கதை கதையாம் காரணமாம்....

புதுமையான பல விசயங்களோட அறுசுவை வந்தாலும் வந்துச்சு எனக்கும் ஏதாவதப் பத்தி எழுதியே ஆகனும்னு மனசுக்குள்ள ரொம்ப ஆசை வந்துடுச்சு. நானும் சோபால படுத்துட்டு, உட்காந்துட்டு, அட நின்னுட்டு கூட யோசிச்சு பார்க்கிறேன், மண்டையில பல்பு எரியவே மாட்டிங்குது... ஏதாச்சும் உள்ளுக்குள்ள இருந்தாத்தானே எரியும்னு நீங்க எல்லாரும் சொல்றது கேட்குது...;) அப்புறம் யோசிச்சு நம்ம தோழீஸ்க்கு கதைகளைப் பத்தி ஒரு கதை சொன்னால் தான் என்னன்னு நினைத்து எழுதியது தான் இந்த கதை கதையாம் காரணமாம்...
இப்ப பொதுவா பார்த்தீங்கன்னா கதை கேட்பது எல்லோருக்குமே பிடித்த ஒன்று. அதிலேயும் குழந்தைகளை எடுத்துகிட்டா அவங்களுக்கு ரொம்ப பிடிச்ச விசயமே கதைன்னு சொல்லலாம், ஆனா இன்னைக்கு இருக்கும் கால ஓட்டத்தில கதை சொல்ல யாருக்கு பொறுமை இருக்கு? பொறுமை இல்லயா இல்ல கதை சொல்ல தெரியாதான்னு எனக்கு நிச்சயமா சொல்ல தெரியல...:)
இந்த காலத்தில எல்லாமே கம்ப்யூட்டரே செய்துடுது... பெத்தவங்க இரண்டு பேரும் வேலைக்கு போறது, தனிக்குடித்தனம், ஒரு குழந்தை, நினைத்தது எல்லாமே கிடைக்கும் வசதி, எல்லாமே இருந்தாலும் குழந்தைகளுக்கு திருப்தியும், மனசில சந்தோசமும் இருக்கான்னு பார்த்தா நிச்சயமா இல்லைன்னு தான் சொல்ல முடியும்.

தாத்தா, பாட்டி கிட்ட கதை கேட்டு வளர்ந்த காலம் எல்லாம் இந்த காலத்தில இல்லை, ஒரு சில பேருக்கு தாத்தா, பாட்டியே இருக்காங்களான்னு தெரியாது..:( ஏனென்றால் அந்த பெரியவங்க இடத்தை இன்னைக்கு டாமும் ஜெரியும், மிஸ்டர் பீனும், மற்ற பிற கார்ட்டூன்களும் திரை போல நிரப்பிடுது...
குழந்தைகளுக்கு இதெல்லாம் தெரியாது, அவங்களுக்கு வெயிலும், மழையும், காற்றும், பனியும் எல்லாமே ஒன்னுதான், பெற்றவர்களாகிய நாம் தான் அவங்களுக்கு எல்லாவற்றுக்கும் உள்ள வித்தியாசத்தை சொல்லி அவர்களின் கற்பனை சக்தியை தட்டி எழுப்பனும். அதுக்கு நம் கையில் இருக்கும் ஒரே சாவி தான் கதை.

கதைகளில் தான் எத்தனை வகை.. கதை சொல்லி வளர்க்கும் போது குழந்தைகளோட கற்பனை சக்தியும், செயல்திறனும் வளரும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடிச்சு இருக்காங்களாம்.

குழந்தையின் கற்பனை சக்தி 2 வயது முதல் 6 வயது வரை எக்ஸ்பிரஸ் வேகத்தில் இருக்குமாம். அதன் பிறகு படிப்படியாக குறைந்து ஒரு குறிப்பிட்ட அளவோடு நின்றுவிடும் என்று சொல்கிறார்கள் நிபுணர்கள்.

