பொங்கல் மினியேச்சர் - 2

தேதி: January 13, 2014

5
Average: 4.3 (4 votes)

 

பானை
கலர் பேப்பர் - பச்சை, வொயிலட், மற்றும் வெள்ளை நிற பேப்பர் ஸ்டிரிப்
மஞ்சள் நிற கிலே
பஞ்சு
க்ளு

 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து கொள்ளவும். வொயிலட் நிற ஏ4 சைஸ் பேப்பரை 4 பிரிவாக பிரித்து கொள்ளவும்.
நான்கு பிரிவாக உள்ள பேப்பரில் ஒரு துண்டின் நுனியில் இருந்து கிராஸாக சுருட்டி ஒட்டவும். கரும்பின் அடிப்பகுதி ரெடி.
அடுத்து பச்சை நிற பேப்பரை, நீளமான புல் போல் வெட்டி வைக்கவும்.
இப்பொழுது கரும்பின் நுனியில் 1 இன்ச் இடைவெளி விட்டு, இலைகளை கீழிலிருந்து மேலாக ஒட்டவும்.
மார்க்கர் கொண்டு சிறு வட்டம் போடவும், கரும்பு ரெடி.
மஞ்சள் நிற க்ளேவை மஞ்சள் போல் வடிவமைக்கவும். கரும்பு செய்தது போலவே முழுவதும் பச்சை நிற பேப்பரில் செய்து க்ளேவின் நடுவே சொருகவும், மஞ்சள் ரெடி.
அடுத்து வெள்ளை நிற பேப்பரை ஸ்டிரிப்பாக கட் செய்து கொள்ளவும், ஸ்டிரிப்பின் இரு நுனிகளையும் L வடிவில் ஒட்டவும். படத்தில் உள்ளது போல் ஒட்டி கொண்டு, முதலில், இடமிருப்பதை வலபக்கமாக மடிக்கவும். பிறகு கீழிருப்பதை மேல் நோக்கி மடிக்கவும்.
மீண்டும் வலபுறத்தில் இருந்து இடபுறம், மேலிருந்து கீழ் இதுபோல் மடித்து கொண்டே வரவும், ஸ்பிரிங்க் போல் வரும், அதே போல் 2 அல்லது 3 செய்து இணைத்து கொள்ளவும்.
ஸ்பிரிங் போல மடித்த பேப்பரை பானைக்குள் வைத்து ஒட்டவும். பானைக்கு வெளியே ஒரு இன்ச் ஆவது பேப்பர் வருமாறு பார்த்து கொள்​ளவும்.
பானையின் வெளியே தெரியும் பேப்பரில் சிறிது க்ளு தடவி, சிறிது பஞ்சை ஒட்டவும். மீதி பஞ்சை தூவினாற் போல் போடவும். விரும்பினால் பொங்கல் வாழ்த்து ஒட்டலாம்.
பானைக்கு ஏற்ற தட்டை வைத்து மூடவும், பஞ்சை கையால் அழுத்தாமல் தட்டை வைத்து முடினால் பஞ்சு தெரியாதது போல இருக்கும், தட்டை நீக்கியவுடன் பஞ்சு மேலே பொங்குவது போல வரும், பொங்கல் ரெடி. எல்லாரும் வரலாம் சாப்பிட:)
பொங்கல் ரெடி:). எல்லாரும் சேர்ந்து சொல்லி கொள்ளுங்கள் பொங்கலோ பொங்கல்!!! அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!!

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

தேன்க் யூ அண்ணா!!

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!!!

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அன்பு ரேணுகா,

பொங்கல் மினியேச்சர் சூப்பராக இருக்கு. அழகு!

அன்புடன்

சீதாலஷ்மி

ரெம்ப நன்றி சீதா அம்மா !! எப்படி இருக்கீங்க? பொங்கல் வாழ்த்துக்கள்!!

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

சூப்பர் ஐடியா ரேணு. :-)

‍- இமா க்றிஸ்

நன்றி இமா,பொங்கல் வைத்து பழகறேன் இப்படி:)

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஹாய் ரேணுகா... பொங்கல் மினியேச்சர் ரொம்ப க்யூட்டா இருக்கு...

கலை

பொங்கல் மினியேச்சர் ரொம்ப அழகாக இருக்கு. பொங்கல் நல் வாழ்த்துக்கல்

கலை, பாலபாரதி உங்கள் கருத்துக்கு நன்றிப்பா!!

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா