பிழை என்ற போதும் எழுத்தில் திருத்த முடியும்
மேடைப்பேச்சில் அது முடியாது என்பேனே…
எந்தன் பயம் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது
எந்தன் பயம் உன்னைத் தாக்கும் என்றெண்ணும் போது வந்த அழுகை நின்றது
ரசிகர் உணர்ந்து கொள்ள இது எழுத்து விளையாட்டு அல்ல
அதையும் தாண்டி கடினமானது
நண்பனே எனது உயிர் நண்பனே நீதானே தெரியுமா
தோழனே நான் வெறும் காகிதப்புலியே அதுவும் உனக்கு புரியுமா
புலி புலியே வெறும் காகித புலியே
கத்தியே கத்தியே நான் வெறும் அட்டக் கத்தியே….

பின் குறிப்பு: இந்தப் பதிவில் வரும் அட்டக்கத்தி யாருன்னு புரியுதா... அறுசுவையில் குட்டித்தலை ன்னு சொல்லிக்கிட்டு ஒருத்தவங்க சுத்திக்கிட்டு இருக்காங்களே அவங்க இல்லைன்னு சொன்னால் நீங்க நம்பவா போறீங்க :)

Average: 5 (3 votes)

Comments

அன்பு கவிசிவா

தாரை தப்பட்டை எல்லாம் முழங்கட்டும், நம்ம குட்டித் தலை வந்தாச்சு! வந்தாச்சு!

அதுவும் முதல் பதிவிலேயே சிரிக்க சிரிக்க வைச்சுட்டீங்க. சூப்பர்!

அன்புடன்

சீதாலஷ்மி

சிரிப்பு பட்டாசை வரும் போதே கொளுத்திப் போட்டு வெற்றிநடை போட்டு வரும் கவிச் சிங்கமே வருக வருக... நகைச்சுவையில் உங்கள அடிச்சுக்க ஆளு இல்லைப்பா.. எப்புடீ.. இப்படியெல்லாம்..;) சூப்பர். அட்டகத்தி என்றாலும் ஆளை சிரிக்க வைத்தே அசரவைக்கும் கத்தி...:)

வாழ்த்துக்கள் கவி.. தொடரட்டும் உங்கள் நகைச்சுவை...:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

Congrats :-) sonna madhiri mudhal padhivu mudiyala. Super'a irukku kavisiva. Sirippu mathapoda thuvakkam... attagasam . Mudhal padhivu seetha.. periya magizchi enakku.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வித்தியாசமான முயற்சி, ரொம்ப சிரிக்க வைச்சிட்டீங்க :-) வாழ்த்துக்கள்ங்க அக்காங்

நட்புடன்
குணா

கவி சூப்பர் :) படிச்சிட்டு சிரிச்சிட்டே இருந்தேன், ரொம்ப நல்லா நகைச்சுவையா எழுதி இருக்கீங்க. வாழ்த்துக்கள் கவி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கவி படிக்கவே முடியல:) சிரிப்புதான் அதிகமா வருது படிக்கறதுகுள்ள!! வாழ்த்துகள்...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அன்பு சீதாம்மா வரவேற்புக்கு நன்றி நன்றி நன்றி :). தாரை தப்பட்டை எலாம் முழங்கட்டும் படிச்சதும் சிரிச்சுட்டேன். ஹி ஹி வடிவேலு சொல்ற மாதிரியே சொல்லிப் பார்த்தேன்ல அதான் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

என்னாது கவிச் சிங்கமா... இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே நம்மை ரணகளம் பண்ணிடறாங்கப்பா :)
வாழ்த்துக்களுக்கு நன்றி சுமி!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சீதாம்மா முந்திக்கிட்டாங்களா :)

வனியிடம் இருந்து தமிங்கிலப் பதிவா... நம்ப முடியவில்லை இல்லை இல்லை :)

மொபைல் டைப்பிங் னு புரியுது. அதனால கண்டுக்காம விட்டுடறேன் :). ஊக்கமளிக்கும் பின்னூட்டத்திற்கு நன்றி வனி

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி குணா தம்பி'ங் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி அருள். நிஜம்மாவே நகைச்சுவையாத்தான் இருக்கா... எனக்கு டவுட்டாத்தான் பா இருக்கு :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி ரேணு. நீங்களும் சிரிச்சீங்களா சந்தோஷம் பா :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வெல்கம் கவி. நீண்ட நாள்க்கூ அப்பறம் ஒரு சுப்பர் கடிதத்தோட எண்டர்.சிரிப்பு தாங்கள போங்க

Be simple be sample

குட்டித்தலையின் முதல் குட்டி கலாட்டா கலக்கல். :-))

‍- இமா க்றிஸ்

குட்டித்தலையின் குட்டி கலாட்டா வயிறு வலிக்க சிரிக்கவைச்சிடுச்சு சூப்பருங்கோ ஆரம்பமே பட்டைய கிளப்புது :) வாழ்த்துக்கள் தலை :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சூப்பர் பாரடி பாடல் கவிசிவா :-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

நன்றி ரேவ்ஸ். இந்த கடிதத்தை பார்த்துட்டு இனிமேல் யாராச்சும் மேடையில பேச கூப்பிடுவாங்களா என்ன :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி இமாம்மா :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி சுவா! வாழ்த்துக்கள் "குட்டி"த்தலை ன்னு சொல்லோணுமாக்கும். இல்லைன்னா தலை ரசிகர்கள் கும்மிடப் போறாங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி பிந்து :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!