இரவு நேரத்தில் அம்மா அல்லது அப்பாவுடன் படுத்துக்கொண்டே ஜாலியாக கதை கேட்பது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான விசயம். ஏன் நமக்கும் அப்படித்தானே? இதை யாராலும் மறுக்க முடியுமா? அப்படிப்பட்ட பொன்னான நேரத்தில் நம் பிள்ளைகளுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடிய நல்ல நீதி உள்ள கதைகளை சொல்லி அவர்களை சந்தோசப்படுத்தலாம்.

கதை கேட்டு உறங்கும் குழந்தைகளுக்கு கனவுகளும் நல்லதாகவே வருமாம். நாம் சொல்லும் கதைகளின் மூலம் நம் குழந்தைகளுக்கு, உதவிசெய்வது, நேர்மையாக இருப்பது எப்படி, தைரியமாக இருப்பது, உண்மை மட்டுமே பேசுவது, தோல்வியை எதிர் கொள்வது, எதிர் நீச்சல், போன்ற அவர்களின் வாழ்க்கைக்கு உதவும் பாடத்தை எளிமையாக மனதில் பதியமிட்டு வைக்க முடியும்.

டிவி, கம்யூட்டர், ஐபோன், ஐபாட், போன்ற தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ள இந்த கால கட்டத்தில் எல்லோர் வீட்டிலும் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையேயான பேச்சு என்பது குறைந்து வருகிறது என்பதை விட சில வீடுகளில் நின்றே போய்விட்டது என்று சொல்லலாம்.

நம் குழந்தைகளுக்கு கதை சொல்வதன் மூலம் நம் குழந்தைப் பருவத்தை, அவர்களிடம் கற்பனை கதைகள் மூலம் பகிர்ந்து கொள்ள முடியும். அது மட்டும் அல்லாமல் குழந்தைகளின் கற்பனை சக்தியை தட்டி எழுப்பி சொந்தமாக கதை சொல்ல சொல்லும் போது அவர்களின் திறமையும் வெளிப்படும்.

மேலும் நாம் அவர்களுடன் நேரம் செலவளிக்கும் போது நம் அக்கறையை அவர்கள் உணர்வார்கள். அவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றாலும் நம்மிடம் கதையிலேயே வெளிப்படுத்துவார்கள், இது நான் என் மகளிடம் அனுபவத்தில் கண்ட உண்மை.

நல்ல கதைகளை தகுந்த ஏற்ற இறக்கங்களுடன் கூறுங்கள். முடிந்தால் மிமிக்ரி வாய்ஸ் மூலம் கூட கதையினை சொல்லலாம். தயவு செய்து அவர்களை காயப்படுத்தும் கதைகளை மறந்தும் சொல்லிவிடாதீர்கள். அந்த காயம் எதிர்மறை விளைவுகளை உருவாக்கும் என்பதை நினைவில் வைத்து கதை சொல்லுங்கள்.

நம் குழந்தைகளுக்கு புராணம், இதிகாசம், காவியம் போன்றவற்றில் இருந்து கதை சொல்வதின் மூலம் நம் தாய்நாட்டின் மேல் ஒரு பற்றுதலையும் இறை நம்பிக்கையையும் நாம் உருவாக்கலாம்.

ஒரு தாய் தன் மகனுக்கு சொன்ன அரிச்சந்திரன் கதை தான் நமக்கு ஒரு தேசப்பிதாவையே உருவாக்கி தந்தது...

நம் பிள்ளைகள் நாளை உலகம் போற்றும் ஒரு உன்னத மகாத்மாகவாக ஆக வேண்டாம், மனித நேயமும், நிம்மதியும், சந்தோசமும் அனுபவிக்கும் ஒரு நல்ல மனிதனாய் உருவாக நாம் சொல்லும் கதைகள் உதவலாம் தானே..
ஒரு குழந்தையை பெற்று வளர்க்கும் செயலில் கதைகளுக்கும் முக்கிய பங்கு உண்டு என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் தானே..
நன்றே செய்.. அதுவும் இன்றே செய்... என்ன உங்கள் பிள்ளைகளுக்கு கதை சொல்ல கிளம்பி விட்டீர்கள்தானே...:)

4
Average: 3.7 (3 votes)

Comments

கதை கதையாம் காரணமாம் மூலமாக குடும்பத்தில் குழந்தைகளுக்கு எவ்வாறு கதைகள்மூலமா க போதிக்கவேண்டுமென்று விளக்கமாகவும் ரொம்ப அருமையாகவும் சொல்லியிருக்கீங்க, நிறைய பயனுள்ள கருத்துக்கள் மிக அருமைங்க :-)
வாழ்த்துக்கள்ங்க

நட்புடன்
குணா

குணாத் தம்பி,முதல் பதிவிற்கு மிகவும் நன்றி :)
மேலும் உங்கள் பாராட்டிற்கும்,வாழ்த்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தம்பி :)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

சுமி சரியா சொன்னீங்க, புராணங்கள், இதிகாசங்கள் எல்லாம் குழந்தைபருவத்திலேயே கற்றறிந்து கொள்ள வேண்டிய ஒன்றுனு, நிச்சயம் நல்ல கதைகளை மனதில் பதிய வைத்தால் குழந்தை பருவத்திலிருந்தே நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக்கொள்வார்கள் என்பதில் மிகையேதுமில்லை :)
வாழ்த்துக்கள் சுமி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

உண்மை தான் அருள், குறிப்பாக வெளிநாட்டு வாழ் தமிழ் மக்களின் குழந்தைகளுக்கு கதைகள் ரொம்பவும் இன்றியமையாதது ..:)
உங்களின் வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றி அருள்....:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

//நானும் சோபால படுத்துட்டு, உட்காந்துட்டு, அட நின்னுட்டு கூட யோசிச்சு பார்க்கிறேன், மண்டையில பல்பு எரியவே மாட்டிங்குது...//

அட! சுமி நீங்களுமா.... :)

வலைப்பதிவை ஜாலியாக உங்களுக்கே உரிய கலாட்டாவுடன் ஆரம்பித்தாலும் மிக முக்கியமான விஷயத்தை பற்றி அழகா சொல்லியிருக்கீங்க சுமி. வாழ்த்துக்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//அட! சுமி நீங்களுமா.... :)// ஒய் ப்ளட் சேம் பிளட் கவி...;)
உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் ரொம்ப நன்றி கவி..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

அன்பு சுமி,

வாழ்த்துக்கள்!

அருமையான விஷயத்தை அழகாக சொல்லியிருக்கீங்க.

கதை கேட்பது எனக்கு எப்பவுமே பிடித்தமான விஷயம். அதோட குழந்தைகளுக்கு கதை சொல்வதும் ரசிச்சு சொல்லுவேன். இப்ப கார்ட்டூன் சானல்களின் ஆதிக்கத்தினால், நானும் சோட்டா பீம், மிஸ்டர் பீன் பத்தியெல்லாம் அப்டேட் பண்ணிக்க வேண்டியிருக்கு.

அதனால என்ன, கதைகளின் உலகத்தில் புது காரக்டர்ளின் வரவு நல்வரவுதானே.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புள்ள சீதாம்மா,
உங்கள் வாழ்த்துக்கும் ,பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...:)
//கதை கேட்பது எனக்கு எப்பவுமே பிடித்தமான விஷயம். அதோட குழந்தைகளுக்கு கதை சொல்வதும் ரசிச்சு சொல்லுவேன். இப்ப கார்ட்டூன் சானல்களின் ஆதிக்கத்தினால், நானும் சோட்டா பீம், மிஸ்டர் பீன் பத்தியெல்லாம் அப்டேட் பண்ணிக்க வேண்டியிருக்கு.// நாம அப்டேட் பண்னிக்கலேன்னா இந்த காலத்து வாண்டுகள் நம்மள அவங்க ஆட்டத்துல இருந்து கெட்அவுட் பண்ணிடுவாங்க தெரியுமா..;)
//கதைகளின் உலகத்தில் புது காரக்டர்ளின் வரவு நல்வரவுதானே.// குழந்தைகள் மத்தியில் தான் அவங்க வரவுக்கு பலத்த வரவேற்ப்பு இருக்குதே சீதாம்மா...:)
உங்கள் பதிவுக்கு மீண்டும் எனது நன்றிகள்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

சுமி அக்கா ரொம்ப அருமையான தலைப்பு க்கா,

கண்டிப்பா இப்ப குழந்தைங்களை TV, MOBILE, COMPUTER இந்த போதையிலேந்து காப்பத்திட்டாலே போதும் ,

அதுக்கு உங்க இந்த வலை பதிவு கொஞ்சம் சிந்திக்க வைக்கும்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

//சுமி அக்கா ரொம்ப அருமையான தலைப்பு க்கா,// ரொம்ப நன்றி சுபி..:)
//கண்டிப்பா இப்ப குழந்தைங்களை TV, MOBILE, COMPUTER இந்த போதையிலேந்து காப்பத்திட்டாலே போதும் ,// உண்மைதான் சுபி, இப்போதெல்லாம் குழந்தைகளுக்கு உண்ணும் உணவை விட இது தான் முக்கியமாகிவிட்டது..:(
உங்க வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சுபி..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

அழகா கதை சொல்லீட்டீங்க, நானும் இதேயே தான் சொல்லுவேன், பல பாவனைகளுடன் கதை சொல்லும் போது நாமே குழந்தையா போயிடறோம், நல்ல பகிர்வு, வாழ்த்துக்கள்

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

உங்கள் வாழ்த்துக்களுக்கும் , பாராட்டுக்கும் மிக்க நன்றி ரேணு..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

//நானும் சோபால படுத்துட்டு, உட்காந்துட்டு, அட நின்னுட்டு கூட யோசிச்சு பார்க்கிறேன், மண்டையில பல்பு எரியவே மாட்டிங்குது... ஏதாச்சும் உள்ளுக்குள்ள இருந்தாத்தானே எரியும்னு நீங்க எல்லாரும் சொல்றது கேட்குது...;)//
என் இனமாடா நீ(ங்க)...;)

இந்த காலத்திற்க்கு ஏற்ற விசயத்தை ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க பா சூப்பர். வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

//என் இனமாடா நீ(ங்க)...;)// அதிலென்ன அம்புட்டு சந்தேகம்..;) எனக்கெல்லாம் பேஸ்மெண்ட் மட்டும் இல்ல பில்டிங்கும் வீக்கு தான்...ஹீ... ஹீ ..ஹீ..;)
//இந்த காலத்திற்க்கு ஏற்ற விசயத்தை ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க பா சூப்பர். வாழ்த்துக்கள் :)// உங்கள் வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் ரொம்ப நன்றி சுவா..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

சாரி சுமி... உங்க ப்ளாகை இதுவரை பார்க்கவில்லை :( தாமதமான பதிவிற்கு மன்னிக்கவும்...

எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயத்தை சொல்லி இருக்கீங்க... நீங்க சொல்லி இருக்கும் ஒவ்வொரு வரியும் நூறு சதவிகித உண்மை...

//நாம் சொல்லும் கதைகளின் மூலம் நம் குழந்தைகளுக்கு, உதவிசெய்வது, நேர்மையாக இருப்பது எப்படி, தைரியமாக இருப்பது, உண்மை மட்டுமே பேசுவது, தோல்வியை எதிர் கொள்வது, எதிர் நீச்சல், போன்ற அவர்களின் வாழ்க்கைக்கு உதவும் பாடத்தை எளிமையாக மனதில் பதியமிட்டு வைக்க முடியும்.//
மிகவும் உண்மை... நானே நேரில் பார்த்து தெரிந்துக் கொண்ட விஷயம் இது :-)
நாம் கோபமாக திட்டியோ அடித்தோ சொல்வதை விட இது போல் கதையாக சொல்லி குழந்தைகளின் தவறை உணரவைத்து அவர்களை திருத்துவது எளிது!
அவர்களின் மனதில் எளிதாக பதிய வைக்கும் முறையும் கூட...

மிகவும் நல்ல பயனுள்ள பதிவு சுமி!

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

//சாரி சுமி... உங்க ப்ளாகை இதுவரை பார்க்கவில்லை :( தாமதமான பதிவிற்கு மன்னிக்கவும்...// மன்னிப்பு எனக்கு பிடிக்காத வார்த்தை...;) தாமதாமானாலும் உங்கள் பதிவுக்கு முதலில் என் நன்றிகள் பிந்து. அப்புறம் இங்க இருக்கும் குளிருக்கு சாரியெல்லாம் வேண்டாம் பிந்து..;) ஒரு ஓவர் கோட் வேணும்னா தாங்க..:)
//எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயத்தை சொல்லி இருக்கீங்க... நீங்க சொல்லி இருக்கும் ஒவ்வொரு வரியும் நூறு சதவிகித உண்மை...// ...:)
//நாம் கோபமாக திட்டியோ அடித்தோ சொல்வதை விட இது போல் கதையாக சொல்லி குழந்தைகளின் தவறை உணரவைத்து அவர்களை திருத்துவது எளிது!
அவர்களின் மனதில் எளிதாக பதிய வைக்கும் முறையும் கூட// முதல்ல என் பொண்ணு குறும்பு செய்தால் என்னோட ஆயுதமே திட்டு தான், ஒரு நாள் என் அப்பா தான் சொன்னார், இப்படி கத்தறத திட்டறத முதல்ல நீ விடு..:(, திட்டினா அந்த சமயத்துக்கு வேணா உன் மகள் உன் சொல்படி கேட்கலாம், நாளைக்கு திருப்பியும் இதே கதை தான்னு, அப்பத் தான் நானே என்னை திருத்திகிட்டேன்,அடிச்சு திருத்தறத விட கதை மூலமா அன்பா சொல்லி திருத்தறது எப்போதுமே எதிர்மறை விளைவுகளை உருவாக்காது அப்படிங்கிறது என் எண்ணம். அது ஒர்கவுட் ஆனது எனக்கு மிகப் பெரிய விசயம் தான்...=D
என்ன நான் தான்குழந்தைகள் புக்ஸ் நிறைய தேடி தேடி படிக்க வேண்டி இருக்கு..;), எதுக்குனு உங்களுக்கே தெரியும் தானே..;)
//மிகவும் நல்ல பயனுள்ள பதிவு சுமி!// உங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும்என் நன்றிகள் பிந்து..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

ரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க சுமி இந்த பதிவு படிச்சத்யும் பழைய நினைவுகள் எல்லாம் வருது நானும் நிறைய கதை கேட்டு இருக்கேங்க எங்க பாட்டிகிட்ட நான் தம்பிங்கலாம் பாட்டிய சுத்தி படுத்துப்போம் அவ்வளோ சுவாரஸ்சியமா சொல்லுவாங்க கதை. அந்த பாக்கியம் நம்ம பிள்ளைகளுக்கு இல்லாம போச்சேன்னு ரொம்ப வறுத்தமா இருக்கும் ஏதோ எனக்கு தெரிந்தவரையில நான் கதை சொல்லிட்டு இருக்கேன்.
கதை கதையாம் காரணமாம் !
காரணத்தில் ஒரு தோரணமாம்
தோரணத்தில் ஒரு துக்கடாவாம்

இதுக்கு மேல தெரிலங்க இப்படி ஒரு பாட்டு கூட இருக்குங்க

உங்கள் பதிவுக்கு ரொம்ப நன்றிங்க..:)
//இந்த பதிவு படிச்சத்யும் பழைய நினைவுகள் எல்லாம் வருது நானும் நிறைய கதை கேட்டு இருக்கேங்க எங்க பாட்டிகிட்ட நான் தம்பிங்கலாம் பாட்டிய சுத்தி படுத்துப்போம் அவ்வளோ சுவாரஸ்சியமா சொல்லுவாங்க கதை.// அட நீங்களுமா... :) எனக்கும் என் அண்ணாவுக்கும் கூட எங்க பாட்டி தான் கதை சொல்லுவாங்க, எனக்கு இராமயணம், மகாபாரதம் பொன்ற இலக்கியங்களை அறிமுகப்படுத்தியதே என் பாட்டி தாங்க...கதை மேல ஒரு பிடிப்பு வர காரணமே என் பாட்டியும் என் அம்மாவும் தான்.
//அந்த பாக்கியம் நம்ம பிள்ளைகளுக்கு இல்லாம போச்சேன்னு ரொம்ப வறுத்தமா இருக்கும்// மறுக்கமுடியாத உண்மை உமா.. அதனால் என்ன நாம நம்ம பிள்ளைகளுக்கு நமக்கு தெரிஞ்ச வரையில் கதை சொல்லுவோம்..:)
//ஏதோ எனக்கு தெரிந்தவரையில நான் கதை சொல்லிட்டு இருக்கேன்// கொஞ்ச நாளில் பாருங்க அவங்க உங்களுக்கு கதை சொல்லுவாங்க..;)
//கதை கதையாம் காரணமாம் !
காரணத்தில் ஒரு தோரணமாம்
தோரணத்தில் ஒரு துக்கடாவாம்// நானும் கேட்டு இருக்கேன் உமா..
உங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மீண்டும் எனது நன்றிகள் உமா..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

//ஒரு ஓவர் கோட் வேணும்னா தாங்க..:)//
சாரிக்கு மேல ஓவர் கோட் போட்டுக்கோங்க சுமி... இரண்டையும் கொடுத்தா போச்சு ;-)

//அடிச்சு திருத்தறத விட கதை மூலமா அன்பா சொல்லி திருத்தறது எப்போதுமே எதிர்மறை விளைவுகளை உருவாக்காது அப்படிங்கிறது என் எண்ணம். அது ஒர்கவுட் ஆனது எனக்கு மிகப் பெரிய விசயம் தான்...=D//
உண்மை சுமி... கோபமாக ரியாக்ட் செய்தால் நமக்கும் கூட மனதினுள் வருத்தமாக இருக்கும்... இது தான் பெஸ்ட் வே...

//என்ன நான் தான்குழந்தைகள் புக்ஸ் நிறைய தேடி தேடி படிக்க வேண்டி இருக்கு..;)//
இதுக்கு தான் படிக்கும் காலத்தில ஒழுங்க படிக்கணும்னு பெரியவங்க சொல்வது :D

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

சூப்பர். உண்மையில் என் தாத்தா இருந்த காலத்தில் அவர் காக்கா, சிங்கம் என எல்லாம் ஃப்ரீ ஹேண்டா வரைவார். வரைந்து அதுக்குலாம் இன்ஸ்டண்ட்டா ஒரு கதையும் சொல்வார். இப்போ உள்ள தாத்தாக்கள் யாரும் அப்போது போல் ஓய்ந்து இருந்து கதை சொல்வதில்லை. டிவி அது இதுன்னு அவங்களே பிசியாகிட்டாங்க. :( அப்பறம் எங்க இருந்து கதை சொல்றது? நானும் இதுவரை சொன்னதில்லை... உங்க பதிவை படிச்ச பின் சொல்ல ஆசை. வாழ்த்துக்கள் சுமி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//இப்போ உள்ள தாத்தாக்கள் யாரும் அப்போது போல் ஓய்ந்து இருந்து கதை சொல்வதில்லை. டிவி அது இதுன்னு அவங்களே பிசியாகிட்டாங்க. :( அப்பறம் எங்க இருந்து கதை சொல்றது? // அது உண்மை தான், இப்போ எல்லாருக்கும் சீரியல் பார்க்கவே நேரம் பத்தறது இல்லை...;)
//நானும் இதுவரை சொன்னதில்லை... உங்க பதிவை படிச்ச பின் சொல்ல ஆசை. // என்ன கதை சொல போறீங்க???
உங்கள் பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் எனது நன்றிகள் வனி..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....